Part-2
4. உறவுகளில் ஒழுங்கும் கீழ்ப்படிதலும்
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே உள்ள சரியான உறவுமுறை ஆசீர்வாதத்தைத் தக்கவைக்க உதவுகிறது.
* எபேசியர் 6:1-3 –
1.பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். 2.உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே வாழ்நாள் நீடித்திருப்பதற்கும்,
3.உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.” எபேசியர் 6:1-3 –
* கொலோசெயர் 3:18-21 –
18.மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
19.புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்.
20.பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.
21.பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.
5. ஒருமனப்பாடும் ஆசீர்வாதமும்
எங்கே ஒருமனம் இருக்கிறதோ, அங்கே தேவன் ஆசீர்வாதத்தைக் கட்டளையிடுகிறார்.
குடும்ப ஆசீர்வாதத்தின் தூண்கள்
| ஆசீர்வாதத்தின் வகை | வேத வசனம் | முக்கிய கருத்து |
| பாதுகாப்பு | எண்ணாகமம் 6:24-26 | கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து உன்னைக் காப்பாராக. |
| பொருளாதார உயர்வு | உபாகமம் 28:2-6 | நீ வீட்டிலும் வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உபாகமம் 28:2-6 |
| சந்ததி ஆசீர்வாதம் | ஏசாயா 44:3 | உன் சந்ததியின்மேல் என் ஆவியையும் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். |
| சமாதானம் | ஏசாயா 54:13 | உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். |
சிறு குறிப்பு:
ஆசீர்வாதம் என்பது நாம் கடவுளுக்குக் காட்டும் கீழ்ப்படிதலின் விளைவாகும். உபாகமம் 28-ம் அதிகாரத்தின் முதல் 14 வசனங்கள், ஒரு குடும்பம் எவ்விதமெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்பதை மிக விரிவாகக் கூறுகின்றன.
எ.கா.
தேவனுக்கு கீழ்படியாமல் போனதினால் நிமித்தம்
1.ஆபிரகாம் தேவன் ஈசாக்கை வாக்குத்தத்தம் செய்து இருந்தார் ஆனால் அவனை சாராவின் பேச்சைக் கேட்டு ஆகாரம் மணந்து குடும்பத்துக்குள் பிரிவினை ஏற்பட்டு ஆகாரே வீட்டை விட்டு துரத்தும் நிலைக்கு தள்ளப்பட்டான்.
2. லோத்து ஆபிரகாமோடு இருந்தபோது ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருந்தால் அவன் கண்களில் நிச்சயிப்படி நடந்த போது தன் குடும்பத்தை இழந்து ஆசீர்வாதத்தை இழந்து தேவனை விட்டு விலகினவனாக மாறிப்போனது அவனுடைய சந்ததி
3. யாக்கோபு சிறு வயதிலேயே தேவன் வாக்குத்தத்தம் செய்து இருந்தால் ஆனால் தன் தாயின் பேச்சைக் கேட்டு தன் தந்தையிடம் துரோகம் செய்து சேஷ்ட புத்திர பாகத்தை வாங்கினத்தின் நிமித்தமாய் தன் குடும்பத்தை விட்டு பிரிந்தான். சமாதானத்தை இழந்தான் அதேபோல் தன் மாமனாரால் ஏமாற்றப்பட்டார். இவர்கள் எல்லோருமே தேவன் வழிகளை விட்டு விலகி அவர்கள் சமாதானத்தையும் குடும்ப உறவுகளையும் பிரிந்து வருத்தத்தின் பலனை புசிக்கிறவர்களாக மாறினார்கள்.
தொடரும்…….
Bro M.JAYARAJ, 07-04-2026