1.வேதம் சொல்கிறது நாம் எல்லா சூழ்நிலையிலும் தேவனை நோக்கி பார்க்க வேண்டும் .
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் நான் அசைக்கப்படுவதில்லை என்று தாவீது சொல்வதை நம்மால் பார்க்க முடிகிறது ஏனென்றால் நாம் படைக்கப்பட்டது தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அதுவே தேவ சமாதானம் எண்ணப்படும் .
பல வேளைகளில் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலையினாலும். நம்மிடம் உள்ள சுபாவங்களினால் இந்த உலகத்தில் நாம் ஈர்க்கப்படடவர்களாய் இருப்பதால் சமாதானத்தை இழந்தவர்களாய் இருக்கிறோம்.அதற்கு காரணம் தேவனோடு உள்ள உறவில் நம்முடைய அன்பு குறைந்த வர்களாய் இருக்கிறோம் எனபுரிந்து கொள்ளவேண்டும்.தேவனோடு அன்பு குறையும் போது சமாதானமும் குறையும்.
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். சங்கீதம் 16:8-9
2. கர்த்தருடைய மகிமை என்றால் என்ன?
இந்த பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று ஏசாயா சொல்லியிருக்கிறார்.அப்படியானால் முழு உலகமு அவரை மகிமை படுத்தவே படைக்கப்பட்டது.
ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். ஏசையா 6:3
3.தேவனிடமிருந்து அவருடைய மகிமையை ஒருநாளும் பிரிக்க முடியாது
யாத்தி 33:17-19
அவர் புதிய ஏற்பாட்டில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவாக மாம்சத்திலே இந்த பூமியிலே வெளிப்பட்டபோது கூட அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் வாசம் பண்ணினார் பார்க்கிறோம் அந்த மகிமை ஒரே பேரான குமாரன் என்று பார்க்கிறோம். தேவனுடைய மகிமையை எப்போதுமே பிரிக்க முடியாதது
அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.யோவான் 1:14
பழைய ஏற்பாட்டிலே சொல்லப்படும்போது கூட அவனுடைய மகிமையை குறித்தும் பேசப்பட்டிருக்கிறது அவருடைய மகிமையானது நித்திய நித்தியமானது.
அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: அப்போ 7:2
அவருடைய மகிமையை குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவருடைய சுபாவத்தை நாம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் தேவன் தன்னில் தானே நிறைவு உள்ளவராக இருக்கிறார் நம்முடைய வாழ்வு நம்முடைய குறிக்கோள் நம்முடைய செயல்கள் எல்லா விஷயத்திலும் தேவனை மகிமைப்படுத்தும் படியாக இருக்க வேண்டும்.
ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச்சொல்லுங்கள்.
கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது. 1நாளாக 16:24-27
நாம் தேவனால் படைக்கப்பட்டவர்கள் அவர் சிருஸ்டிகர் நாம் அவரால் படைக்கப்பட்டவர்கள் .எனவே நாம் அவரைத் தொழுது கொள்ளக் கூடியவர்களாக மட்டுமே இருக்க முடியும்.
ஆண்டவர் யார் என்று தெரியாது என ஒருவரும் சொல்ல முடியாது தேவன் இந்த பூமியை சிருஸ்டித்த போது எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்திருக்கிறார் எனவே படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதன் பூமியிலுள்ள வற்றை பாற்க்கும் போது அது தேவனால் உண்டானது என்று அவன் அறிந்திருப்பான் இதை ஒருவர் படைத்திருக்கிறார் என்று அவன் கண்டிப்பாக உணர வேண்டும் அவருடைய மகிமை எவ்வளவு நிறைந்ததாக இருக்கிறது என்று அப்போதுதான் அவனால் புரிந்து கொள்ள முடியும்.
சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
4. தேவனுக்கு எப்படி மகிமை செலுத்துவது?
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். 1 கொரிந்தியர் 10:31
மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 6:1-2
நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய எல்லா காரியங்களும் தேவனுக்கு உண்மையுள்ள காரியங்களாக பகுத்துப் பார்த்து செய்ய வேண்டும் ஏனென்றால் அவர் நீதி உள்ள தேவனாயிருக்கிறார். நாமும் நீதி உள்ளவர்களாக நடக்கவேண்டும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வரும்போது சொன்னார் பரிசேயர்களை காட்டிலும் உங்களுடைய நீதி அதிகமாய் இருக்க வேண்டும் என்று சொன்னார்.
