*வரங்களை அளிக்கும் ஆவியானவர்!*
இவைகளையெல்லாம் (வரங்களையெல்லாம்) அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
(1 கொரி.12:11)
வரங்களை கொடுக்கும் ஆவியானவர் யார் என்று நாம் சற்று ஆராயலாம்.
*திரித்துவ தேவனில் மூன்றாவது ஆள்தத்துவம்!*
பரிசுத்த ஆவியானவர் திரித்துவ தேவனில் மூன்றாவது ஆள்தத்துவம் (personality) ஆவார்.
இவரை பிதாவுக்கும் குமாரனுக்கும சற்று குறைந்தவர் என்று மதிப்பிடுவது தவறாகும். “கர்த்தரே ஆவியானவர்” என்று பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது.
(2 கொரி.3:17)
ஒன்றான மெய்தேவன் ஒரே நேரத்தில் பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார், செயல்படுகிறார் என்பதை நாம் அறியவேண்டும். (மத்.3:16,17)
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் செயல்களில் வித்தியாசமுள்ளவராயிருப்பினும், மதிப்பில் மூவரும் சமமாக இருக்கிறார்கள். (மத்.28:19) இதனால் கிறிஸ்தவ மார்க்கத்தில் மூன்று தேவர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துவிடக்கூடாது.
“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்கிற வசனம் (ஆதி.1:1) மூலபாஷையில், “ஆதியிலே *தேவர்கள்* வானத்தையும் பூமியையும் *சிருஷ்டித்தார்* என்று இருக்கிறது.
‘தேவர்கள்’ என்று இருக்கும்போது, ‘சிருஷ்டித்தார்கள்’ என்றுதானே முற்றுபெறவேண்டும்? ஏன் ‘சிருஷ்டித்தார்’ என்று முற்றுபெறுகிறது?
ஒரே தேவன் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று மூவராக இருக்கிறார் அல்லது பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்கிற மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்
என்று இதற்கு அர்த்தம் ஆகும். (1யோவான் 5; 7)
*ஆவியானவரின் கிரியைகள்!*
தேவஆவியானவர் எங்கும் நிறைந்திருக்கிறார். (சங்.139:7-10)
வானம் பூமி சிருஷ்டிப்பிலும் (ஆதி.1:1-3), மனுஷனுடைய சிருஷ்டிப்பிலும் (ஆதி.1:26-28; யோபு 33:4) பிதாவாகிய தேவனுடனும் வார்த்தையாகிய தேவனுடனும் முக்கியப் பங்காற்றினார்.
ஆசரிப்புக்கூடார வேலையை சிறப்பாகச் செய்யவும் (யாத்.31:3-5; 35:30-33), தேவனுக்கு ஊழியஞ்செய்யத்தக்கதாக ஆரோனுக்கு பரிசுத்த வஸ்திரங்களை உண்டாக்கவும் (யாத்.28:3) ஞானத்தின் ஆவியாக செயல்பட்டார்.
எகிப்து தொடங்கி கானான் வரைக்கும் இஸ்ரவேலர்
நடுவில் இருந்து, அவர்களை பாதுகாத்து பராமரித்தார்.
(ஏசாயா 63:12,14; நியா.3:10; 6:34,35; 11:29; 13:25; 15:14; 1 சாமு.11:1-11; ஏசாயா 59:19)
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசே (எண்.11:17,25), யோசுவா (எண்.27:18-21), ஒத்னியேல் (நியா.3:9,10), கிதியோன் (நியா.6:34; உபா.34:9), சிம்சோன் (நியா.13:25; 14:5,6,19; 15:14); யெப்தா (நியா.11:29), சவுல் (1 சாமு.10:6,10; 11:6,7) தாவீது (1 சாமு.16:13; 2 சாமு.23:2), எலியா (1இரா.18:12), எலிசா (2 இரா.2:15,16) போன்றோரில் தங்கியிருந்து, தேவசித்தம் செய்ய அவர்களை வழிநடத்தினார்.
