*வரமாகிய பரிசுத்தஆவியானவர்!*

நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” (அப்.2:38) என்று பேதுரு சொன்ன வாக்கியங்களில் உள்ள, “அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்பதற்கு EasyEnglish என்கிற ஆங்கில மொழிபெயர்ப்பில், *”Then God will give you his gift, which is the Holy Spirit”* (அப்பொழுது தேவன் உங்களுக்கு பரிசுத்தஆவி என்கிற தமது வரத்தைக் கொடுப்பார்) என்று சொல்லப்படுகிறது.

ISV என்கிற ஆங்கில மொழிபெயர்ப்பில், *”Then you will receive the Holy Spirit as a gift”* (அப்போது நீங்கள் பரிசுத்த ஆவியை வரமாகப் பெறுவீர்கள்) என்று சொல்லப்படுகிறது.

BBE என்கிற ஆங்கில மொழிபெயர்ப்பில்,
*”and you will have the Holy Spirit given to you”* (மேலும் உங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவீர்கள்) என்று சொல்லப்படுகிறது.

மெய்யாய் மனந்திரும்பி, முழுகி ஞானஸ்நானம் பெறுகிற ஒவ்வொருவருக்கும் தேவன் தமது ஆவியை வரமாகத் தருகிறார்!

*பரிசுத்தஆவியை வரமாகப் பெறும் வழிகள்!*

1. பிதாவினிடத்தில் கேட்டுப் பெறவேண்டும்!

“நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்” என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள். (எபேசி.1:13)

இதற்கு நாம் இயேசுவை விசுவாசிக்கும் அந்தத் தருணத்திலேயே ஆவியானவர் நமக்குள் வந்துவிடுகிறார் என்று அர்த்தமல்ல. பவுல் அந்த அர்த்தத்தில் எழுதியிருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில், பவுல் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட மூன்று நாட்களுக்குப் பிறகே ஞானஸ்பெற்று, பரிசுத்த ஆவியையும் பெற்றுக்கொண்டவர். (அப்.9:6-18; 22:6-16)

மேலும், எபேசு சீஷர்களுக்கு பவுல் ஞானஸ்நானம் கொடுக்கும்போதே அல்ல, ஞானஸ்நானம் கொடுத்துவிட்டு,  அவர்கள்மேல் கைகளை வைத்து ஜெபித்தபோதே அவர்கள்மேல் ஆவியானவர் இறங்கினதைக் கண்டவர்.

இப்படியிருக்க, ஒருவர் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போதே, அல்லது ஞானஸ்நானம் பெறும்போதே பரிசுத்தஆவியால் முத்திரைப்போடப்படுகிறார் (ஆவியைப் பெறுகிறார்) என்று பவுல் எழுதியிருக்கமுடியாது.

இப்படியிருக்க, “நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்” என்று பவுல் சொல்லுகிறதை
(எபேசி.1:13), “நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, (ஞானஸ்நானம் பெற்று) விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்” என்று சொல்வதாகப் புரிந்துகொள்வதே சரியாக இருக்கும்.

“விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்”
(மாற்கு 16:16) என்று இயேசுகிறிஸ்து சொல்லுகிறது இங்கு கவனிக்கத்தக்கது.

ஒருவர் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்று, பிதாவினிடத்தில் பரிசுத்தஆவிக்காய் ஜெபிக்கிற நிமிஷத்திலிருந்து எப்போதுவேண்டுமானாலும் தேவன் அவரை தமது ஆவியால் நிரப்பக்கூடும்.

“பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, *பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா”* என்று ஆண்டவர் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (லூக்கா 11:13)

அவர் ஞானஸ்நானம் பெற்று, கரையேறி ஜெபித்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றவர். (லூக்கா 3:21,22; மத்.3:16)

2. காத்திருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.

“யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான். *நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.* ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் *என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்* என்று ஆண்டவர் தமது அப்போஸ்தலருக்குக் கட்டளையிட்டார். (அப்.1:4,5)

எருசலேமில் இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்து, பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்டார்கள். (அப்.1:12-14; 2:1-4)

பரிசுத்தஆவியைப் பெற பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்பது சரியான உபதேசம் அல்ல. அப்போஸ்தலரும் விசுவாசிகளும் சில நாளுக்குள்ளே அதாவது பத்து நாட்களுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். (அப்.1:4; 2:1-4)

பரிசுத்தஆவியைப் பெற சிலர் சில நாட்கள் காத்திருக்கவேண்டியிருக்கலாம். அனைவருக்கும் இது பொருந்தாது.

