அறிமுகம்- Part-3 யூத-எதிர்ப்பின்-Anti-semitism

வேதங்கள் மற்றும் பவுலின் நிலைப்பாடு

சிலர் பவுலின் எழுத்துக்களை யூத-எதிர்ப்புடன் தொடர்புபடுத்தும் விவாதம் இருந்தாலும், பவுல் யூத-எதிர்ப்பாளராக இருக்கவில்லை.

1. பவுல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்: பவுல் எழுதியதாகக் கருதப்படும் ஒரு பகுதியில் (1 தெசலோனிக்கேயர் 2:14-16), யூதர்கள் ஆண்டவராகிய இயேசுவையும், தங்கள் சொந்த தீர்க்கதரிசிகளையும் கொன்று, கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அறிஞர் (F. F. Bruce) இத்தகைய கருத்துக்கள் ‘பொருத்தமற்றவை’ மற்றும் ‘ஒருவேளை உண்மையாக இருக்காது’ என்று அறிவிக்கிறார்.

மேலும், யூதர்கள் தம்முடைய மேசியாவைக் கண்டித்ததில் மிக அதிகமாக ஈடுபட்டிருந்தனர் என்று பவுல் நம்பினார் (1 தெசலோனிக்கேயர் 2:14-15).

2. பவுலின் யூத மக்களுக்கான அன்பு: யூத-எதிர்ப்பு என்பது பவுலின் குணத்திலிருந்து பார்க்கும் போது. அவர் வரலாற்றில் யூத மக்களை மிகவும் உணர்வுபூர்வமாக நேசித்தவர்களில் ஒருவராக இருந்தார்.

பவுல் தனது இனத்தின் மீது அதிக அன்பு கொண்டவராய் இருந்தார் அதற்கான ஆதாரங்கள் பின்வரும் வேத பகுதிகளை கவனிக்கலாம்:

  • பவுல், யூதர்கள் இயேசுவையும் தங்கள் சொந்தத் தீர்க்கதரிசிகளையும் கொன்றார்கள் என்று எழுதினார் (1 தெச. 2:14-16).
  • பவுல் தன் சுவிசேஷம் யாருக்கும் மனக்கசப்பை ஏற்படுத்தாமல் இருக்க (யூதர்கள் உட்பட) அனைத்து சமரசங்களுக்கும் (compromise) சென்றார் (1 கொரி. 9:19-23; 10:32-33. அப்போ 21:23-26,18:18,16:1-3)
  • பவுல் தனது இனத்தவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று இருதயப்பூர்வமான விருப்பத்தையும் மன்றாட்டையும் கொண்டிருந்தார் (ரோமர் 10:1).
  • பவுல் தனது சகோதரர்களுக்காக கிறிஸ்துவிடமிருந்து சபிக்கப்பட தயாராக இருந்தார் (ரோமர் 9:3, யாத்தி 32:32).
  • பவுல் இஸ்ரவேலை ஒலிவ மரத்தின் வேராகவும், புறஜாதிகளை ஒட்டப்பட்ட கிளைகளாகவும் கண்டார் (ரோமர் 11:16-24).
  • கிறிஸ்துவில் யூதன் இல்லை, கிரேக்கன் இல்லை (கலா. 3:28) என்று பவுல் வலியுறுத்தினார்.
  • இயேசுவும் எருசலேமுக்காக அழுது, அவருடைய மக்கள் தங்கள் மேசியாவால் வரும் இரட்சிப்பை அறிய வேண்டும் என்று ஏங்கினார் (மத். 23:37-39; லூக். 19:41-44).

3. இயேசுவின் கண்ணோட்டம்: பவுல் கிறிஸ்துவைப் பின்பற்றினார், மேலும் யூத மக்களுக்காக கண்ணீர் விட்டு, தேவனுடைய பூர்வீக மக்கள் தங்கள் மேசியா மூலமாக இரட்சிப்பை அறிய வேண்டும் என்று ஏங்கிய இயேசுவின் மனதை அவர் வெளிப்படுத்தினார் (மத்தேயு 23:37-39; லூக்கா 19:41-44). யூத-எதிர்ப்பு என்பது, ஒரு மரத்தின் வேர்களை எதிரிகள் என்று கருதி வெறுப்பது போன்றது. வேர்கள் இல்லாமல் கிளைகள் இல்லை (கிறிஸ்தவர்கள்). இருக்க முடியாது என்று பவுல் வலியுறுத்தினார், மேலும் அவர் வேர்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்காக ஜெபிக்கவுமே விரும்பினார்.

தொடரும்…….

Bro M.JAYARAJ, 13-11-2025

Credit : The Gospel did Paul and Jesus Agree- Author – Peter Barnes

By admin