முதலாவது கட்டப்பட்ட எருசலேம் தேவாலயத்தின் மாதிரியை தாவீதுக்கு கட்டளையிட்டார். (1 நாளா 28:11-13) சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் திரும்பவும் தேவாலயத்தை கட்டிமுடிக்க பலப்படுத்தினார். (ஆகாய் 2:5; சகரியா 4:6-9) புதிய ஏற்பாட்டில் தேவஜனங்களை தேவாலயமாகக் கட்டிக்கொண்டுவருகிறார். (1கொரி.3:16,17; 6:19,20; எபேசி.2:21,22; 1 பேதுரு 2:4,5)
நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாக இருக்கிறார். (ஏசாயா 28:6)
செம்மையான வழியிலே நடத்துகிறார். (சங்.143:10; நீதி.1:23)
பரிசுத்தப்படுத்துகிறார். (ஏசாயா 4:3; ரோமர் 15:15; 1கொரிந்.6:11; 2தெச.2:13; தீத்து 3:5; 1பேதுரு 1:2)
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளுக்குள் இருந்து ஜனங்களோடே பேசினார். (எண்.24:1-9; 1 சாமு.10:6,10,11; 2 சாமு.23:2; எசேக்.11:5; மீகா 3:8; சகரியா 7:12; 2 பேதுரு 1:21)
தீர்க்கதரிசிகள் அல்லாத சிலரில் இறங்கி, அவர்களை தீர்க்கதரிசனம் சொல்லவைத்தார். (எண்.11:27,28; 1 சாமு.10:6,10; 19:20,23; 1 நாளா.12:18; 2 நாளா.15:1-8; 20:14-17; 24:20; அப்.1:16-20; சங்.41:9; 55:12-15)
சொப்பனங்களுக்கும் தரிசனங்களுக்கும் விளக்கம் கொடுக்கச் செய்தார். (தானி.4:8-27; 5:1-29)
விலங்குகள், பறவைகள் மற்றும் ஊரும் பிராணிகளை தேவன் குறித்த இடத்தில் கூட்டிச் சேர்க்கிறார். (ஏசாயா 34:6-16; ஆதி.7:2,3,8,9)
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளையும் (எசேக்.2:2; 3:12,14,24; 8:1-18; 11:1-4,24; 37:1; 43:5) புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலரையும் (யோவேல் 2:28; 2 கொரி.12:1-4; வெளிப்.1:10; 4:2; 21:10) தமக்குள்ளாக்கி தரிசனங்களைக் காணசெய்தார்.
முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று தெரியப்படுத்தினார்.
(எபிரே.9:7,8)
எலிசபெத்தை நிரப்பி, மரியாளையும், இயேசுவையும் குறித்த வெளிப்பாட்டைக் கொடுத்தார். (லூக்கா 1:41-45) சகரியாவை நிரப்பி, இயேசுகிறிஸ்து மற்றும் யோவான்ஸ்நானனை குறித்த வெளிப்பாட்டைக் கொடுத்தார். (லூக்கா 1:67-79)
யோவான்ஸ்நானனை தாயின் வயிற்றிலிருக்கும்போதே நிரப்பி, எலியாவைபோல பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படி, இயேசுவுக்கு முன்னே நடக்க பலப்படுத்தினார். (லூக்கா 1:15,17)
தீர்க்கதரிசிகள் (1பேதுரு 1:11,12), தாவீது (மத்.22:43), சிமியோன் (லூக்கா 2:25-27) போன்றோருக்கு இயேசுகிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாட்டைக் கொடுத்தார்.
இயேசுகிறிஸ்து மரியாளுக்குள் உருவாகக் காரணமாயிருந்தார். (மத்.1:18,20; லூக்கா 1:35)
இயேசுகிறிஸ்துவில் ஞானத்தையும் உணர்வையும், ஆலோசனையையும் பெலனையும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளுகிறவராக தங்கியிருந்தார். ( ஏசாயா 11:1,2; மத்.3:16;)
பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு இயேசுவை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனார்.
(மத்தேயு 4:1) பின்பு தம்முடைய பலத்தினாலே அவரை கலிலேயாவுக்குத் திரும்பிப் கொண்டுபோனார்.
(லூக்கா 4:14)
புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்த அவர்மேல் அமர்ந்திருந்தார். (ஏசாயா 42:1-3; மத்.12:15-21) அவர்மேல் இருந்து, சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கச் செய்தார். (ஏசாயா 61:1-3; லூக்கா 4:18,19; யோவான் 3:34)
அவருக்குள் இருந்து நன்மைகளையும் அற்புதங்களையும் செய்யவைத்தார். (மத்.12:22-28; அப்.10:38)
கிறிஸ்து தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்க ஆயத்தம் செய்தார். (எபிரே.9:14)
*– க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்புத்தூர்.
8946050920
(தொடரும்…..)