*ஆவியின் வரங்கள் அல்லது ஆவிக்குரிய வரங்கள்!*
ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், விசுவாசம், குணமாக்கும் வரங்கள், அற்புதங்களைச் செய்யும் சக்தி, தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளைப் பகுத்தறிதல், பற்பல பாஷைகளைப் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல் ஆகியவை ஆவியின் வரங்கள் அல்லது ஆவிக்குரிய வரங்களாகும். (1கொரி.12:1,8-10)
*அறிந்திருக்கவேண்டிய ஆவிக்குரிய வரங்கள்!*
“அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை” என்று பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது.
(1 கொரி.12:1)
உத்தரவாதமுள்ள உத்தம ஊழியர் எவரும் தன்னால் நடத்தப்படுகிற மக்கள் ஆவிக்குரிய வரங்களைக்குறித்து அறியவேண்டும் என்று விரும்புகிறார்.
“முக்கியமான வரங்களை நாடுங்கள். இன்னும் அதிக மேன்மையான வழியை உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்று அவர் சபையாரை உற்சாகப்படுத்துகிறார். (1 கொரி.12:31)
“அன்பை நாடுங்கள். ஞானவரங்களையும் விரும்புங்கள். விஷேசமாய்த் தீர்க்கதரிசனவரத்தை விரும்புங்கள்” என்று வரங்களைப் பெற்றுக்கொள்ள சபையாரை வழிநடத்துகிறார். (1 கொரி.14:1)
ஆவிக்குரிய வரங்களை விசுவாசிகள் அறியாதபடிக்கு ஆதிசபை ஊழியர்கள் மறைத்துவைத்திருந்தால், பந்திவிசாரணை செய்த விசுவாசிகளில் ஒருவனான ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்திருக்கமுடியாது! (அப்.6:8)
பந்திவிசாரணைக்காரரில் மற்றொரு விசுவாசியான பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப்போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கிதிருக்கமுடியாது,
அதிசயங்களை செய்திருக்கமுடியாது, அநேகரிலிருந்து அசுத்தஆவிகளை துரத்தியிருக்கமுடியாது, அநேகந் திமிர்வாதக்காரரையும் சப்பாணிகளையும் குணமாக்கியிருக்குடியாது! (அப்.8:5-7)
தான் ஆதாயம்பண்ணின மக்களுக்கு தானே ஞானஸ்நானம் கொடுக்க ஒரு விசுவாசியை ஆதிஅப்போஸ்தலரால் அனுமதிக்கமுடிந்தது! (அப்.8:8-13)
வருங்காலத்தில் மூன்று கண்டங்களில் சபையை ஸ்தாபிக்கப்போகும் மாபெரும் அப்போஸ்தலன் பவுலுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவும், அவனை ஆவியின் அபிஷேகத்திற்குள் நடத்தவும், அனனியா என்கிற ஒரு விசுவாசியை தேவன் பயன்படுத்தியதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடிந்தது! (அப்.9:10-18; 22:12-14)
தான் கர்த்தருக்குள் நடத்தின . கொர்நேலியுவின் வீட்டாருக்கும், அவனுடைய உறவின்முறையாருக்கும், விசேஷித்த சிநேதிதரான VIPகளுக்கும் தன்னுடன் வந்த விசுவாசிகளைக் கொண்டு பேதுருவால் ஞானஸ்நானம் கொடுக்கமுடிந்தது!
(அப்.10:24,45-48)
ஆதிசபை ஊழியரின் இருதயத்தை உடைய ஊழியர்கள் இன்று பெருகினால், ஆவியின் அத்தனை வரங்களையும் பெற்று, ஆண்டவருக்காய் அரும்பெரும் காரியங்களைச் செய்யும் விசுவாசிகள் இன்று பெருகுவார்கள்!
*ஆவிக்குரிய வரங்களின் நோக்கம்?*
ஆவிக்குரிய வரங்களைப் பட்டியலிட்டுக் காண்பிக்கிறதற்கு முன்பு, “ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” என்று அதன் நோக்கத்தை கொரிந்து சபையாருக்கு தெளிவுபடுத்துகிறார் பவுல். (1 கொரி.12:7)
“அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று” என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பது சரியல்ல.
