*வரங்களும் பயன்படுத்தும் முறைகளும்*
அருமை தேவஊழியர்களே, அன்பு தேவபிள்ளைகளே,
நாம் இந்தத் தொடரில் வரங்களை குறித்தும் அவைகளை பயன்படுத்தும் முறைகளை குறித்தும் ஆய்வுசெய்யவிருக்கிறோம்!
நிச்சயம் இந்தத் தொடர் உங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
“வரங்கள் என்றால் என்ன?” என்பது தொடங்கி, எத்தனைவிதமான வரங்கள் உண்டு? வரங்களை பெறுவது எவ்வாறு? ஒவ்வொரு வரத்தையும் பயன்படுத்துவது எவ்வாறு? என்று நாம் வேத அடிப்படையில் முதலாவது
விவரமாக ஆராய்வோம்.
*வரம் என்றால் என்ன?*
வரம் (gift) என்பதற்கு ஆங்கில அகராதியில் கீழ்காணுமாறு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
A thing given willingly to someone without payment.
பணம் செலுத்தாமல் ஒருவருக்கு விருப்பத்துடன் கொடுக்கப்பட்ட பொருள்.
தேவன் நமக்கு வரங்களை இலவசமாகவே தருகிறார். நாம் அதற்காக அவருக்கு எதுவும் செலுத்தவேண்டியதில்லை.
*”கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக* நம்மில் அவனவனுக்குக் *கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது”* என்றும் (எபேசி.4:7), *”நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே”* என்றும் (ரோமர் 12:6) பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது.
வரம் கிருபையாய் கொடுக்கப்படுகிற ஒன்று. அதற்காக நாம் தேவனுக்கு எதையும் செலுத்தவேண்டியதில்லை.
இலவசமாய் கொடுக்கிறதினாலேயே, அவியானவர் தமது சித்தத்தின்படியே அவனவனுக்கு வரத்தை பகிர்ந்து கொடுக்கிறார்.
(1 கொரி.12:11)
விசேஷித்த ஊழியருக்கு விசேஷித்தக் காணிக்கைக் கொடுப்பதனால், அவர் மூலம் வரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறவர்கள் தேவனுடைய சாபத்திற்கு ஆளாகநேரிடும். (அப்.8:14-23)
*”தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது”* என்று மனந்திரும்பிய மந்திரவாதி சீமோனை நோக்கி பேதுரு சொன்னது (அப்.8:20), வரங்களுக்காக பணத்தை செலவழித்து விசேஷித்த வரம்பெற்ற ஊழியர்களைத் தேடி ஒடுகிற கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கையாகும்!
தேவஜனங்களை
வரங்களை பெற்றுக்கொள்ள நடத்துவதற்காய் அவர்களிடம் விசேஷித்தக் காணிக்கையை வசூல் செய்யும் ஊழியர்கள் பூமியில் பெருஞ்செல்வந்தராய் வலம்வந்தாலும், இறுதியில் நாசமாய் (நரகத்திற்கு) போகவேண்டியிருக்கும் என்பதை அறியவேண்டும்!
“மேற்படி, வல்லமை வரங்களை நாங்கள்தான் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறோம், எங்களிடம் வந்தால் மட்டுமே அவை உங்களுக்குக் கிடைக்கும்” என்று விளம்பரப்படுத்துகிறவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டியது நமது பொறுப்பாகும்.
*எத்தனை விதமான வரங்கள் உண்டு?*
கிறிஸ்துவின் வரம், கிருபை வரம், ஆவியின் வரம் என்று மூன்றுவிதமான வரங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எபேசியர் 4:7-13 வரை சொல்லப்பட்டுள்ளது கிறிஸ்துவின் வரம் என்றும், ரோமர் 12:6-8 வரை சொல்லப்பட்டுள்ளது கிருபை வரம் என்றும், 1 கொரிந்தியர் 12:8-10 வரை சொல்லப்பட்டுள்ளது ஆவியின் வரம் என்றும் வகைப்படுத்துகிறவர் உண்டு.
அவரவர் புரிதலுக்கேற்றபடி வரங்களை வகைப்படுத்துகின்றனர்.
என்னுடைய புரிதலின்படி இரண்டுவிதமான வரங்கள் இருப்பதாகக் காண்கிறேன்.
1. ஆவியின் வரம் அல்லது ஆவிக்குரிய வரம்.
2. கிறிஸ்துவின் வரம் அல்லது கிருபை வரம்.
