Glory of God மகிமை Part-3

தேவனை அறிகிற அறிவில் நாம் வளர்ந்திருக்கவேண்டும் 


10. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.நீதிமொழிகள் 9:10

நீதிமொழிகள் 9:10 அவர் சொல்லியிருக்கிறார் தேவனை அறிகிற அறிவுநாம் தேவனை ஆராதிக்கும் வேண்டுதல் எல்லாவற்றறையும்  தேவன் ஏற்றுக் கொள்ள மாட்டார். சமாரியா ஸ்திரீ இடத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பேசும்போது நீங்கள் அறியாதவற்றை தொழுது கொள்கிறீர்கள் நாங்கள் அறிந்து கொண்டதை தொழுது கொள்கிறோம் என்று பேசுகிறார். 


யோவான் 4:20 எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.

யோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. யோவான் 4:22

எனவே தேவன் எல்லாவற்றையும் எல்லா ஆராதனைகளையும்   ஏற்றுக்கொள்ள மாட்டார் .தேவனை அறிந்து அவருடைய மகிமைக்கு பாத்திரரே இருக்கிற ஆராதனை மட்டுமே தேவன் அங்கீகரிக்க கூடியவராக இருக்கிறார்.எனவே தான் பல வேளைகளில் நம்முடையே ஜெபம் கேட்கபடு வதில்லை.

கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது.

உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய். உபாகமம் 4: 35- 36

ஜனங்கள் ஞானவான்களாக  இருக்கவேண்டும்  தேவனுடைய வார்த்தை,  தேவனைக் குறித்த அறிவு மக்களுக்கு இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். அவர்கள் கற்றுக் கொள்கிற தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக தான் ஜனங்கள் ஞானவான்கள் ஆக இந்த பூமியிலே நீதி உள்ளவர்களாக வாழ முடியும்,எண்டு வேவன் விரும்பினார் .

அதை தேவனை வெளிப்படுத்தி காண்பித்து இருந்தார் ஒருவன் தேவனுடைய வார்த்தையை அறியாதவனாய் இருந்தால் அவன் ஞான உடையவனாய் இருக்கமாட்டான். 


நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்திலே நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.

ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.உபாகமம் 4: 5-6

ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்

மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர்சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் எரேமியா 9: 23- 24

நாம் மேன்மை இல்லாதவர்களாக  இருக்க வேண்டும் அதற்கு ஞானம் பராக்கிரமம், ஐஸ்வர்யம் இந்த மூன்று குறித்ததான மேன்மை மனிதனுக்கு இருக்கக்கூடாது.

அதே போல்  மூன்று விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து மேன்மை பாராட்ட வேண்டும் கிருபை, நியாயம், தேவருடைய  நீதி 


நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 24 :7

நானே கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு அவர்களுக்கு இருதயத்தை கொடுப்பேன் என்று தேவனை பேசி இருக்கிறார் எனவே தேவனைக் குறித்த அறிகிற ஞானமும் அறிவையும் அவர்கள் சுயமாய் தேடி அடைய முடியாது. தேவனே அவர்களுக்கு அதற்கான இருதயத்தை கொடுத்திருக்கிறார் எப்படி எனில் நீ உண்மையான தேவனை தொழுது கொள்ளாமல் உன்னுடைய சொந்த முயற்சியில்  உன்னுடைய ஞானத்தைக் கொண்டு நீ செய்ய தான பொன் வெள்ளி இவற்றை கொண்டு உருவாக்குக தெய்வங்களில் அவர் இருப்பதில்லை அவர் மனிதனுடைய ஞானத்தினால் தோன்றக்கூடியவர் அல்ல. 

நாம் தேவனுடைய சந்ததியாயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையிலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது.

அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.அப்போஸ்தலர் 17 :29- 30 

தேவனை குறித்த அறிவு மனிதனுக்கு எப்போது தோன்றும் என்றால் அவன்  நீதியைக் குறித்தும், நியாயத் குறித்தும்,மரணத்தைக் குறித்தும்,  உயிர்த்தெழுதலை குறித்தும், விசுவாசத்தை குறித்தும் தேவன் அவனுக்கு கொடுக்கும் போது தான்  அவன் தேவனை அறிகிற இருதயத்தை பெற்றவனாய் இருப்பான். 

மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள் அப்போஸ்தல 17: 31-32

தேவனுடைய சுபாவத்தையும் நீ அறிவிக்கும் போது  சூழ்நிலையைப் பொருத்து மக்களின் மனநிலையை பொறுத்து  நம்முடைய செய்திகள் இருக்கக்கூடாது. தேவன் தன்னை எப்படி வெளிப்படுத்தி இருக்கிறாரோ  அவரை அப்படியே  வெளிப்படுத்தி சொல்ல வேண்டும்.

அப்போஸ்தலனாகிய பவுல் பேசும்போது சொல்றார் வேறு ஒரு கிறிஸ்து வேறொரு சுவிசேஷம் இல்லையே அப்போ நாம எந்த கிறிஸ்துவை மக்களுக்கு அடையாளம் காட்டுகிறோம் என்று அறிந்து கொள்வது மிகவும் அவசியம் நாம் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும்  கிறிஸ்துவை மாத்திரமே மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமே தவிர வேறொரு கிறிஸ்துவை நாம் அறிமுகம் செய்து விசுவாசத்திலே வளர்க்கக் கூடாது. 


சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது

அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேனென்று எழுதியிருக்கிறது.

ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?

எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று

யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்;

நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்         1 கொரிந்தியர் 1:18 -21, 23

சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.

இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்

அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன்.

உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு

என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது 1 கொரிந்தியர் 2:1-4,5

தேவனின் அன்பு, தேவனின் அறிவு, நீதி, மரணம், உயிர்த்தெழுதல் இவற்றைப்பற்றி பேசினாரே தவிர அவருடைய ஞானத்தை வெளிப்படுத்தும் படியான பேசவில்லை தன்னை உயர்த்தி பேசவில்லை எனவேதான்  சபையில்  இரசிக்கப்பட்டு  அநேகர் சபையில் சேர்க்கப்பட்டார்கள். அப்போஸ்தல உபதேசங்கள் அப்படிப்பட்டவைகளாக  இருந்தது அவர்கள் இயேசுவை மாத்திரமே உபதேசித்து சுவிசேஷத்தை பூமியெங்கும் கொண்டுசென்றார்கள். அப்படிப்பட்டவர்களின்  உபதேசம் தேவனுடைய ஆவியினாலும்  உறுதி செய்யப்பட்டவர்கலாய்   இருந்தது  அவர்கள் ஒரே விசுவாசம், ஒரே பிரசங்கம், ஒரே இயேசு  என்று எல்லாவற்றிலும் ஒருமணப்படடவர்களாய்  இருந்தார்கள் அந்நாட்களில் சபையும் பெருகியது. 

கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது 1 கொரிந்தியர் 1: 2 


தேவனை குறித்ததான சரியான அறிவு சத்தியத்தை அறியும் அறிவில் வந்தால்தான்  ஒரு மனிதன் இரட்சிக்கப்பட முடியும் அது மிகவும் அவசியம் எனவே தேவனை அறிகிற போதும் ,

தேவனை குறித்து மற்றவர்களுக்கு  சொல்லிக் கொடுக்கும் போதும் தேவனுடைய   உண்மையான சுபாவத்தையும் தேவனுடைய பண்புகளையும் வெளிப்படுத்தி சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம்

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1தீமோத் 2:4

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dear in Christ,

Please fill the form and look into the Website…

Please enable JavaScript in your browser to complete this form.
Name