சபை கூடிவருதலை விட்டுவிடுகிறதின் விளைவு !
மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து,
எபிரேயர் 10:24
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
எபிரேயர் 10:25
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
எபிரேயர் 10:26
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
எபிரேயர் 10:27
அன்புள்ளவர்களாகவும் நற்கிரியை செய்கிறவர்களாகவும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவே நாம் சபையாகக் கூடிவருகிறோம்.
தேவன் தமது சொந்த இரத்தத்தை கொடுத்து தங்களை சபையாக்கின சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, போராட்டங்கள், நிந்தைகள், உபத்திரவங்களினிமித்தம் தைரியத்தைவிட்டு, பின்வாங்கி (எபிரே.10:32-39), சபை கூடிவருதலை மனப்பூர்வமாய்ப் விட்டுவிடுகிறவர்கள்: மன்னிக்கப்பட வாய்ப்பிராமல், கோபாக்கினைக்குரியவர்களாகிறார்கள்!
தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தங்களைப் பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிற பாவத்தை செய்கிற இவர்கள், கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரராயிருக்கிறார்கள்! (எபி.10:29).
அன்பு நற்கிரியையும் உடைய கிறிஸ்துவின் சாயலாக தாங்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பை தவறவிட்டுவிடுகிற இவர்கள், கிறிஸ்துவுடன் நித்தியத்தில் இருக்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்!
ஒருமுறை தேவனுடைய வெளிச்சத்திற்கு வந்தும், பரலோகத்திலிருந்து வரும் நல்ல விஷயங்களை அவர்கள் அறிந்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய செய்தி எவ்வளவு நல்லது என்பதை கற்றுக்கொண்டிருந்தும், எதிர்கால உலகம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அறிந்திருந்தும், மறுதலித்துப்போகிறவர்கள்: தேவனுடைய குமாரனை மீண்டும் சிலுவையில் அறைவது போன்ற காரியத்தை செய்து, மற்றவர்கள் பகிரங்கமாக கிறிஸ்துவை இகழ்வதற்கு காரணமாகிறபடியால், மீண்டும் கிறிஸ்துவிடம் திரும்பி வர யாரும் அவர்களுக்கு உதவமுடியாது. (எபிரே.6:4-6)
தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்தும், தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கு முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலம் தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருந்து சுட்டெரிக்கப்படுவது போலவே, தேவனுடைய கிருபையை வீணடிக்கிறவர்களின் முடிவும் இருக்கும்!
(எபிரே.6:7,8)
சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். (எபிரே.3:12)
நாம் ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். (எபிரே.3:14)
தேவனுடைய சபை ஐக்கியத்தை எக்காரணம் கொண்டும் ஒரு கிறிஸ்தவர் விட்டுவிடக்கூடாது.
தேவனுடைய சபை ஐக்கியத்தை புறக்கணிப்பது தேவனையே புறக்கணிப்பதாகும்!!
- க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
கோயம்புத்தூர்.
8946050920
CXNJgFmBdjM
xLETGAjWVg
I am glad to be a visitor of this pure blog! , appreciate it for this rare info ! .
I like this web site very much, Its a really nice berth to read and receive info .
hello!,I really like your writing very much! share we be in contact more approximately your post on AOL? I require an expert in this area to unravel my problem. Maybe that’s you! Taking a look ahead to see you.
What¦s Happening i’m new to this, I stumbled upon this I’ve discovered It absolutely useful and it has helped me out loads. I hope to give a contribution & assist other users like its aided me. Good job.
Have you ever thought about including a little bit more than just your articles? I mean, what you say is important and all. Nevertheless just imagine if you added some great graphics or video clips to give your posts more, “pop”! Your content is excellent but with pics and clips, this website could undeniably be one of the very best in its niche. Wonderful blog!
It’s truly very complex in this active life to listen news on Television, thus I only use world wide web for that reason, and take the most
up-to-date news.
Hello! I realize this is sort of off-topic but I needed to ask.
Does managing a well-established blog like yours take a massive amount work?
I am completely new to running a blog however I do write in my diary everyday.
I’d like to start a blog so I can share my own experience and feelings online.
Please let me know if you have any kind of recommendations or tips
for new aspiring bloggers. Thankyou!