எருசலேம் வாசல்

நேபுகாத்நேச்சார் காலத்தில் இஸ்ரவேலில் வாழ்ந்த மக்கள் பாபிலோன் தேசத்துக்கு  சிறைபிடிக்கபட்டுகொண்டு
போகப்பட்டார்கள்.அப்போது
JESUSALEM நகரத்தை இடித்து
தீக்கிரையாக்கினார்கள் .அப்படியாக இடிக்கப்பட்டநகரத்தை மீண்டும் எழுப்பிகட்ட
நெகேமியா
  எருசலேமிக்கு வருகிறான்.அப்போது
அவனால் புதிப்பித்து கட்டபட்ட
  வாசல்கள்தான் JESUSALEM சுற்றி உள்ள 10 வாசல்கள் . 

 

1.நெகேமியா 3:1 

 

1. அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும்,
அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டுவாசலைக் கட்டினார்கள்;
அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை வைத்து, மேயா என்கிற கொம்மை முதல்
அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டிப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.


 

1.ஆட்டு வாசல்: நெகே 3:1 இவை எதற்கு
பயன் படுத்தப்பட்டது

1.ஆடு ,மாடுகளை
எருசலேமிக்குல் கொண்டு செல்வதற்க்கு பயன்படுத்தப்பட்டது.
 

2.பழைய ஏற்பாட்டின் முறைமைப்படி
தேவாலத்தில் பலி செலுத்த மிருகங்களை இந்த வழியாகத்தான் கொண்டு சென்றார்கள்.
 

 இதில் உள்ள சிறப்பு என்னெவேனில்

 3.இந்த வாசலுக்கு மட்டும்
புதிபித்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
 

 

ஆவிக்குரிய அர்த்தம். 

 1.பாவத்தில் இருந்த நம்மை
மீட்கவும்
 

 2.இயேசு நமக்க மரித்தார் என்ற
அனுபவத்தை குறிக்கிறது.
 

 3.இயேசுவின் முதலாம் வருகை
நினைவுபடுத்தும் வகையில் இருக்கிறது.
 


 

யோவான் 1:29 

மறுநாளிலே
யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ
, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

 4.ஒரு மனிதன் பாவத்தை நீக்கி
பரிசுத்தம் அடைய வேண்டுமானால் இந்த வாசலின் வழியாய் பிரவேசிக்கவேண்டும். யோவான்
10:7-9 

 ஆதலால்
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எனக்கு
முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்
; ஆடுகள் அவர்களுக்குச்
செவிகொடுக்கவில்லை.

நானே
வாசல்
, என் வழியாய் ஒருவன்
உட்பிரவேசித்தால்
, அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். யோவான் 10:7-9 

 

 2.மீன் வாசல்: நெகே 3:3 இவை எதற்கு
பயன்படுத்தப்பட்டது

 

மீன்வாசலை
அசெனாவின் குமாரர் கட்டினார்கள்
; அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும்
போட்டார்கள்.
 நெகே 3:3

 1.மத்திய தரைகடல்,கலிலேயாவில்
பிடிக்கப்பட்ட மீங்களை இந்த வாசலின் வழியாகத்தான் கொண்டுவருவார்கள்.
 

 2.இந்த மீன் வாசல் கிறிஸ்துவின்
சுவிஷேத்திற்கான பிரதான பணியை நினைவு கூருகிறது. மத்தேயு
4:18-20 

இயேசு
கலிலேயாக் கடலோரமாய் நடந்து போகையில்
, மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு
என்னப்பட்ட சீமோனும்
, அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில்
வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது
, அவர்களைக் கண்டு:

 

என்
பின்னே வாருங்கள்
, உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.

உடனே
அவர்கள் வலைகளை விட்டு
, அவருக்குப் பின் சென்றார்கள். மத்தேயு 4:18-20

3.முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த
இயேசு
,அப்போஸ்தலர்களுக்கு அடையாளமாக சொல்லப்படுகிறார்கள். 

