தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச்
சிருஷ்டித்தார்
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது
ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும்,
பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச்
சிருஷ்டித்தார், அவனைத்
தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியா
1:26-27
தேவன் வாயை உண்டாக்கினவர்
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்?
ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? யாத்திரா 4:11
உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப்
பெற்ற தேவனை மறந்தாய். உபாகம் 32:18
தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.
எனக்கு ஜீவனைத் தந்ததும்
அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்;
உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது. யோபு 10 :11-12
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல,
அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும்,
அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம். சங்கீதம் 100:3
நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு
அலங்கரிப்பு வேண்டியதில்லை.
சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல்,
அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு,
தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து,
இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். 1கொரிந் 12:24-25
தேவன் தமது சித்தத்தின்படி,
அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். 1கொரிந் 12:18
பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ
அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ?
அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. ஏசாயா 40:28
நாள் உண்டகாததற்கு முன்னும் நானே
இருக்கிறேன்; என் கைக்குத்
தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான்
செய்கிறதைத் தடுப்பவன் யார்? ஏசாயா 43:18
அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில்
வெளிப்படுத்துவார், அவரே
நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி
கர்த்தாவும்,
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில்
வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில்
ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்;
அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
1தீமோத் 6:15-16
நித்தியமும் அழிவில்லாமையும்
அதரிசனமுமுள்ள ராஜனுமாய்,
தாமொருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1தீமோத் 1:17
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று
அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும்
இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல்
சொல்லிக்கொண்டிருந்தன.
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள்,
மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,
இருபத்துநான்கு மூப்பர்களும்
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து,
சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு,
தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:
கர்த்தாவே,
தேவரீர், மகிமையையும்
கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்,
நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும்
சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.வெளி 4:8-11
இனி காலம் செல்லாது;
ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய்
அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய
சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,
வானத்தையும் அதிலுள்ளவைகளையும்,
பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும்,
சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். வெளி 10:6-7
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
அவரே அதைக் கடல்களுக்கு மேலாக
அஸ்திபாரப்படுத்தி, அதை
நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். சங்கீதம் 24:1-2
கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள
எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே
ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
யாத்திரா 20:11
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். சங்கீதம் 121:2