ஆதாரம் வசனம்
13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 1 யோவான் 5:13
1.ஒவ்வொருவருக்கும் மரணத்துக்கு பின் நித்திய ஜீவன் பெறுகிறோம் என்று நிச்சயம் பெற்றிருக்க வேண்டும்.
23 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன். தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும். பிலிப்பியர் 1:23
2.விசுவாசத்தால் மட்டும் நாம் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வோம் என்று குருட்டுத்தனமாக இருந்து விட முடியாது.
கடந்த கால மனத்திரும்புதல், அனுபவம் நித்திய ஜீவனை கொடுக்கும். என்று இந்த நிறுபத்தில் எழுதவில்லை.
இரட்சிப்பை பெற்றவர்கள் அவர்களுடைய விசுவாசத்தையும், அவர்கள் தேவன் மீது வைத்திருக்கிற அன்பையும்,நிரூபித்து காட்ட வேண்டும்.
யாக்கோபு தன்னுடைய நிறுபத்தில் அதை பதிவு செய்கிறார் விசுவாசத்துக்கு ஏற்ற கிரியைகள் இருக்க வேண்டும்.
13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 1 யோவான் 5:13இந்த நிறுபத்தில் ஒன்பது விதமான வழிகளை யோவான் பதிவு செய்கிறார்.
1.தேவனுடைய குமாரன் நாமத்தை விசுவாசிப்பது.
15 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். 1 யோவான் 4:15
5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? 1 யோவான் 5:5
17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. மத்தேயு 3:17
16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16
யோவான் 5:18-23 ஓய்வு நாள் கட்டளையை மீறினது (முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.)
1.பிதா செய்ய நினைக்கிறது குமாரன் செய்கிறார் யோவான் 5:19
2.அதை காட்டிலும் பெரிதான அற்புதம் அடையாளங்களை செய்வார் யோவான் 5:20
3.குமாரனும் மரித்தோரே உயிரோடு எழுப்புவார் யோவான் 5:21
4.நியாய தீர்ப்பு செய்யும் அதிகாரத்தை எனக்கு கொடுத்திருக்கிறார் யோவான் 5:225.என்னை கனம் பண்ணாதவன் பிதாவேயும் கணம் பண்ணாதவனாக இருக்கிறான். யோவான் 5:23
தொடரும்…