3. கைகளை வைக்கும்போது பெற்றுக்கொள்ளக்கூடும்.

ஊழியரோ, விசுவாசியோ கைகளைவைத்து ஜெபிக்கும்போது பரிசுத்தஆவியை சிலர் பெற்றுக்கொள்ளக்கூடும்.

அப்போஸ்தலர் பேதுருவும் யோவானும் சமாரிய விசுவாசிகள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள். (அப்.8:14-17)

விசுவாசியாகிய அனனியா கைகளை வைத்து ஜெபித்தபோதுதான் சவுல் (பவுல்) பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். (அப்.9:10,17,18)

பவுல் எபேசு சீஷர்கள்மேல் கைகளை வைத்தபோதுதான், பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார். (அப்.19:1,6)

4. ஆவியானவர் தாமாக  நிரப்பக்கூடும்!

ஞானஸ்நானத்திற்கு முன்பே, எவரும் கைகளை வைக்காத, சில நாட்கள் ஜெபத்தில் காத்திருக்காத சிலரை, ஆவியானவர் தாமாக  நிரப்பக்கூடும்!

பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்ட கொர்நேலியுவின் வீட்டார், உறவின்முறையார், விசேஷித்த சிநேதிதர் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். (அப்.10:24,44)

“நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்” 
(அப்.10:38) என்று பேதுரு சொன்னதைக் கேட்ட அவர்கள், தேவன் தங்களுக்கும் பரிசுத்தஆவியை கொடுக்கவேண்டும் என்று மனதிற்குள் வேண்டினார்களோ என்னவோ தெரியவில்லை.

“நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா” என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி கட்டளையிட்டார் பேதுரு.
(அப்.10:47,48)

ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள், பரிசுத்தஆவியைப் பெற்றப்பின்பு கட்டாயம் ஞானஸ்நானம் பெறவேண்டும்!

ஆவியானவர் தருகிற வரத்தைப் பெறுவதற்கு முன்பு, ஆவியானவரையே நாம் வரமாகப் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம்.

வரமாக வரும் ஆவியானவர், வரங்களை எப்படி தருகிறார் என்று அடுத்துப் பார்ப்போம்!

                (தொடரும்…..) *- காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
           கோயம்புத்தூர்.
               8946050920

Please enable JavaScript in your browser to complete this form.
Name

By admin

15 thoughts on “07 # ஆவியின் வரங்கள்”
  1. Greetings! I’ve been following your web site for a long time now and finally got the bravery to go ahead and give you a shout out from Kingwood Tx! Just wanted to say keep up the fantastic job!

  2. I think other website proprietors should take this web site as an model, very clean and great user genial style and design, as well as the content. You’re an expert in this topic!

  3. Its such as you learn my mind! You seem to understand so much approximately this, like you wrote the e-book in it or something. I think that you just could do with some to pressure the message home a bit, but other than that, that is wonderful blog. A fantastic read. I will definitely be back.

  4. I’ve been browsing online more than 3 hours these days, but I by no means found any interesting article like yours. It is beautiful worth sufficient for me. In my opinion, if all webmasters and bloggers made excellent content material as you did, the net shall be much more helpful than ever before. “It’s all right to have butterflies in your stomach. Just get them to fly in formation.” by Dr. Rob Gilbert.

  5. I’m really enjoying the theme/design of your weblog. Do you ever run into any internet browser compatibility problems? A couple of my blog audience have complained about my blog not operating correctly in Explorer but looks great in Firefox. Do you have any tips to help fix this issue?

  6. I think this site has some rattling excellent info for everyone. “Philosophy triumphs easily over past evils and future evils but present evils triumph over it.” by La Rochefoucauld.

  7. Hey there would you mind stating which blog platform you’re working with? I’m going to start my own blog soon but I’m having a difficult time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design seems different then most blogs and I’m looking for something completely unique. P.S Sorry for being off-topic but I had to ask!

  8. An impressive share! I’ve just forwarded this onto a co-worker who
    had been conducting a little research on this. And he actually
    bought me dinner simply because I discovered it for him…
    lol. So allow me to reword this…. Thank YOU for the meal!!

    But yeah, thanx for spending time to discuss this subject here on your
    web page.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dear in Christ,

Please fill the form and look into the Website…

Please enable JavaScript in your browser to complete this form.
Name