Teachers day- நல்ல போதகர்
லூக்கா 10:25-42
Jesus is Good teacher
லூக்கா 10:25 போதகரே என்பதற்கு Master
1.Teacher
2.Rabi
3.Lord என்று பொருள்படுகிறது
நமக்கு ஒரு நல்ல போதகர் இருக்கிறார் என்றால் அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்பதை உணர முடிகிறது நீதி செய்யும் தேவன் அவர் ஒருவரே இந்த நாளிலும் நமக்கு நல்ல டீச்சர் ஆகவும் போதகராக இருக்கிறார்.
நம்முடைய ஆண்டவரை குறித்து பேசுவதை நான் மகிழ்ச்சி அடைகிறேன் நாம் நம்முடைய தேவனை அறிந்தவர்களாக இருக்க வேண்டும் அவர் நம்முடைய எல்லா காரியங்களுக்கும் முன்னுதாரணமாக இருந்து நமக்கான எல்லாவற்றையும் முன் குறித்து செய்து வைத்திருக்கிறார் அவரே முழு தகுதி உடைய நல்ல போதகர் (Teacher) என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியும்.
இயேசு இரண்டு காரியங்களை இந்த ஆதார வசனங்களிலிருந்து நமக்கு விளக்கி காண்பிக்கிறார்
1. ஒரு நல்ல சகோதரனுக்காக அன்பை வெளிப்படுத்தக்கூடிய சமாரியனை குறித்து அவர் பேசுகிறார்.
2. தேவனுடைய வார்த்தையை கற்றுக் கொள்வதன் மூலமாக ஒருவர் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளவும் அதன் மூலம் நித்தியஜீவனை பெறவும் மரியாளின் மூலம் நமக்கு பாடத்தை கற்றுக் கொடுக்கிறாா்
1.முதலாவதாக நல்ல சமாரியனை குறித்து தேவனுடைய விளக்கத்தை நாம் பார்க்கலாம்
ஆசாரியனும், லேவியனும் துன்பத்தில் இருக்கும் ஒருவனை கைவிட்ட நிலையில் ஒரு நல்ல சமாரியன் அவனுக்கு உதவுவதை நாம் பார்க்க முடிகிறது. தேவன் எதிர்பார்ப்பது பரிசுத்தத்தை மாத்திரமல்ல தேவனுடைய அன்பு நம்மிடத்தில் இருந்து வெளிப்படுகிறதா என்பதுதான்.
அந்த லேவியானவன் தேவனுக்கு பணிவிடை ஊழியம் செய்யக் கூடியவனாக இருப்பினும் வேதத்தைக் கற்று இருந்தும், அவன் தேவனுடைய அன்பை வெளிப்படுத்த முடியாதவன் ஆகவும் தேவனுடைய அன்பை புரிந்து கொள்ளாதவாகவும் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் மற்றொருவனான சமாரியன் வேத வார்த்தைகளை அதிகமாய் அறியாதவன் ஆனால் அவனிடத்தில் தேவனுடைய அன்பு இருப்பதை உணர முடிகிறது தேவன் அவனையே நீதிமானாக பார்க்கிறாா் .
2.மார்த்தாள், மரியாள் இரண்டு பேருமே இயேசுவை வீட்டிற்கு அழைத்து உபசரிக்கிறார்கள் மாத்தால் அவரை ஒரு விருந்தாளியாக உபசரிக்க அதற்கான எல்லா காரியங்களையும் கவனிக்கிறார்.ஆனால் மரியாலோ நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளவும், இரட்சிப்பை அடைய தேவனுடைய பாதத்தில் அமர்ந்து இயேசுவின் வார்த்தைகளை கேட்கிறார்.
மாத்தாலும், மரியாளும் சகோதரிகளாக இருந்தாலும் அவர்களுடைய இரு பார்வைகளையும் தேவன் பார்ப்பதை நம்மால் அறியமுடிகிறது மாத்தால் அவரை ஒரு விருந்தாளியாக மாத்திரமே கவனிக்க விரும்புகிறாள்.மரியால் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள வழியை தேடுகிறாள் நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் இப்படிப்பட்ட காரியங்களை அனுதினமும் வைத்திருக்கிறார் நாம் எதை தேர்ந்தெடுத்து தேவனுடைய வழிகளில் நடக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .
ஒரு நல்ல சமாரியன் ஆகவும்,
ஒரு நல்ல மரியாளைப் போல விசுவாசம் உள்ளவளாகவும், இருக்கவே தேவன் விரும்புகிறார்.
இந்த ஆசிரியர் தின நன்னாளில் கர்த்தருடைய வார்த்தை உங்களை பலப்படுத்துவதாக
ஆமென்
Top notch service and the bonuses are actually usable. I am really enjoying the current promotions over at br2200bet.
Such a refreshing experience! The graphics are great and the customer support is very responsive. Definitely sticking with idpohonemas.
The sports betting options are massive. I love how easy it is to find my favorite leagues and place a bet via betssonapuestas.