நமக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறார். (கலாத்.3:5)
கேட்கிறவர் அறிந்திருக்கிற வெவ்வேறு பாஷைகளிலே பேசும் வரத்தை தந்தருளுகிறார். (அப்.2:4-11)
புதிய ஏற்பாட்டு ஊழியர் மற்றும் விசுவாசிகளை தீர்க்கதரிசனம் உரைக்க வைக்கிறார். (யோவேல் 2:28,29; 1 கொரி.12:10,11; 14:1,24,25,29,30; அப்.11:27,28; 19:6; 21:3,4,10,11)
உலகத்திலும் தனிநபருக்கும் எதிர்காலத்தில் சம்பவிக்கப்போகிறதை அறிவிக்கிறார். (அப்.11:27,28; 20:22,23; 21:4,10,11; 1தீமோ.4:1)
சபைக்கான ஆலோசனை நிருபங்களை எழுதுகிறதில் ஊழியர்களை வழிநடத்துகிறார். (அப்.15:24-30)
சபை நிர்வாகத்திற்கான தகுதியைத் தருகிறார். (அப்.6:1-6)
சபையை தமது ஆறுதலோடு பெருகப்பண்ணுகிறார். (அப்.9:31; 11:24)
சபையோடு பேசி எச்சரிக்கிறார்.
(எபிரே.3:1-8; வெளிப்.2:7,11,17,29; 3:1,6,13,22)
கள்ளப்போதகர்களை சபைக்கு அடையாளம் காட்டுகிறார். (1தீமோத்.4:1-3)
நாம் தேவனுடைய சிநேகிதராக மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார். (யாக்.4:4,5)
கிறிஸ்துவினிமித்தம் விசாரணையை எதிர்கொள்ளும் அவருடைய சீஷரிலிருந்து பேசுகிறார். (மத். 10:17-20; மாற்கு 13:11)
நாம் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்படும்போது. நம்மால் மகிமைப்படுகிறார். (1 பேதுரு 4:14)
பரலோக தரிசனத்தைக் கொடுக்கிறார். (அப்.7:55)
தேவன் வாக்களித்ததைப் பெறும்படி மேன்மேலும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்க பலப்படுத்துகிறார். (ரோமர் 15:13; கலாத்.5:5)
இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு சபையை ஆயத்தப்படுத்துகிறார். (வெளிப்.22:17,20,21)
கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம் என்று திருவுளம்பற்றுகிறார்
(வெளிப்.14:13)
இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானவர், தாம் வாசமாயிருக்கிறவர்களின் சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பிக்கப்போகிறார். (ரோமர் 8:11; 1கொரி.15:45,46; 2 கொரி.3:6)
ஆவிக்குரிய வரங்களை தரும் ஆவியானவரையே வரமாகப் பெறுவதைக்குறித்து இப்பொழுது பார்ப்போம்.
*– க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்புத்தூர்.
8946050920
(தொடரும்…..)