4.அதுவரை யூதர்களுக்கு மட்டும்
சொல்லிவந்த சுவிஷேசம் புறஜாதிகளுக்கும் பூமியின் கடைசி பரியத்தம் வரை செண்றது.
 

 


 

3.பழைய வாசல் : நெகே 3:6 இவை எதற்கு
பயன் படுடத்தப்பட்டது

பழைய
வாசலைப் பசெயாசின் குமாரனாகிய யோய்தாவும்
, பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக்
கட்டினார்கள்
; அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும்
பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள்.
 நெகே 3:6

 1.தேசத்தில் ஏற்படும்
பிரச்சைனைகளையும்

குடிகளுக்கு ஏற்படும் பிரச்சைனைகளையும்,தீர்த்து
வைக்க மூப்பர்கள் இந்த வாசலை பயன் படுத்தினார்கள்.
 

2.யோசுவா 20:4 அடைகளப்பட்டணத்தை
எப்படி அமைக்கவேண்டும் என்று தேவன் சொல்லி இருக்கிறார்.
 

அந்தப்
பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன்
, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய
மூப்பரின் செவிகள் கேட்க
, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத்
தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு
, தங்களோடே குடியிருக்க அவனுக்கு
இடம் கொடுக்கக்கடவர்கள்.
 யோசுவா 20:4

3.ரூத் 4:11 போவாஸ்
ரூத்தை சுதந்திரம் மாக்கி கொண்டது இந்த வாசலில்தான்.
 

இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப் போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே
அவன் பேரை நிலைநிறுத்த
, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை
எனக்கு மனைவியாகக் கொண்டேன்
; அதற்கும் இன்றைய தினம் நீங்கள் சாட்சி என்றான்.

அப்பொழுது
ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள்
சாட்சிதான்
; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர்இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த
இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ
எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து
, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய். ரூத் 4:10-11

1.வேததின் அடிப்படையிலும்,சத்தியத்திலும்
நாம் வாழவேண்டும்
  இந்த வசனங்கள்  நினைவுபடுத்துகிறது. 

 


4.பள்ளத்தாக்கு வாசல் : நெகே 3:13 இவை எதற்கு
பயன் படுடத்தப்பட்டது

1.HINNOM என்ற வாசலுக்கு போகிறவழியில்
இருந்ததால் இதற்கு பள்ளத்தாக்கு வாசல் என்றழைக்கப்பட்டது.
 

2.நெகேமியா எருசலேமை
சுற்றிப்பாற்க இந்த வாசலில் இருந்துதான் தொடங்கினார். நெகே
2:13 

நான்
அன்று ராத்திரி பள்ளத்தாக்கின் வாசல்வழியாய்ப் புறப்பட்டு
, வலுசர்ப்பத் துரவைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன
அலங்கத்தையும்
, அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும்
பார்வையிட்டேன்.
 நெகே 2:13

3.நம் வாழ்வில் பள்ளத்தாக்கு என்ற
சோதனை
,பிரச்சனை வழியாக போகலாம்.அவை நம் ஆவிக்குரிய வாழ்வில்
பலப்படவும்
,வளரவும், முன்றேவும்
உதவுகிறது என்பதை காட்டுகிறது.
 

 

4.சோதனை கிறிஸ்தவ வாழ்கையின்
தாழ்மையின் அனுபவத்தை தருகிறது.
 

என்
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்
; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய்
நிலைத்திருப்பேன்.
சங்கீ  23:4

கி.பி.390- பின் ஏற்பட்ட
மாற்றத்தை விலக்குகிறது. இந்த காலகட்டத்தில்தான்
CONSTANTINE காலம்
தொடங்கியது.அரசின் அங்கிகாரம் கிடைத்த அந்த நேரம் கிறிஸ்தவர்கள் பள்ளத்தாக்கு
போன்ற ஒரு சரிவை சந்தித்தார்கள்.
 

5.புறஜாதியரின் பழக்கவழக்கம்,விக்கிரக
ஆராதனை
,இவைகள் தொடங்கியதி இங்கிருந்துதான்.இவை சபையின்
இருண்டகாலம்.
 