மாயமாலம் இல்லாதவர்களாக, காணிக்கை ,உபவாசம் எந்த காரியங்களை நாம் செய்தாலும் அவைகளை பெருமைக்காகவும் மற்றவர்களுக்காகவும் செய்யாமல் தேவனுக்காக மாத்திரமே நாம் செய்ய வேண்டும் 1 கொரிந்தியர் 10:31 நீங்கள் எதை செய்தாலும் புசித்தாலும் குடித்தாலும் அது தேவனுடைய மகிமைக்காக செய்ய வேண்டும் என்று சொல்கிறார் .
ஆபிரகாம் விசுவாசித்தான் அது அவனுக்கு மகிமையை கொண்டு வருதது ரோமர் 4:19-20 ஆதியாகமம்17:5, 17 ஆபிரகாமின் விசுவாசம் உண்மையாக விசுவாசமாக இருந்தது எனவே அது தேவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது நம்முடைய வாழ்க்கையிலும் அனுபவங்களிலும் ஒவ்வொரு முறையும் இப்படியாக நாம் விழுந்து எழுந்து இருக்கவேண்டி இருக்கும். விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிறோமா என்பதை பொறுத்துதான் நம்முடைய சந்தோஷம் சமாதானம் அமையும்.
நம் துன்பம் வரும்போதெல்லாம் தேவனை சார்ந்து வாழ்கிறோமா என்பதுதான் நாம் கவனிக்க வேண்டியது. ஏனென்றால் நாம் பெரும்பாலும் துன்பமும், துக்கமும், வியாதியோ வருகிறபோது தேவனை சார்ந்து கொள்ளாமல் மனிதர்களையே சார்ந்த கொள்கிறோம் .
ஆதியாகமம் 17:17 ஆபிரகாமை எடுத்துக்கொள்ளுங்கள் அவன் விசுவாசித்து வந்தபோது அவனுக்கு பிள்ளை இல்லை, தேசம் இல்லை, வாக்குதத்தம் இல்லை உடன்படிக்கை இல்லை எதுவுமே இல்லை போகிற பாதை எங்கே என்று தெரியாது போய் சேருகிற இடமும் தெரியாது. ஆனாலும் அவன் விசுவாசித்தான் என்று பார்க்கிறோம் .அதேபோல அவனுக்கு ஈசாக்கு பிறந்த பிறகு தேவன் ஈசாக்கை பலி கொடுக்க சொன்னபோது அவன் தன்னுடைய மகனை பலி செலுத்த மோரியா மலைக்கு கொண்டு செல்வதை நம்மால் படிக்க முடிகிறது. எனவே விசுவாசம் என்பது நம்முடைய நேரத்திற்கும், காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மாற்றிக் கொள்ளக் கூடியது அல்ல, எல்லா சூழ்நிலையிலும் நாம் தேவனை மாத்திரம் சார்ந்து இருக்கிறோமா என்று அறிந்து கொள்ள வேண்டும் காரணம் ஆபிரகாமுக்கு ஒரே மகன் தான் இருந்தான் ஈசாக் ,ஆனாலும் அவனை பலி கொடுக்க சொன்னபோது அவன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பலி கொடுக்க சென்றான். அவருடைய ஒரே மகன் 100 வயதில் பிறந்தவன். அதற்குப்பின் ஆக வாரிசு இல்லை.வாக்குத்தத்தத்தின் வாரிசு அவனைக் கொண்டு முழு உலகத்தையும் இரட்சிப்பைப் கொண்டு வரப்போகிறேன் என்று தேவன் பேசியிருந்தார். ஆனால் இவைகள் எல்லா வற்றையும் குறித்து அவன் எந்த கேள்வியும் கேட்காமல் தன் மகனை பலிகொடுத்த அழைத்து சென்றான் என்று தான் பார்க்க முடிகிறது. இந்த விசுவாசம் மிகவும் நாம் யோசித்து பார்க்க வேண்டிய விசுவாசம் அப்படியாக மனிதர்களால் இருக்க முடியுமா இதுபோல விசுவாசத்தை வைக்க முடியுமா?
ஏனென்றால் முழு சொத்துக்கும் அவனுடைய வம்ச தலைமுறைக்கும் எல்லாவற்றுக்கும் அவன் ஒருவனே வாரிசாக இருந்தபோதிலும் அவன் அதை செய்ய முழுமனதாய் ஒப்புவித்தான்.
எனவே தான் ஆண்டவர் சொன்னார் அவன் விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
சங்கீதம் 100 அதிகாரம் படிக்கவும்
தொடரும் …….