தேவனுடைய  மகிமையை குறித்து நாம் பார்த்து வருகிறோம் சங்கீதம் 16:8-9

விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்

விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்

விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்தசமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக், கடந்துபோனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள். எபிரேயர்11:27-29

மோசே விசுவாசத்தினால்  பார்வோனுடைய மகனாக வளர்ந்து இருந்தும்.  தேவன் மேல் வைத்த விசுவாசத்தினாலே அவன் எகிப்தை விட்டு போனான் என்று பார்க்கிறோம். இஸ்ரவேல் முழு ஜனமும் விசுவாசத்தினாலே தேவன் சொன்ன  பஸ்காவை ஆதரித்தார்கள் இஸ்ரவேலின் முதல் தலைச்சம் பிள்ளைகள் எல்லோரும் தேவனால் பாதுகாக்கப் பட்டார்கள். ஆனால் பார்வோனின் பிள்ளைகளும் எகிப்தில் உள்ள மற்ற முதல் பிள்ளைகள் சங்காரம் பன்னப்பட்டார்கள்  இவைகள் எல்லாமே தேவனுடைய மகிமையை காணும் படியாகவும் ஒரே சமயத்தில் இரண்டு விதமான சம்பவங்களை  ஒரே ஊரில் செய்யத் தக்கதான அற்புதங்களை, அடையாளங்களையும் தேவன் செய்து காண்பித்தார்.

செங்கடலை இஸ்ரவேல் ஜனங்களும் கடந்து வந்தார்கள் அவர்களின் பின்னாலே பார்வோனுடைய சேனையும் கடந்து வந்தது .ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் மட்டுமே காப்பாற்றப்பட்டு கரை ஏறினார்கள்.

பார்வோனின் சேனையும் சமூகத்தில் அழிந்துபோனது தேவனை பார்வோனை உயர்த்தினது எல்லா தேசங்களுக்கும் அதிகாரிகளை  வைத்து கூட அவனை காட்டிலும் தேவன் பெரியவர் என்பதை காண்பிப்பதற்காக தான் தேவன் அவ்வாறு செய்தார்.

இவை தேவனுடைய மகிமையை எல்லா தேச மக்களும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே தேவன் இப்படிப்பட்ட காரியங்களை செய்து இருந்தார் என்று நம்மால் பார்க்க முடிகிறது.

மற்றவர்கள் தேவனை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தேவனுடைய மகிமையை  ஒரு நாளும் எடுக்க முடியாது அவர் நித்திய நித்தியமாக ஜீவிக்கிறவராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் நாம் அநேகருக்கு சுவிசேஷத்தை அறிவிக்கிறோம் ஒரு சிலர் ஏற்றுக் கொள்கிறார்கள் ஒரு சிலர் மருததளிக்கிறார்.அவர்கள் எற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளலாவிட்டாலும் தேவன் மாறாதவர் அவர் வார்த்தை  மாறாதவர் அவருடைய மகிமை என்றென்றும் மாறாதவைகள். 

 2. அதிகாரம் 33 :17-19 வாசிக்கவும்

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:14

நம் வாழ்வின் செயல்கள் தேவனை மகிமைப்படுத்தும் படியாக இருக்க வேண்டும்     

ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச்சொல்லுங்கள்

கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே

சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனேகர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்

1 நாளாகமம் 16:24-27

ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்குஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகியகர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர் 1 நாளாகமம்  29:10-11

தேவனுடைய மகிமைக்கான சில ஆதரவசனங்கள் 

சங்கீதம் 25:7-10 ,யோவான் 11:39-40 ,பிலிப்பு 1:20  1 நாளாகமம் 16:28-29 யூதா 1:24-25 சங்கீதம் 19:1ரோமர் 1:19-21 சங்கீதம் 100  ரோமர் 11:36 நீதிமொழிகள் 16:4 யாத்திராகமம்14:17  ஏசாயா 43:21  1 பேதுரு 2:9 எரேமியா 13:15-18

 

தேவன் என்று அறிந்தும் தேவனை மகிமைப் படுத்தாமல் இருந்தால் அவர்கள் ஆக்கினை  தீர்ப்பிற்கு உட்படுவார்கள்.


சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.ரோமர் 1:18

மத்தேயு 25 14-30-வாசிக்கவும் 

1. தேவனுக்குரிய  காரியங்களில்  கனமும் மகிமையும் எல்லாம் அவர் ஒருவருக்கே தானே தவிர மனிதர்களை சந்தோஷப் படுத்துவதற்காக நம்முடைய நடவடிக்கைகள் இருக்கக்கூடாது.

2. அத்திமரம் தன்னுடைய கணியை குறித்த காலத்தில் கொடுக்க வேண்டும் அப்படி கொடுக்கவில்லை என்றால் தேவன் வந்தபோது அதை சபித்தார் என்று நாம்  பார்க்கிறோம்.மனிதர்களும் அதேபோலதான் எந்த காரணத்திற்காக தேவன் நம்மை இரட்சித்து இந்த பூமியிலே வெளிச்சமாய் வைத்திருக்கிறார். 

அவர் மீண்டும் வரும் போது நாம் கனி கொடுக்க கூடியவர்களாக  உண்மையுள்ள உக்கிராணக்காரன் ஆக இருக்கிறோமா என்று அவர் அறிவார் 

அத்தி மரத்திற்கு நேரிட்ட அப்படிப்பட்ட காரியங்கள் நம்முடைய  வாழ்க்கையில் ஏற்படாமலிருக்க நாம் தேவனை சார்ந்தவர்களாக வாழ வேண்டும்.

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.யோவான் 15:4

நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். யோவான் 15:8

ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார். சங்கீதம் 50 :23

 இதுவரை தேவன் செய்த எல்லா காரியங்களையும் பழைய பாட்டில் இருந்து நான் படித்து அறிந்து கொண்டேன் இனி வரக்கூடிய செய்தியை புதிய ஏற்பாட்டிலிருந்து பார்ப்போம். 

அப்போஸ்தலன் பவுல்  எல்லா சூழ்நிலையிலும் மனரம்மியமாக வாழக்கற்றுகொண்டார்.    

2 கொரிந்தியர் 11: 23-31 

எல்லா சூழ்நிலையிலும் தேவனுக்கு உண்மையாய் வாழ்கிறோமா அப்படி நாம் வாழ்கிறோம் என்றால் நம் வாழ்வில் சமாதானம் இருக்கும் .

சமாதானமும் சந்தோஷமும் தேவன் கொண்டுக்கும்  போது அது நம் வாழ்க்கையில் மகிமையை கொண்டு வரும் பவுல் எல்லா சூழ்நிலையிலும் மன ரம்யமாக வாழ கற்றுக் கொண்டேன் சொல்வதைப் பார்க்கிறோம். நம்மால்  அப்பாடி வாழமுடிகிறதா ? 

ஏனென்றால் நாம் இருப்பதும் பாதுகாப்பதும் எல்லாமே தேவனுடைய கிருபையின் அடிப்படையிலே நடைபெறுகிறது .நாம் தேவனை தெரிந்துகொள்ளவில்லை தேவன் தான் நம்மை தெரிந்து கொண்டார். இரட்சித்தார் நம்முடைய பாவத்தை அவருடைய இரத்தத்தினால் கழுவி நம்மளை மீட்டெடுத்து நீதிமானாய் மாற்றினார்.

தேவன் நமக்கு மூன்று  காரியங்கள் செய்வதை நம்மால் உணரமுடியும் 1.நீதினாமாக படுதல் 

2.பரிசுத்தமாக்க படுதல்

3.மகிமைப்படுத்த படுதல் 

நாம் எல்லா சூழ்நிலையிலும் நீதினாமாக படுதல் குறித்து பேசுவோம் மகிமைப்படுத்த படுதல் குறித்து பேசுவோம் ஆனால் பரிசுத்தமாக படுதலை தேவன் நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் செய்து கொண்டே இருக்கிறார். அதை நான் பார்க்க மறந்துவிடுகிறோம்.

ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள்.1 பேதுரு 1: 13

 

நம்மை  பரிசுத்தப்படுத்தி நித்திய ஜீவனுக்கு நேராய் நடத்துவது தேவனுடைய திட்டமாய் இருக்கிறது. அதற்காக அவர் ஒவ்வொரு நாளும் நம்மை பரிசுத்தப்படுத்தி கொண்டே இருக்கிறார். இது நாம் மரிக்கும் வரை தேவன் நமக்காக செய்துகொண்டே இருக்கிறார் ஏனெனில் அவர் மகிமையிலே வெளிப்படும்போது அவரைப்போல நாமும் மறுரூபம் ஆக்கப்படுவோம் அந்த மகிமையோடு நம்மை சேர்த்துக் கொள்ளவும் தேவன் நம்மை தகுதி படுத்துகிறார்

 அதை அறிந்து தெளிந்த புத்தி உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும்  புசித்தாலும் குடித்தாலும் அது தேவனுடைய மகிமைக்காக இருக்கவேண்டும்.  பழைய இச்சைக்ளின்   படி நடக்காமல் அவற்றை விட்டுவிட வேண்டும் 

நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,

1 பேதுரு 1:14 

பாவத்திற்கான தூண்டுதல்கள் சிந்தனையில் உள்ளது  பாவத்தில் விடாதபடிக்கு நாம் நடந்துகொள்ள வேண்டும் ஏனென்றால் ஒரு மனிதனின் பாவத்திற்கான முதல்படி அவனுடைய சிந்தனை,அந்த சிந்தனை அவனை யோசிக்க வைத்து அவன் அதை சரீரப் பிரகாரமான செய்ய வைத்து பாவத்தில் விழ வைக்கிறது.

தேவன் பட்சபாதம் இல்லாதவர் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தன்னுடைய அன்பை  பொழி யவைக்கிறார் செய்கிறவர் நாம் அதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும் அவர் மேல் பூரண நம்பிக்கை வைக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்து வெளிப்படும்போது இவைகள் நமக்கு மிகவும் அவசியம் 1 பேதுரு 1:13,    

நித்திய ஜீவனுக்காக அவர் நம்மை பலப்படுத்தி 
ஸ்திரப்படுத்தி  நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறார்.


கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; 1பேதுரு 5:10

 கிறிஸ்துவின் வருகையில் நாம் அவரோடு பிரவேசிக்க விசுவாசத்திலே நிலை கொண்டிருக்க வேண்டும் தேவ மகிமையை அடையப் போகிறோம் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்க வேண்டும்

அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.    ரோமர் 5:2


ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,

நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,

நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. தீத்து 2:11-13


 

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;ரோமர் 8:28-29 

 இந்த வசனம் பொதுவாக எல்லோருக்கும் கிடையாது பிதா யாரை முன் குறித்தாறோ , அவர்களைத்தான் குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மாற்றுவார் ஏனென்றால் நம்முடைய விசுவாசம் இயேசு ஒரு நாள் வருவார் அவரோடு நம்மை சேர்த்துக் கொள்வார் என்பது தான்.

இயேசுவின்  யோசனை சிந்தனைகளை நாம் அறிந்தோமானால்  யாருக்கு நாம்  மகிமையை செலுத்த வேண்டுமென்று நாம் அறிந்தவர்களாக இருப்போம்  அவருடைய வருகையில்  அவருடைய  அனாதி தீர்மானத்தின்படி குமாரன்  நம்மை மீட் எடுப்பார். 

நாம் இயேசுவின் மீது விசுவாசம் வைக்கவேண்டும் என்று எபிரேயர் நிருபத்தில் சொல்லப்பட்டிருக்கிறது அப்படி இருப்பவர்கள் பரிசுத்தமாக படுகின்றனர் பரிபூரணமாக பட்டவர்களாக இருப்பார்கள்.

ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;

அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். எபிரேயர் 12:1-3,6


கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். எபிரேயர் 12:6

மத்தேயு25:21

அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dear in Christ,

Please fill the form and look into the Website…

Please enable JavaScript in your browser to complete this form.
Name