 

5.குப்பை மேட்டு வாசல் : நெகே 3:14 இவை எதற்கு
பயன் படுடத்தப்பட்டது
?

குப்பைமேட்டு
வாசலைப் பெத்கேரேமின் மாகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா
பழுதுபார்த்து அதைக் கட்டி
, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும்
போட்டான்.
 நெகே 3:14

1.எருசலேமின் குப்பைகளையும்,கழிவுகளையும்
இந்த வாசல் வழியாகத்தான் கொண்டுவரப்பட்டு
HINNOM பள்ளத்தாக்கில்
கொட்டப்பட்டன.
 

2.ஒரு தேசத்தின் சுகாதரத்திற்காக
குப்பைகளை எப்படி வெளியேற்றப்படுகிறதோ.அதே போல் நம் வாழ்கையில் சுத்திகரிப்பு
மிகவும் அவசியம். என்பதை இந்த வாசல் நினைவுப்படுத்துகிறது.

  1. நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத்
    தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது
  2. ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப்
    புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
      1கொரிந் 7:1-2 

 

விக்கிரஆரதனை,False Teaching துர்உபதேசம்
தோண்றியது
 இது காட்டுகிறது. 

 6.ஊறுண்ணி வாசல் : நெகே 3:16 

 

அவனுக்குப்
பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய அஸ்பூகின் குமாரன் நெகேமியா
தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடமட்டாகவும்
, வெட்டப்பட்ட குளமட்டாகவும், பராக்கிரமசாலிகளின்
வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.

1.இது சிலோவாம் குளத்திற்க்கு
அருகில் இருந்த வாசல்.மக்கள் தேவாலயத்திற்க்கு செல்லும் முன்பு இந்த வாசல்
வழியாகத்தான் தங்களை சுத்திகரித்துக்கொண்டு செல்வார்கள்.
 

2.பள்ளத்தாக்கு வாசலை கடந்து,குப்பைகளைகளைந்து
போட்டு வருகிறவன்
,ஜீவத்தண்ணீர் அனுபவத்தை இந்த வாசல் விளக்குகிறது. 

 இயேசு என்னிடத்தில் விசுவாசமாய் இருந்தால் பரிசுத்த
ஆவியின் மூலம் ஜீவதண்ணீர் ஒடும் .

வேதவாக்கியம்
சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து
ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
 யோவான் 7:38

 கி.பி.1500-1600 சபையின்
மறுமலர்ச்சி தொடகியது.
 

 

3.பைபிள் அச்சிடவும்,மக்களின்
கைகளில் கிடைக்கவும்
,வேதத்தை அறியவும். 

கிருபையினால் விசுவாசத்தை கொண்டு இரச்சிப்பு என்பதை
மக்கள் உணர்ந்து கொண்டகாலம்
  இதுவே. 


 

7.தண்ணீர் வாசல் நெகே 3:26 

 

ஓபேலிலே
குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசலுக்கு
வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள்.
 நெகே 3:26

1.இது ஊருண்ணி வாசல் அருகில்
இருந்தது.
 

2.தீயோன் என்ற ஆற்றுக்கு அருகில்
இது இருந்தப்படியால் தண்ணிர் வாசல் என்றழைக்கபட்டது.
 

3.ஊறுண்ணீ வாசல் பரிசுத்த ஆவிக்கு
அடையாளமாகவும்
, தண்ணீர் வாசல் கர்த்தரின்
வார்த்தைக்கு உண்டான சித்திகரிப்பை குறிக்கிறது.
 

 

தாம்
அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து
, பரிசுத்தமாக்குகிறதற்கும், எபேசி 5:26

வாலிபன்
தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்
? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே. சங்கீதம் 119: 9

4. கி.பி.1628-1688 இடைப்பட்ட
காலத்தை குறிக்கிறது.இந்த காலகட்டத்தில் தான் வேதத்தை அதிகமாக பிரங்கிக்கிற
பரிசுத்தவான்கள். தோன்றினார்கள்.
 