*1. ஆவியின் வரம் அல்லது ஆவிக்குரிய வரம்!*
அன்றியும், சகோதரரே, *ஆவிக்குரிய வரங்களைக்குறித்து* நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.
1 கொரிந்.12:1
வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே.
1 கொரிந்.12:4
*ஆவியினுடைய அநுக்கிரகம்* அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.
1 கொரிந்.12:7
எப்படியெனில், ஒருவனுக்கு *ஆவியினாலே* ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு *அந்த ஆவியினாலேயே* அறிவை உணர்த்தும் வசனமும்,
1 கொரிந்.12:8
வேறொருவனுக்கு *அந்த ஆவியினாலேயே* விசுவாசமும், வேறொருவனுக்கு *அந்த ஆவியினாலே* குணமாக்கும் வரங்களும்,
1 கொரிந்.12:9
வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
1 கொரிந்.12:10
இவைகளையெல்லாம் *அந்த ஒரே அவியானவர் நடப்பித்து,* தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் *பகிர்ந்து கொடுக்கிறார்.*
1 கொரிந்.12:11
மேற்காணும் வசனங்கள் ஆவிக்குரிய வரங்கள் அல்லது ஆவியின் வரங்களை குறித்துப் பேசுகின்றன.
ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், விசுவாசம், குணமாக்கும் வரங்கள், அற்புதங்களைச் செய்யும் சக்தி, தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளைப் பகுத்தறிதல், பற்பல பாஷைகளைப் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதல் ஆகியவை ஆவியின் வரங்கள் அல்லது ஆவிக்குரிய வரங்களாகும்.
*2. கிறிஸ்துவின் வரம் அல்லது கிருபை வரம்.*
*கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக* நம்மில் அவனவனுக்குக் *கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.*
எபேசியர் 4:7
ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, *மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார்* என்று சொல்லியிருக்கிறார்.
எபேசியர் 4:8
மேலும் *நாம் அனைவரும்* தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க *பூரண புருஷராகும்வரைக்கும்,*
எபேசியர் 4:11
பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
எபேசியர் 4:12
அவர், *சிலரை அப்போஸ்தலராகவும்,* சிலரைத் *தீர்க்கதரிசிகளாகவும்,* சிலரைச் *சுவிசேஷகராகவும்,* சிலரை *மேய்ப்பராகவும்,* *போதகராகவும்* ஏற்படுத்தினார்.
எபேசியர் 4:13
*நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே* நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் *தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன்* விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.
ரோமர் 12:6 *ஊழியஞ்செய்கிறவன்* ஊழியத்திலும், *போதிக்கிறவன்* போதிக்கிறதிலும்,
ரோமர் 12:7
*புத்திசொல்லுகிறவன்* புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன், *பகிர்ந்துகொடுக்கிறவன்* வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன், *முதலாளியானவன்* ஜாக்கிரதையாயிருக்கக்கடவன், *இரக்கஞ்செய்கிறவன்* உற்சாகத்துடனே செய்யக்கடவன்.
ரோமர் 12:8
மேற்காணும் வசனங்கள் கிறிஸ்துவின் வரம் அல்லது கிருபை வரத்தைப்பற்றிப் பேசுகின்றன.
அப்போஸ்தலர் ஊழியம், தீர்க்கதரிசன ஊழியம், சுவிசேஷ ஊழியம், மேய்ப்பர் ஊழியம், போதக ஊழியம், உதவி ஊழியம், புத்திசொல்லுதல், பகிர்ந்துகொடுத்தல், முதலாளியாயிருத்தல் (நிர்வகித்தல்), இரக்கஞ்செய்தல் ஆகியவை கிறிஸ்துவின் வரங்கள் அல்லது கிருபை வரங்களாகும்!
*கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக* நம்மில் அவனவனுக்குக் *கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.*
எபேசியர் 4:7
*நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே* நாம் வெவ்வேறான *வரங்களுள்ளவர்களானபடியினாலே, ……*
ரோமர் 12:6
மேற்காணும் வசனங்கள் கிறிஸ்துவின் வரமும் கிருபை வரமும் ஒன்றே என்பதை நிச்சயப்படுத்துகின்றன.
ஆவியின் வரம் மற்றும் கிறிஸ்துவின் வரம் குறித்து நாம் தொடர்ந்து ஆழமாக ஆராய்வோம்!
*– க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
கோயம்புத்தூர்.
8946050920
(தொடரும்…..)