இயேசுவின் தெய்வீகத்தன்மை-1-The Divinity of Jesus
Introduction- அறிமுகம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து வேதாகமத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பழைய ஏற்பாடு,புதிய ஏற்பாட்டு இந்த இரண்டு பகுதிகளையும் அவருடைய தீர்க்கதரிசனங்களை குறித்து நாம் பார்க்க வேண்டியது அவசியமாகிறது .
பழைய ஏற்பாடு
மனிதர்களை இரட்சிப்பதற்காக ஒரு இரட்சகர் வருவார் என்று பழைய ஏற்பாட்டில் ஏற்கனவே முன்குறித்து தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டிருக்கிறது அப்படி சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவதற்காகவே இயேசு இந்த பூமியிலே வந்தார்.
புதிய ஏற்பாடானது முன் குறித்து சொல்லப்பட்ட அந்த தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் என்பதை விவரித்துச் சொல்வதற்கும் அவராலே இரட்சிப்பு உண்டு என்று மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக புதிய ஏற்பாட்டு அமைந்திருக்கிறது.
இந்த புத்தகத்தை அநேக யூதர்கள் எழுதி இருந்தாலும் இவைகள் பரிசுத்த ஆவியின் உதவியால் எழுதப்பட்டவை என்று உறுதியாக சொல்ல முடியும்.
தீர்க்கதரிசனங்கள் ஒரு காலத்திலும் மனிதனுடைய சித்தத்தினால் உண்டாகவில்லை தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள் 2 பேதுரு 1: 21
நீங்களும் எங்கள் உடனே ஐக்கியம் உள்ளவர்கள் ஆகும்படி நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறது உங்களுக்கும் அறிவிக்கிறோம் எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடு இருக்கிறது. 1 யோவான் 1:3
1.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனுக்குலத்தின் இரட்சிப்புக்காக இந்த பூமியில் தோன்றினார் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இரண்டு புத்தகங்களும் இவைகளைத்தான் வெளிப்படுத்தி காண்பிக்கிறது
2. எனவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு பூமிக்குவரும் வரும்பொழுத அவர் தன்னை பற்றின தீர்க்கதரிசனம் பழைய ஏற்பாட்டு முழுவதிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை எடுத்து விவரிக்கவேண்டியிருந்தது.
3. இயேசுவின் வாழ்க்கையையும் அவருடைய ஊழியமும் அவளுடைய கிருபாதரபலி , தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் .இவைகளெல்லாம் புதிய ஏற்பாட்டில் நமக்கு திருஷ்டாந்தங்களாக செல்லப்படடவைகள் .
1. மத்தேயு எழுதின சுவிசேஷம் புத்தகத்தில் மத்தேயு இயேசுவை இரட்சகராக வந்த மேசியா இவர்தான் என்று வெளிப்படுத்தி காண்பித்து .அவர் மூலம்தான் மக்களுக்கு பரலோகராஜ்யமும், இரட்சிப்பும் கிடைக்கும் என்பதை எழுதியுருந்தார்.
2. மாற்கு சுவிசேஷ புத்தகத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய ஊழியக்காரன் ஆக இந்த பூமிக்கு வந்தார் என்றும், பழைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதல் இவரே என்றும் நம்முடைய பாவங்களுக்காக மரிக்க வேண்டியவர் இவர் என்றும் எழுதி இருப்பார்
3. லூக்கா எழுதின சுவிசேஷம் புத்தகத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்தின் மனுஷகுமாரன் ஆகவும்,அவர் தேவனுடைய பிரதிநிதியாகவும்,அதேவேளையில் உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களின் நோய்களை தீர்க்கும் தேவனாகவும் அவரை வெளிப்படுத்தி காண்பித்தார்.
4. யோவான் எழுதின சுவிசேஷம் புத்தகத்தில் அவரே தேவகுமாரன் என்று அவரை யாரெல்லாம் விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று ஆதாரப்பூர்வமாக எழுதி இருப்பார்.
இயேசு செய்த முக்கியமான அற்புதங்களையும் அந்த அற்புதங்கள் தேவனால் மட்டுமே செய்ய முடியும் என்பதை யோவான் மட்டுமே பதிவு செய்திருப்பார். இந்த நான்கு சுவிசேஷப் புத்தகத்தின் மூலமாகவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தபோது அவர் செய்ய வேண்டிய சில வேலைகள் இருந்தது. அதை அழகாக பதிவுசெய்து இருப்பார்கள்.
தேவனால் முன் உரைக்கப்பட்ட மேசியா என்றும் தன்னை வெளிப்படுத்துதல்
தன்னையே கிருபாதார பலியாக ஒப்புக்கொடுக்கபடுத்தல்
அந்த யோகோவா தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை மனுஷ குமாரனாக அவதரிக்க செய்தல்.
அவர் யூதர்களுக்கு ராஜாவாக,
தீர்க்கதரிசியாக,
ஆசாரியனாக,
நியாப்பிரமானத்தின் நிறைவேறுதலாக,
நியாப்பிரமானத்தையும் ,பலிகளையும் முடிவுக்கு கொண்டுவந்தவராக
உலகத்தின் இரட்சகர் என்பதை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். இயேசு குறித்ததான சுமார் 300க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் வேதாகமத்திலிருந்து சொல்லப்பட்டு இருக்கிறது .
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
எபிரேயர் 13:8
யூதர்களின் பாரம்பரியங்கள்
யூதர்களுக்காக தேவன் கொடுத்த சடங்குகள் மோசே மூலமாக எழுதப்பட்டது அது எல்லாமே மேசியாவை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரியமான சடங்குகள் தான்,
இவைகள் தேவனுக்கு நேராக வழி நடத்தக்கூடியவை மட்டுமேத்தவிர நிரந்தரமானது அல்ல.இதை பவுல் கலத்தியர் புத்தகத்தில் எழுதியிருப்பார்.
இவ்விதமாக, நாம் விசுவாசத்திலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. கலத்தியர் 3:24
கலத்தியர் 3:20-24 வாசிக்கவும்..
அவர்கள் தேவனுக்கு செய்யும் ஆராதனைகளும்,முறைமைகளும் பின்னாளில் இயேசுவே ஜீவ பலியாய் தன்னை ஒப்புக் கொடுக்கப் போகிறார் என்பதற்கு அடையாளமாக சொல்லப்படவைகள்.
ஆனால் யூதர்களுக்கே இது தெரியாது இவைகள் எல்லாம் தேவனுடைய ஞானத்தினால், தேவனால் ஊதி எழுதப்பட்டவைகள். அவர்கள் அதை ஒரு பரம்பரியமாக மட்டுமே கை கொண்டு வந்தார்.
இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பிறகுதான் பரிசுத்த ஆவியை பெற்ற மக்கள் தேவனுடைய ஞானத்தை புரிந்து கொள்ள முடிந்தது. பழையபாட்டில் தேவன் ஏழு விதமான பண்டிகைகளை கொண்டாடும்படி யூதர்களுக்கு கொடுத்திருப்பார்.
1.புளிப்பில்லா அப்பப் பண்டிகை
2.பஸ்கா பண்டிகை
3. முதற்கனிப் பண்டிகை
4. பெந்தெகொஸ்தே பண்டிகை (அ )வரப்பண்டிகை
5. எக்காள பண்டிகை
6.பாவ நிவத்திபண்டிகை
7. கூடாரப் பண்டிகை
இவைகள் எல்லாமே வரபோகும் மேசியாவுக்கு அடையாளமாக சொல்லப்பட்ட பண்டிகைகளும்,தீர்க்கதரிசன வசனங்களாக இருக்கிறது.
தொடரும் …..