 

1.JOHN BUNYAN 1628-1688 

 2.CHARLES SPURGEON 1834-1892 

 3.WILLIAM CAREY 1761- 1834 

 4.DWIGHT.MOODY 1837- 1899 

 


 

8.குதிரை வாசல்: நெகே 3:28 

குதிரைவாசல்
முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப்
பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
 நெகே 3:28

1.எருசலேமின் போருக்கான குதிரைகளை
தாயார்படுத்தும் லாடம் அருகில் இந்த வாசல் இருந்ததால் இதற்கு குதிரை வாசல்
என்றழைக்கப்பட்டது.
 

2.யுத்தத்திற்கான குதிரைகளை இந்த
வாசல் வழியாக கொண்டு செல்வார்கள்.
 

3.இது தண்ணிர் வாசல் அருகில்
இருந்தது.
 

4.குதிரை என்றால் யுத்தம். நாமும்
ஆவிக்குரிய யுத்ததை செய்ய ஆயத்தப்படுத்துவதை இது காட்டுகிறது.
 

5. சரீர பலத்தினால் அல்ல, ஒருவன்
பரிசுத்த ஆவியைக்கொண்டு செய்யும் யுத்தம் அவனை வெற்றியடைய் செய்யும்.
 

 பாவத்திற்கு எதிராய் போராட நமக்கு பலன் தேவை. 

 பாவத்திற்கு
விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும்
எதிர்த்துநிற்கவில்லையே.
 எபிரே 12:4 

6.கி.பி.1900 – விஞ்ஞான
ரீதியில் இந்த காலத்தில் முதாம் யுத்தம்
,இரண்டாம் உலக
யுத்தம் நடந்தது.
 

இந்த யுத்தம் குதிரை வாசலை நினைப்படுத்துகிறது. 

 


 9.கிழக்கு வாசல் : நெகே 3:29 

 அவர்களுக்குப்
பின்னாக இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப்
பழுதுபார்த்துக் கட்டினான்
; அவனுக்குப் பின்னாகக் கிழக்கு வாசலைக் காக்கிற
செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான்.
 நெகே 3:29

1.கிழகே ஒளிவமலைக்கு எதிராய்
இருந்தபடியால் கிழக்கு வாசல் என்றழைக்கப்பட்ட்து.
 

2.இயேசுவின் இரண்டாம் வருகைக்கு
அடையாளமாகவும்.
 

3.இயேவின் வருகை,அவர் உலகத்தை
நியாயம்தீர்க்கவும்
,நித்தியல் அவரோடு கூட நம்மை சேர்த்துக் கொள்ளவும்
அடையாளமாகவும்
, இது உள்ளது. சகரியா 14:4 அப்போஸ் 1:11-12 வெளி 22:20 

 அந்நாளிலே
அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்
; அப்பொழுது மகா பெரிய
பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப்
பிளந்துபோம்
; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். சகரியா 14:4

 

 10 மிக்காட் வாசல் MIPHKAD நெகே 3:31 

 அவனுக்குப்
பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே
நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும்
இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்.
  நெகே 3:31

1.இந்த எபிரேய
வார்த்தை—கணக்கெடுப்பு
,முன் குறித்தல் என்று சொல்லப்படுகிற்து. 

2.இந்த வாசல் அருகில் தான் தாவீது
தன் சேனைகளை குறித்து பேசி ஆய்வு செய்வான் என்று சொல்லப்படுகிறது.
 

 நம் உள்ளங்களை ஆராய்கிற தேவன் நாம் கடைசி நாளில்
நியாயம் தீர்க்க போகிறார் இந்த வாசல் அடையாளப்படுகிறது.
 

 4.  1 கொரி 4:4, 
 2
கொரி 5:10 

என்னிடத்தில்
நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்
; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே. 1 கொரி 4:4

 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது
தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு
, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக
வெளிப்படவேண்டும்.
  2கொரி 5:10

 தேவன் இரண்டாம் வருகையில் அவர் இந்த உலகை நியாயம்
விசாரிப்பார் என்றும் அடையாளப்படுத்தப்படுகிறது .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dear in Christ,

Please fill the form and look into the Website…

Please enable JavaScript in your browser to complete this form.
Name