பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே கிறிஸ்து என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறதைக்குறித்து நமக்குச் சாட்சிசொல்லுகிறார். (எபிரே.10:12-18)
கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினார். (ரோமர் 8:11; 1பேதுரு 3:18)
காவலிலுள்ள ஆவிகளுக்கு பிரசங்கிக்க கிறிஸ்துவுக்கு உதவினார். (1பேதுரு 3:19,20)
இயேசுவை பிதாவாகிய தேவன் எழுப்பினதற்கும் அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினதற்கும் சாட்சியாக இருக்கிறார்.
(அப்.5:30-32)
இயேசுகிறிஸ்துவைக்குறித்த வெளிப்பாட்டைக் கொடுக்கிறார். (1கொரிந்.2:6-15; எபேசி.1:17; எபேசி.3:5,6)
இயேசுகிறிஸ்துவைக்குறித்து நமக்கு சாட்சி கொடுக்கிறார்.
(யோவான் 15:26; 1 யோவான் 5:6; வெளிப்.19:10)
இரட்சிப்பைக்குறித்து சாட்சி கொடுக்கிறார். (எபிரே.2:4)
நாம் இரட்சிக்கப்படுகிறதற்கேதுவாக கிறிஸ்துவை விசுவாசிக்கும் கிருபையை அளிக்கிறார். (எபிரே.10:29; எபேசி.2:8)
சந்தோஷமாய் வசனத்தை ஏற்றுக்கொள்ளச் செய்கிறார். (1தெச.1:6,7)
இயேசுகிறிஸ்துவினால் கேட்டுக்கொள்ளப்பட்டு, பிதாவினால் கொடுக்கப்பட்டிருக்கிறார். (மாற்கு 1:8; லூக்கா 11:13; யோவான் 7:38,39; 14:6,26; 15:26; 20:22; அப்.2:33)
நம்முடனே வாசம்பண்ணி நமக்குள்ளே இருக்கிறார். (யோவான் 14:17; 1 கொரி.3:16,17; 6:19; 2 கொரி.13:14; 1பேதுரு 2:4,5)
கிறிஸ்து நம்மில் நிலைத்திருக்கிறதற்கு ஆதாரமாயிருக்கிறார்.
(1 யோவான் 3:24; 4:13)
ஆவிக்குரிய ஜீவியத்தை ஆரம்பித்துவைக்கிறார். (கலாத்.3:3)
ஆவிக்குரிய ஜீவியத்தை புதுப்பிக்கிறார். (ஏசாயா 32:15-18; எசே.11:19; 18:31; 36:26,27; 37:14; ரோமர் 2:29; 1கொரி.6:11; எபேசி.4:22,23; தீத்து 3:5)
மாம்ச இச்சைகளை அழித்து நித்திய வாழ்வுக்கு உதவுகிறார். (அப்.8:13; கலாத்.5:16-18,25)
நாம் பரலோகத்திற்கு போவதற்கான அத்தாட்சியாயிருக்கிறார். (யோவான் 3:5,6,8; ரோமர் 8:1; 8:2,4-6,13; 2 கொரி.1:22; 5:5; கலாத்.6:8,18; எபேசி.1:13,14; 2:18; 4:30; பிலிப்.1:19)
தாம் நம்மை நடத்துவதன் மூலம் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்கிற நிச்சயத்தை அளிக்கிறார். (ரோமர் 8:14-16; கலாத்.4:6)
உள்ளான மனுஷனை வல்லமையாய்ப் பலப்படுத்துகிறார்.
(எபேசி.3:16)
தேவனை தொழுதுகொள்வதற்கு உதவிசெய்கிறார். (யோவான் 4:23,24; எபேசி.5:18-20; பிலிப்.3:3)
தேவனுடைய பிள்ளைகளை இயேசுவின் சாயலாக மாற்றுகிறார். (1 கொரி.12:13; 2 கொரி.3:3,18)
தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் (இயேசுவைப் போன்றவனாகவும்), எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, உபதேசிக்கவும், கடிந்துகொள்ளவும், சீர்திருத்தவும், நீதியைப் படிப்பிக்கவும் பிரயோஜனப்படுத்த வேதவாக்கியங்களை அருளியிருக்கிறார்.
