கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து
நான் வெட்கப்படேன்; முன்பு
யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு
உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. ரோமர் 1:16
மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ
சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள். அப்போ 17:32
சிலுவையைப்பற்றிய உபதேசம் பைத்தியமாயிருக்கிறது
சிலுவையைப்பற்றிய உபதேசம்
கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.1கொரி 1:18
ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள்
அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக்
கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார். 1கொரி 1:24
ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது,
அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது,
நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி
சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி. 2தீமோத் 1:8
நீங்கள் அறியாததைத்
தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள்
அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. யோவான் 4:22
அவர்கள்
இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும்,
மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
பிதாக்கள்
அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும்
அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட
சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென். ரோமர்
9:4-5
சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க,
காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு,
ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்,
ரோமர் 11:17
அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய
இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். மத்தேயு 15:24
நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்;
நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. யோவான் 4:22
இது இயேசு நமக்கு கொடுத்த கட்டளை
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி,
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல
நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு 28:19-20
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த
பூமிக்கு வரும்போது அவர் கடைசியாக மத்தேயு
28:19-20 ஆம் வசனத்தில் செல்லும்போது நீங்கள்
புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீசனுக்கு பிதா குமாரன் பரிசுத்த ஆவி
நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள்
நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரே குறித்து
நாம் சொல்வதற்கு நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும்
சுவிசேஷத்தை குறித்து பேசுவதற்கு
ஒரு நாளும் நான் வெட்க படாமல் இருக்க வேண்டும்
நாம் தேவனை குறித்து சொல்வது
மாத்திரமல்ல ஆண்டவரை குறித்ததான உபதேசத்தை அவர்களுக்கு நாம்
பண்ண வேண்டும் என்று தேவன் நம்மை முன் குறித்திருக்கிறார்.
அப்படியாக நாம் தேவனை குறித்ததான
காரியங்களை மற்றொரு உபத்வ்சம் செய்யும்
போது மற்றும் வழிநத்தும் போது
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு
இருந்து நம்மை வழிநடத்துவார்
உங்களுடைய வழிகளை தேவனுடைய பாதையில்
நடத்திச் செல்லுங்கள்
கர்த்தர் உங்களோடு இருப்பாராக ஆமென்