கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய
வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி,
உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப்
பெருமைப்படுத்துவேன்; நீ
ஆசீர்வாதமாய் இருப்பாய்.
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை
ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச்
சபிப்பேன்; பூமியிலுள்ள
வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்;
லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது,
எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். ஆதியா 12:1-4
ஆதியா 12:1-4
1.உன்னைப்
பெரிய ஜாதியாக்கி
2.உன்னை
ஆசீர்வதித்து உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்
3.நீ
ஆசீர்வாதமாய் இருப்பாய் ஆதியாகமம்12 :1-4
ஆதியா 13:14-18
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும்,
மேற்கேயும் நோக்கிப்பார்.
நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும்
நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்;
ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும்
எம்மட்டோ, அம்மட்டும் நடந்து
திரி; உனக்கு அதைத்
தருவேன் என்றார். ஆதியா 13:14-18
1.இந்தப் பூமியை கொடுப்பேன்
2.உன் சந்ததியைப் பூமியின்
தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்
3. நீ எழுந்து நடந்து
திரி; உனக்கு தேசத்தைத் தருவேன்
அழைத்து
வந்த கர்த்தர் நானே என்றார்
பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத்
தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார். ஆதியா 15:7
ஆபிரகாம்
விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது
தேவன் உடன்படிக்கையை
ஏற்படுத்தினார்
பலிசெலுத்தி இரத்தினால் உடன்படிக்கையை ஏற்படுத்தினார்
அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும் ஆதியா 15:18
இந்த
தேசத்தை உனக்கு தருவேன் என்றார்
எமோரியரும்,
கானானியரும், கிர்காசியரும்,
எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக்
கொடுத்தேன் என்றார். ஆதியா 15:21
நித்திய
உடன்படிக்கையை தேவன் ஆபிரகாம் உடன் ஏற்படுத்தினார்
உனக்கும் உனக்குப் பின்வரும் உன்
சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும்,
உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே,
என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். ஆதியா 17:7
உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். ஆதியா 17:11
உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை
விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக அவனுடன் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள்
நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய
உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். ஆதியா 17:19
உடன்படிக்கையின் நகழ்வு
இரத்தால் ஆன ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார்
அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச்
சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான். ஆதியா 15:8-9
அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும்,
மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில்
கொண்டுவா என்றார். ஆதியா 15:8-9
அடையாளங்களினாலும்
அற்புதங்களினாலும் நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும்
பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும்,
தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து
நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். எபிரேயர் 2:3-4
ஆபிரகாமின்
விசுவாசம்
–
தேவனுடைய
வார்த்தையை ஆபிரகாம் கேட்டபோது அவன் 75 வயது உடையவனாய் இருந்தான்
ஆதியா 17-1-2 இவன் ஈசாக்கு பிறப்பைக் குறித்து ஆபிரகாம்
இடத்தில் பேசும்போது ஆபிரகாமுக்கு வயது 99 ஆக இருந்தது அப்போதும் அவன்
விசுவாசித்தால்
தேவன்
ஆபிரகாமை அழைத்த பிறகு 25 ஆண்டுகள் கழித்துதான் ஈசாக்கு பிறந்தார்
ஆபிரகாமின்
குறித்து வேதம் சொல்லும் போது அவன் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லப்பட்டிருக்கிறது ஆதியா 20:7
விசுவாசித்தால் அது நீதியாக
எண்ணப்பட்டது
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர்
அவனுக்கு நீதியாக எண்ணினார்.
ஆதியா 15:6
நீங்களும்
ஆபிரகாமை போல விசுவாசத்தில் உறுதியாய் நின்று தேவனுடைய வழிகளை அறிந்து தேவனுடைய
பாதையில் உங்களை நடத்திச் செல்லுங்கள் தேவன் உங்களோடு வாராக ஆமென்
Reading your blog is always a joy; your writing mesmerizes me every time.
I’m impressed by your capacity to turn even the most mundane subjects into engaging writing. Well done to you!
This blog post has opened my mind to a whole new way of thinking, thanks.
Your blog has become my go-to guide on this particular subject.
Your dedication and passion shine through in every word you write, motivating readers to embrace their own passions.