வேசித்தனம்பண்ணுவதின் விளைவு!

வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும். வேசித்தனஞ்செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
1 கொரிந்தியர் 6:18

வேசித்தனத்திற்கு விலகியோடும்படி பவுல் விசுவாசிகளையே எச்சரிக்கிறார்.

மறுபடியும் பிறந்தவர்களுக்கும் வேசித்தனம்பண்ணுவதற்கான சோதனையும், வாய்ப்புகளும் உண்டு! விலகியோடினால் மட்டுமே நாம் நம்மை காத்துக்கொள்ளமுடியும்.

தன் சொந்த மனைவி அல்லது கணவன் அல்லாதவருவருடன் தவறான தொடர்பு வைத்துகொள்ளுகிறவர், தன் சொந்த சரீரத்துக்கு எதிராக தவறு செய்கிறார்.

ஒரு மனிதன் தான் செய்யும் மற்ற பாவங்களை தன் சரீரம் இல்லாமல் செய்கிறான். அதாவது, தனது சரீரத்துக்கு வெளியே செய்கிறான். அதாவது அவன் செய்யும் மற்ற பாவங்கள் அவனது சரீரத்துக்கு வெளியே உள்ளது.

அதனால் அவன் செய்யும் மற்ற பாவங்கள் அவனுடைய சரீரத்தை பாதிக்காது. ஆனால் பாலியல் ஒழுக்கக்கேடானக் காரியங்களைச் செய்பவர்கள் தங்கள் சொந்த சரீரத்துக்கு பாதிப்பை உண்டாக்குகிறார்கள்.

நாம் ஒழுக்கக்கேடான செயல்களை செய்வதற்கல்ல, தமக்கு பிரியமானக் காரியங்களைச் செய்ய பயன்படுத்துவதற்கே தேவன் நமக்கு சரீரத்தை கொடுத்திருக்கிறார். (1 கொரி.6:13)

நமது சரீரங்கள் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்கள் (பாகங்கள்) என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவயவத்தை (பாகத்தை) நாம் ஒரு விபச்சாரியின் அல்லது விபச்சாரகனின் சரீரத்தின் பாகமாக்கக்கூடாது. (1 கொரி.6:15)

நமது சரீரங்கள் கிறிஸ்துவுக்கு சொந்தமானது என்பதை நாம் நினைவில் கொண்டு, கிறிஸ்துவுக்குச் சொந்தமான நமது சரீரத்தை ஒரு விபச்சாரி அல்லது விபச்சாரகனுடைய சரீரத்துடன் சேர்க்காதபடிக்கு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

எவனொருவன் தன் சரீரத்தை விபச்சாரியுடன் சேர வைக்கிறானோ அவன் அந்த விபச்சாரியுடன் ஒரே சரீரமாகிறான். (1 கொரி.6:16)

மறுபடியும் பிறந்தவன் தன் மனைவியல்லாத ஸ்திரியுடன் தவறான தொடர்புகொண்டு ​​அவளுடன் ஒரே சரீரமாகும் பாவத்திற்கு விலகவேண்டும்.

நமது இஷ்டப்படி பயன்படுத்துவதற்கு நம் சரீரம் நமக்கு சொந்தமானதல்ல. பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயமாக இருக்கும்படிக்கு, தேவன் அதை நமக்கு கொடுத்திருக்கிறார். (1 கொரி.6:19)

தேவன் நம்மை சொந்தமாக வாங்கியிருக்கிறார் என்பதை உணர்ந்து, அவரோடிசைந்து, அவருடனே ஒரே ஆவியாயிருந்து,
தேவனுக்கு உடையவைகளாகிய நமது சரீரத்தினாலும் நமது ஆவியினாலும் நாம் அவரை மகிமைப்படுத்தவேண்டும். (1 கொரி.6:17,20)

தேவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை எழுப்பியிருக்கிறார். தமக்கு பிரியமானதை செய்து, தம்மை மகிமைப்படுத்தும் நம்முடைய சரீரத்தையும் தமது வல்லமையினாலே எழுப்புவார். (1 கொரி.6:14)

தேவனுக்கு பிரியமானதை செய்து அவரை மகிமைப்படுத்தப் பயன்படுத்தப்படாமல், பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் சரீரங்கள் கிறிஸ்துவின் வருகையில் எழுப்பப்படப்போவதில்லை!

“அவர்களில் (இஸ்ரவேலரில்) சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள். அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக” என்று பவுல் எச்சரிக்கிறதை (1 கொரி.10:8) மறுபடியும் பிறந்தவர்கள் கவனித்து நடக்கவேண்டும்.

கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குகிறதுபோல (1 கொரி.5:6) முழு சபையும் இடறிவிடக்கூடாது என்பதற்காக, தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருந்த விபச்சாரகனான ஒரு விசுவாசியை பவுல் கொரிந்து சபையைவிட்டு வெளியேற்றுகிறார். (1 கொரி.5:1-5)

“(விசுவாச) சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரானாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது. அப்படிப்பட்டவனோடேகூடப் புசிக்கவுங்கூடாது” என்று சபையரை அவர் எச்சரிக்கிறார். (1 கொரி.5:11)

“ஒருவிசை இரட்சிக்கப்பட்டவன் என்ன பாவம் செய்தாலும், அவன் தேவனுடைய பிள்ளையாகவே இருக்கிறான். அவனுடைய முக்காலப் பாவங்களையும் கிறிஸ்து மன்னித்துவிட்டதனால், அவன் செய்கிற பாவங்கள், பாவங்களாகவே கருதப்படாது. அதற்கான தண்டனையும் அவனுக்கு கிடையாது” என்று உபதேசிக்கிற பிசாசின் உபதேசிகளிடம் கிறிஸ்தவர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இரட்சிக்கப்பட்டவன் செய்கிற பாவங்கள், பாவமாகவே கருதப்படுகிறதில்லை என்றால், விபச்சாரம் செய்த விசுவாசியை பவுல் ஏன் சபைக்கு புறம்பாக்கவேண்டும்?

விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரானாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருக்கிற விசுவாசியுடன் கலந்திருக்கவோ, புசிக்கவோ கூடாது என்று பவுல் ஏன் சபையாருக்கு கட்டளையிடவேண்டும்?

ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து, விசுவாசிகளோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்களும், விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்களாயிருந்து, உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகளான கள்ளப்போதகர்களிடம்
(2 பேதுரு 2:1,13,14), மறுபடியும் பிறந்தோர் கவனமாக இருக்கவேண்டும்!

             (தொடரும்....)
  • க. காட்சன் வின்சென்ட்
    (Biblical Teaching Ministry)
    கோயம்புத்தூர்.
    8946050920

By admin

158 thoughts on “03# மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்?”
  1. Simply wish to say your article is as astonishing.
    The clarity for your publish is just cool and i can suppose you are
    an expert on this subject. Fine with your permission allow
    me to seize your RSS feed to keep up to date
    with drawing close post. Thank you a million and please
    continue the gratifying work.

  2. இந்த உரை மனிதனின் சரீரத்தின் புனிதத்தன்மையைப் பற்றி வலியுறுத்துகிறது. பாலியல் ஒழுக்கக்கேடான செயல்கள் நமது சரீரத்தை பாதிக்கின்றன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. கிறிஸ்துவின் சரீரத்தின் பாகமாக நமது சரீரங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேவன் நமக்கு கொடுத்த சரீரத்தை பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பாலியல் இச்சைகளுக்கு எதிராக நாம் எவ்வாறு வலுவாக நிற்க முடியும்? Given the growing economic instability due to the events in the Middle East, many businesses are looking for guaranteed fast and secure payment solutions. Recently, I came across LiberSave (LS) — they promise instant bank transfers with no chargebacks or card verification. It says integration takes 5 minutes and is already being tested in Israel and the UAE. Has anyone actually checked how this works in crisis conditions?

  3. பவுலின் எச்சரிக்கைகள் மிகவும் முக்கியமானவை. நாம் நமது சரீரத்தை பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாலியல் ஒழுக்கக்கேடான செயல்கள் நமது சரீரத்தை பாதிக்கின்றன. கிறிஸ்துவின் சரீரத்தின் பாகமாக நமது சரீரங்கள் இருக்க வேண்டும். நாம் எப்படி நமது சரீரத்தை பரிசுத்தமாக வைத்திருக்க முடியும்? Recently, I came across a program for GPT-generated text (генерация текста) in Russian. The cool part is that it runs locally on your own computer, and the output is actually unique and quite decent. By the way, I hope the content on your site isn’t AI-generated?

  4. hi!,I like your writing so much! share we communicate more about your post on AOL? I need an expert on this area to solve my problem. Maybe that’s you! Looking forward to see you.

  5. பாலியல் ஒழுக்கக்கேடான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பது இந்த உரையின் முக்கிய கருத்து. நமது சரீரங்கள் கிறிஸ்துவின் சரீரத்தின் பாகங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேவன் நமக்கு கொடுத்துள்ள சரீரத்தைப் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும். நமது செயல்கள் நம்மை கிறிஸ்துவிடமிருந்து பிரிக்கக்கூடும். பாலியல் தவறுகளிலிருந்து விலகி, கிறிஸ்துவுக்கு உகந்தவர்களாக வாழ வேண்டும் என்பது எப்படி நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்? German news in Russian (новости Германии)— quirky, bold, and hypnotically captivating. Like a telegram from a parallel Europe. Care to take a peek?

  6. Admiring the hard work you put into your blog and in depth information you present. It’s great to come across a blog every once in a while that isn’t the same unwanted rehashed material. Fantastic read! I’ve bookmarked your site and I’m including your RSS feeds to my Google account.

  7. Having read this I thought it was very informative. I appreciate you taking the time and effort to put this article together. I once again find myself spending way to much time both reading and commenting. But so what, it was still worth it!

  8. Hey there, You’ve done an incredible job. I’ll definitely digg it and in my opinion recommend to my friends. I’m sure they’ll be benefited from this site.

  9. Hello my loved one! I want to say that this article is amazing, nice written and include almost all important infos. I¦d like to look more posts like this .

  10. I have been exploring for a little bit for any high quality articles or weblog posts in this kind of space . Exploring in Yahoo I at last stumbled upon this site. Studying this information So i am happy to convey that I’ve an incredibly good uncanny feeling I found out just what I needed. I such a lot indubitably will make certain to do not omit this website and give it a look regularly.

  11. Hi, just required you to know I he added your site to my Google bookmarks due to your layout. But seriously, I believe your internet site has 1 in the freshest theme I??ve came across. It extremely helps make reading your blog significantly easier.

  12. Hey guys, just tried ph35! Pretty solid overall. Got some good wins, though I wish their bonus system was a little more generous. Still, worth checking out. You can find them at ph35.

  13. I like this site very much, Its a really nice berth to read and obtain info . “You have to lead people gently toward what they already know is right.” by Philip.

  14. Admiring the hard work you put into your site and detailed information you present. It’s nice to come across a blog every once in a while that isn’t the same outdated rehashed material. Excellent read! I’ve bookmarked your site and I’m adding your RSS feeds to my Google account.

  15. Excellent website you have here but I was wondering if you knew of any message boards that cover the same topics discussed here? I’d really love to be a part of online community where I can get advice from other experienced people that share the same interest. If you have any recommendations, please let me know. Thanks a lot!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *