மறுபடியும் பிறந்த ஒருவர் எப்படிப்பட்டப் பாவத்தை செய்கிறார், எவ்வாறு செய்கிறார் என்பதை பொருத்தே, அதற்கான பின்விளைவுகளும் இருக்கும்.

பிறருக்கு இடறலை உண்டாக்குவதன் விளைவு!

அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.
மத்தேயு 18:1

பரலோகராஜ்யத்தில் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் சீஷர்களுக்கு இருந்தது. ஒவ்வொருவரும் மற்றவர்களைவிட பெரியவர்களாக இருக்கவேண்டும் என்று எண்ணினர்.

அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து: அதைக்குறித்து கேட்டேவிட்டார்கள்! .

இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று அவர்களை எச்சரித்தார்.
(மத்.18:2,3)

“பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான்” என்று கேட்கிற அவர்கள், தங்கள் மனமேட்டிமையினால் பரலோகத்தில் பிரவேசிக்கிறதற்கு தகுதியற்றவர்களாய் இருக்கிறதை ஆண்டவர் காண்பித்தார்.

“ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்” என்று அவர்களுக்கு ஆலோசனையும் சொன்னார். (மத்.18:4,5)

எளிய சிந்தையுள்ளவர்களாய் இருப்பதும், எளியவர்களை நமக்கு சமமாக ஏற்றுக்கொள்வதுமே பரலோக வாழ்வுக்கான தகுதி என்பதை அவர்களுக்கு ஆண்டவர் உணர்த்தினார்.

தம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிற சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும் என்றும் கடுமையாக எச்சரிக்கிறார் (மத்.18:6)

தம்மிடத்தில் விசுவாசம் வைக்கிற எளியவர்களை அவமதிப்பதின் மூலம் அவர்கள் தம்மைவிட்டு பின்வாங்கும்படி செய்கிற, அல்லது எளிய சிந்தையுள்ள விசுவாசிகள் தங்களைப்போலவே மேட்டிமையானவர்களாக மாற வழிகாட்டுகிற தமது சீஷர்கள் நரகாக்கினையடைவார்கள் என்று எச்சரிக்கிறார் இயேசு.

எளியவர்களை தங்களுக்கு சமமாக ஏற்றுக்கொள்ளாத, தங்களை பிறரிலும் மேன்மையானவர்களாக எண்ணுகிற மறுபடியும் பிறந்தவர்கள், பிறரை தங்களிலும் மேன்மையானவர்களாய் எண்ணத்தக்கதாக மனத்தாழ்மையுள்ளவர்களாய் (பிலிப்.2:3) மாறாமலேயே மரித்துப்போனால், அவர்கள் நரகாக்கினை அடைவது நிச்சயம்!

“இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” என்கிற எச்சரிக்கையை கிறிஸ்தவர்கள் கவனித்து நடக்கவேண்டும். (மத்.18:7)

கிறிஸ்தவர் சிலரின் முரண்பாடான வாழ்வினால் கிறிஸ்துவைவிட்டு சிலர் பின்வாங்கிப்போகும் நிகழ்வுகள் நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆகிலும் ஒருவரின் பின்மாற்றத்திற்கு காரணமாகும் கிறிஸ்தவருக்கு கொடிய நரகதண்டனை உண்டு என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

கிறிஸ்துவின் சுபாவத்திற்கு முரணான சுபாவத்திலிருந்து உண்மையாய் மனந்திருப்புகிறவர் நரகாக்கினைக்கு தப்பலாம்!

             (தொடரும்....)
  • க. காட்சன் வின்சென்ட்
    (Biblical Teaching Ministry)
    கோயம்புத்தூர்.
    8946050920
Please enable JavaScript in your browser to complete this form.
Name

By admin

3 thoughts on “01# மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்?”
  1. Wow, amazing blog layout! How long have you been blogging for?
    you made blogging look easy. The overall look of your site is great,
    let alone the content!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dear in Christ,

Please fill the form and look into the Website…

Please enable JavaScript in your browser to complete this form.
Name