இயேசு மனிதனாக பிறந்திருந்து இருந்தும் அவருக்கு இரு சுபாவங்கள் இருந்தன,தெய்வத்தன்மையும் ,மனிதத்தன்மையும் இருந்தாலும் அவர் இந்த பூமியிலே வாழும் போது அவருக்குள் இரு சுபாவம் இருந்தது.
வேதாகமத்தில் பல இடங்களில் நம்மால் பார்க்க முடியும்
பிலிப்பியர் 2 :5-11 அடிமையின் கோலம் எடுத்து மனுஷ சாயலாக பூமியில் வாழ்ந்தார் என்று நாம் பார்க்க முடிகிறது .
அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர் 2 :6-11
மனிதனாக இந்த பூமியிலே தோன்றினாலும் அவர் தெய்வீகத்தன்மையை இருந்ததை நிறைய இடங்களில் அவர் தேவனாக பேசுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது .
பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.யோவான் 17:5
பிதாவாகிய தேவனிடம் இயேசு பேசும்போது உலகம் உண்டானது முதற்கொண்டு நீர் எனக்கு தந்த மகிமையை என்று பேசுவதை நாம் பார்க்க முடிகிறது.
அந்த மகிமை பிதாவுக்கு நிகரான மகிமையை அவர் பெற்றிருந்தார். என்பதை இந்த வசனங்கள் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும்.
லாசரு மரித்ததை குறித்து நாம் வாசிக்கையில் லாசரு இறந்த பின் நான்கு நாள் கழித்து தான் இயேசு வருகிறார். அவர் இறப்பதை முன்கூட்டியே இயேசு அறிந்திருந்தும் .அவர் மரித்தது குறித்து நிதானமாகவே செயல்படுவதையும். மனிதனுடைய பாவத்தையும் அதனுடைய விளைவையும் குறித்து அவர் துக்கம் கொண்டார். அதன் விளைவாகவே கண்ணீர் விட்டு அழுதார்.
இயேசுவினுடைய தெய்வீகத் தன்மையும் மிகவும் முக்கியமானது பழைய ஏற்பாட்டில் உள்ள தீர்க்கதரிசனம் அவரை குறித்ததாகும். அவர் தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாக வந்தார்.
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, ஏசாயா 46: 9-10
பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், எபிரேயர் 1:1
இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். எபிரேயர் 1:2
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தேவன் என்று ஏற்றுக் கொள்வதற்கு முக்கிய காரணம் அவர் தீர்க்கதரிசனங்கள் முழுவதற்கும் நிறைந்தவராய் இருப்பதை நம்மால் வேதாகமத்தில் இருந்து புரிந்துகொள்ள முடியும்.
அவருடைய சித்தத்தின் செய்ய வந்தவர் என்று தன்னை வெளிப்படுத்தி காண்பித்தார். நியாயப்பிரமாணங்களை குறித்த தவறான புரிதல்களை பரிசேயர்களுக்கு சுட்டி கட்டி அவர்கள் பாரம்பரியங்களை மறுதலித்து பேசினார்.தேவன் கிரியைகளை செய்கிறார் நானும் கிரியைகளை செய்கிறேன் என்று பிதாவுக்கு நிகராக தன்னை வெளிப்படுத்தி காண்பித்தார்.
இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார். யோவான் 5:17
இன்றைய காலகட்டத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை வைத்து நாம் தீர்க்கதரிசனத்தை புரிந்து கொள்ள கூடாது. அதை வேதாகம தோடு ஒத்துப் போகிறதா அது தேவனுடைய சுபாவத்தில் பொருந்துகிறதா,விசுவாசத்தில் சரியான நிலைபாட்டில் இருக்கிறதா, என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தானியம் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டது, மோசேனுடைய ஆகமங்களில் சொல்லப்பட்ட எல்லாம் தீர்க்கதரிசனங்களும் இயேசுவுக்கு சரியாய் பொருந்தக் கூடியதாக இருக்கிறதா,தீர்க்கதரிசனமான தேவனுடைய முழு வெளிப்பாட்டை உறுதி செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. எபிரேயர் 12:28-29
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆராதனை கூறியவர் தெய்வத் தன்மை உடையவர் இரட்சிப்புக்கு உடையவர்
யூதர்கள் பழைய ஏற்பாட்டில் வரப்போகும் மேசியா இரண்டு பேராக இருப்பார்கள் என நினைத்திருந்தார்கள் .ஒரு முறை அவர் மனிதர்களை இரசிக்க வருவார் மரணிப்பார் மறுமுறை அவர் இரசிக்கப்பட்ட மக்களை அழைத்து கொண்டு போகவருவார்.
