https://youtu.be/XoGn5DDeQeo
அவர் தமது ஆத்தும
வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை
நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
ஏசாயா 53:11
என் வசனத்தைக்
கேட்டு, என்னை அனுப்பினவரை
விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு
நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 5:24
இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்,
இயேசு அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். யோவான் 2:19
நானே நல்ல
மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும்,
நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
நான் என்னுடையவைகளை
அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
இந்தத்
தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே
மேய்ப்பனுமாகும்.
நான் என் ஜீவனை மறுபடியும்
அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே
அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம்
உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில்
பெற்றுக்கொண்டேன் என்றார். யோவான் 10:14-19
அடக்கம்பண்ணும்
நாளுக்காக
அப்பொழுது இயேசு:
இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக
இதை வைத்திருந்தாள்.
தரித்திரர்
எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
யோவான்
12:7-8
மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான
வேளை வந்தது.
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன்
மகிமைப்படும்படியான வேளை வந்தது.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை
மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில்
மிகுந்த பலனைக்கொடுக்கும்.
தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த
உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.
தாம் இன்னவிதமான மரணமாய்
மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார். யோவான் 12:23-33
சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள
தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.மத்தேயு
16:16,20-21
அப்பொழுது, தாம்
கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக்
கட்டளையிட்டார்.
அதுமுதல் இயேசு, தாம்
எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும்
வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச்
சொல்லத்தொடங்கினார். மத்தேயு 16:16,20-21
அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து
எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று
கட்டளையிட்டார். மத்தேயு 17:9
அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
அவர்கள் அவரைக்கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார்.
அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள். மத்தேயு 17:22-23
இயேசு எருசலேமுக்குப்போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து:
இதோ, எருசலேமுக்குப்போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும்
ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து,
அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில்
அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிரோடே எழுந்திருப்பார் என்றார். மத்தேயு 20:17-19
அப்படியே, மனுஷகுமாரனும்
ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார். மத்தேயு 20:28
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை
வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று
எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும்
என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். மாற்கு
14:27-28
ஆதார வசனம் ,
ஏசாயா 53:11,யோவான் 5:24,யோவான் 2:19,10:14-19,12:7-8,23-33
மத்தேயு 12:40,16:16,20-21,17:9,22-23,20:17-19,28,மாற்கு 14:27-28
Previous Video in My Youtube channal
கர்த்தருடைய தூதன்-ப.ஏ இயேசு கறிஸ்து
https://youtu.be/HUqdQlTuHSY
தேவனுடைய வார்த்தை
https://youtu.be/Sk_SwxcyUkU
இரட்சிப்பு கர்த்தருடையது
https://youtu.be/iFp2dJecYX4