*”பொது நன்மைக்காகவே* தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது” என்கிற திருவிவிலிய மொழிபெயர்ப்பே சரியானது.
ஆங்கில வேதாகமங்களில் இவ்வாறே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
But the manifestation of the Spirit is given *to every man to profit withal.* (KJV)
ஆனால் ஆவியின் வெளிப்பாடு *ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மைக்காகக்* கொடுக்கப்படுகிறது.
To each person has been given the ability to manifest the Spirit *for the common good.* (ISV)
ஒவ்வொரு நபருக்கும் *பொது நன்மைக்காக* ஆவியை வெளிப்படுத்தும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
But to each one is given the manifestation of the Spirit *for the profit of all.* (NHEB)
ஆனால் *அனைவரின் நன்மைக்காக* ஒவ்வொருவருக்கும் ஆவியின் வெளிப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.
God’s Spirit gives his power to each believer *in order to benefit all the other believers.* (T4T)
*மற்ற எல்லா விசுவாசிகளுக்கும் நன்மை செய்வதற்காக* தேவ ஆவி ஒவ்வொரு விசுவாசிக்கும் அவருடைய வல்லமையைக் கொடுக்கிறார்.
To each is given the manifestation of the Spirit *for the common good.* (RSV)
ஒவ்வொருவருக்கும் *பொது நன்மைக்காக* ஆவியின் வெளிப்பாடு வழங்கப்படுகிறது.
(1 கொரி.12:7)
“நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், *சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக* அவைகளில் தேறும்படி நாடுங்கள்” என்று பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது.
(1 கொரி.14:12)
*”அவனவன் பெற்ற வரத்தின்படியே* நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, *ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.* ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன். *எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக.* அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்” என்று பேதுரு சொல்லுகிறதையும் கவனியுங்கள். (1 பேதுரு 4:10,11)
ஆவியானவர் தங்களுக்குக் கொடுக்கும் வரத்தை ஒவ்வொருவரும் தனது பக்திவிருத்திக்காக மட்டுமல்லாமல் சபையாரின் பக்திவிருத்திக்காகவும், பிறரின் நன்மைக்காகவும், தேவனுடைய மகிமைக்காகவும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்!
Ever six page change take the serial number
*ஆவிக்குரிய வரங்களை சுயநலத்திற்காக பயன்படுத்தலாமா?*
“அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்” என்கிறார் பவுல். (1 கொரி.14:4)
தனது பக்திவிருத்திக்காக ஒருவர் ஆவிக்குரிய வரத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார். ஆனால், அதை தனது சுய (பொருளாதார) லாபத்திற்காகவும் சுய மகிமைக்காகவும் பயன்படுத்திக்கொள்ள எவருக்கும் அனுமதியில்லை.
“ஆவியினுடைய அநுக்கிரகம் *அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது”* என்பதை நமது சுய (பொருளாதார) லாபத்திற்காகவும், சுய மகிமைக்காகவும் அளிக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளக்கூடாது!
“அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” என்பது தவறான மொழியாக்கம் என்பதையும், “அனைவரின் நன்மைக்காக ஒவ்வொருவருக்கும் ஆவியின் வரம் கொடுக்கப்பட்டுள்ளது” என்பதே சரியான மொழியாக்கம் என்பதையும் நாம் பல ஆங்கில வேதாகமங்களின் அடிப்படையில் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.
பிறவிசப்பாணி குணமாக்கப்பட்டதினிமித்தம் பிரமித்து, தன்னிடமும் யோவானிடமும் ஓடிவந்த ஜனங்களை நோக்கி: “இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? *நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன?*
இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே *அவருடைய நாமமே* நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது. *அவரால் உண்டாகிய விசுவாசமே* உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது” என்று பேதுரு தங்களை மறைத்து, ஆண்டவரை மகிமைப்படுத்தினதை (அப்.3:11,12,16), இன்று அற்புத அடையாளங்களைச் செய்கிறவர்கள் கவனிக்கவேண்டும்!
*– க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்புத்தூர்.
8946050920
(தொடரும்…..)