ஆனால் மெய்யான மேசியா வந்தபோது அவர்களால் அவரை அறிந்து கொள்ள முடியவில்லை காரணம் அவர்கள் எழுத்துக்குறிய நியப்பிரமானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர எந்த காரணத்துக்காக தேவன் அதை அவர்களுக்கு கொடுத்தார் என்பதை உணந்துக்கொள்ள கூடாதவர்கலாய் இருந்தார்கள்
பரிசேயர்கள், சதுசேயர்கள் வேதத்தைப் பற்றி நன்றாக அறிந்திருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை தேவன் என்றும் ,அற்புதங்களையும் அடையாளங்களையும், தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேற்றி நேரடியாக காண்பித்த போதும் அவரை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை கண்கள் கட்டப்பட்ட வர்களாக இருந்தார்கள்.
முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. யோவான் 5:5-9
அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
யோவான் 5:15-16
38 வருடம் வியாதியிலிருந்து ஒரு வியாதியஸ்தனை ஆண்டவர் சுகமா க்கியத்தை யூதர்கள் கண்டும் இயேசுவை அவர்கலால் அறிந்து கொள்ள முடியவில்லை .அவர் தேவனுடைய வல்லமையை
யோவான் 5 18 அவர் நேரடியாக சொன்னார் நான் தான் என்று நான் ஓய்வுநாளுக்கு தேவனாய் இருக்கிறேன் என்றும் அவர் சொன்னார்
இயேசுவின் மூன்று அடையாளங்களை அவர் வெளிப்படுத்தி காண்பித்தார் யோவான் 5 21 26 இயேசு எதையும் சார்ந்தவர் இல்லை பிதாவை போல் தனித்து செயல்பட கூடியவர் ஐந்து 26இல் பேசுகிறார் யோவான் 5 27 நியாயத்தீர்ப்புக்கு அதிகாரம் எனக்கு உண்டு என்று நியாயத்தைப் பற்றி பேசுகிறார் விசேஷமானது வெறும் ஆசீர்வாதத்தை மாத்திரமே கொண்டு செல்வது கிடையாது பின்னால் வரப்போகிற நியாயத் தீர்ப்பைக் குறித்தும் பாவத்தை கண்டித்து உணர்த்தும் சொல்லக்கூடியது தான் தேவனுடைய வார்த்தையும் சுவிசேஷம் இருக்கிறது யோவான் 5 31 யோவான் ஸ்நானகனின் சாட்சியை பேசுகிறார் 31 33 அவர்தான் இயேசுவே அறிமுகப்படுத்துகிறார் யோவான் ஸ்நானகனின் பிறப்பும் ஊழியமும் வரப்போற மேசியாவை செலவில் ஜனங்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான் அவரே இயேசுவை தேவ ஆட்டுக்குட்டி என்று அழைத்த அறிமுகப்படுத்திய யூதர்களால் அவரை அறிந்து கொள்ள முடியவில்லை யோவான் 5 36 பிதாவின் கிரியைகளை நானும் செய்கிறேன் என்று இயேசு பேசுவதை நான் பார்க்க முடிகிறது 21 25 யோவான் யோவான் 6 23 யோவான் 5 37 38 தேவனுடைய சத்தத்தை விசுவாசித்தால் அவர்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று இயேசு பேசுவதை பார்க்க முடியும் ஆனால் அவரை விசுவாசித்து வாசிக்காதவர்கள் அவளுடைய சத்தத்தை கேட்பதும் இல்லை அவர் விபத்தை கண்டதும் இல்லை பரிசேயர் சதுசேயர சதுசேயர் களும் வரப்போகும் மேசியாவை எதிர்பார்த்து காத்திருந்தார்கள் அவர்கள் தேடியும் அவர்களால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை அப்போஸ்தலர் முதலாம் நூற்றாண்டு அப்போஸ்தலருடைய ஊழியம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றி வேதாகமத்தில் இருந்து எடுத்து காண்பித்து அவரே மெய்யான தேவன் என்று மக்களுக்கு காண்பித்து இரட்சித்து சபையிலே அவர்கள் சேர்த்தார்கள் என்று பார்க்கிறோம் அவர்களுடைய ஓவியமானது முழுமையும் தேவனை சார்ந்து இருந்தது அவர்கள் ராஜாக்களுக்கும் பணக்காரர்களுக்கும் ஊழியம் செய்யாமல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் தேவனையும் பிதாவாகிய தேவனையும் சார்ந்து ஊழியம் செய்த தன்னாலே உலகமெங்கும் சுவிசேஷம் பரவியது மக்கள் இரட்சிக்கப்பட்டவர்கள் சபையின் தொடங்கப்பட்டது அப்படிப்பட்ட தான தேவன் மீது வைராக்கியம் சார்புத் தன்மையும் நமக்கு இருக்க வேண்டும் யோவான் 5 44 கோடீஸ்வரர் பழைய ஏற்பாட்டை நாம் விசுவாசித்து அதில் உள்ள வசனங்களை ஆராய்ந்து பார்த்தோமானால் புதிய ஏற்பாடு நாம் புரிந்து கள்வது மிகவும் எளிது