(2 தீமோத்.3:16,17)
எல்லாவற்றையும் தேவஜனங்களுக்குப் போதித்து, இயேசு அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார்.
(யோவான் 14:26)
சத்தியஆவியாகிய அவர், நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துகிறார். (யோவான் 16:13; 1பேதுரு 1:22)
அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை நமக்கு அறிவிக்கிறார். (யோவான் 16:14)
இயேசுவினுடையதில் எடுத்து நமக்கு அறிவிப்பதினால் அவரை மகிமைப்படுத்துகிறார். (யோவான் 16:14)
நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்டிருக்கிற “ஆரோக்கியமான வசனங்களின் சட்டம்” என்கிற நற்பொருளை காத்துக்கொள்ள உதவுகிறார். (2 தீமோத்.1:13,14)
நமது பலவீன நேரங்களில் நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், தேவனுடைய சித்தத்தின்படியே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
(ரோமர் 8:26,27)
எந்தச் சமயத்திலும் மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் விழித்துக் கொண்டிருக்க செய்கிறார். (எபேசி.6:18; யூதா 1:20)
ஆவியின் கனிகளை கொடுக்க செய்கிறார். (கலாத்.5:22-25) ஒருவரிரொருவர் அன்புகூர செய்கிறார். (கொலோ.1:8)
நாம் உள்ளூரிலும், உள்நாடு முழுவதிலும், அயல்நாட்டிலும், உலகம் முழுவதிலும் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சிகளாயிருக்க பலப்படுத்துகிறார். (அப்.1:8; 2:32; 3:15; 4:33)
தேவனுக்கு ஊழியஞ்செய்ய நம்மை வல்லமையுள்ளவர்களாக்குகிறார்.
மற்றவர்களிடம் அன்புகொள்ளவும், நம் சொல்லையும் செயலையும் கட்டுப்படுத்தவும் நமக்கு உதவுகிறார். (2தீமோத்.1:7)
பழமையான எழுத்தின்படியான ஊழியத்திலிருந்து புதுமையான ஆவியின்படியான ஊழியத்திற்கு நடத்தினார். (ரோமர் 7:6; 2 கொரி.3:6-17)
இயேசுவானவரின் அப்போஸ்தலருக்குப் அவர்மூலமாக கட்டளையிட்டார். (அப்.1:1)
ஊழியத்திற்கு அழைத்து பிரித்தெடுத்து நியமிக்கிறார். (அப்.13:1,2,4; 20:28)
ஜனங்களுக்கு தேவவார்த்தையை கொண்டுசெல்ல அனுப்புகிறார். (ஏசாயா 48:16; 59:21; அப்.8:29-39; 10:19; 11:12; 13:4; 28:27; 2 கொரி.4:13)
“இயேசு உண்மையிலேயே கர்த்தர்” என்று கூறுவதற்கான நிச்சயத்தைக் கொடுக்கிறார். (1 கொரி.12:3)
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை (தேவகுமாரன் என்று) அறிக்கையிடப்பண்ணுகிறார். (1 யோவான் 4:2,4)
இயேசுகிறிஸ்துவை தேவகுமாரன் என்று விசுவாசிக்கிற, தேவனால் உண்டானவர்களுக்கு செவிகொடுக்கத் தூண்டுகிறார். (1 யோவான் 4:6; 5:1)
தேவவசனத்தை தைரியமாய் பேசவைக்கிறார். (அப்.4:8-12,31)
சுவிசேஷ எதிரிகள் எதிர்த்துநிற்கமுடியாத அளவுக்கு பேசும் ஞானத்தை தருகிறார். (அப்.6:9,10)
வசனத்தை சொல்லவேண்டிய இடத்தை வரையறுக்கிறார். (அப்.16:6-12; அப்.19:21)
ஊழியரின் பேச்சையும் பிரசங்கத்தையும் உறுதிப்படுத்துகிறார்.
(1 கொரி.2:5)
புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, ஊழியரை பலப்படுத்துகிறார்.
(ரோமர் 15:18,19; கலாத்.3:5; 1தெச.1:5)
*– க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்புத்தூர்.
8946050920
(தொடரும்…..)