TAMIL BIBLE OF MESSIAH https://tamilbibleofmessiah.com Bible Study Tools Sat, 06 Jul 2024 17:27:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 07 # ஆவியின் வரங்கள் https://tamilbibleofmessiah.com/07-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://tamilbibleofmessiah.com/07-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments Sat, 06 Jul 2024 17:27:08 +0000 https://tamilbibleofmessiah.com/?p=250 *வரமாகிய பரிசுத்தஆவியானவர்!*

நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” (அப்.2:38) என்று பேதுரு சொன்ன வாக்கியங்களில் உள்ள, “அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்பதற்கு EasyEnglish என்கிற ஆங்கில மொழிபெயர்ப்பில், *”Then God will give you his gift, which is the Holy Spirit”* (அப்பொழுது தேவன் உங்களுக்கு பரிசுத்தஆவி என்கிற தமது வரத்தைக் கொடுப்பார்) என்று சொல்லப்படுகிறது.

ISV என்கிற ஆங்கில மொழிபெயர்ப்பில், *”Then you will receive the Holy Spirit as a gift”* (அப்போது நீங்கள் பரிசுத்த ஆவியை வரமாகப் பெறுவீர்கள்) என்று சொல்லப்படுகிறது.

BBE என்கிற ஆங்கில மொழிபெயர்ப்பில்,
*”and you will have the Holy Spirit given to you”* (மேலும் உங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவீர்கள்) என்று சொல்லப்படுகிறது.

மெய்யாய் மனந்திரும்பி, முழுகி ஞானஸ்நானம் பெறுகிற ஒவ்வொருவருக்கும் தேவன் தமது ஆவியை வரமாகத் தருகிறார்!

*பரிசுத்தஆவியை வரமாகப் பெறும் வழிகள்!*

1. பிதாவினிடத்தில் கேட்டுப் பெறவேண்டும்!

“நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்” என்று பவுல் சொல்லுகிறதை கவனியுங்கள். (எபேசி.1:13)

இதற்கு நாம் இயேசுவை விசுவாசிக்கும் அந்தத் தருணத்திலேயே ஆவியானவர் நமக்குள் வந்துவிடுகிறார் என்று அர்த்தமல்ல. பவுல் அந்த அர்த்தத்தில் எழுதியிருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில், பவுல் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட மூன்று நாட்களுக்குப் பிறகே ஞானஸ்பெற்று, பரிசுத்த ஆவியையும் பெற்றுக்கொண்டவர். (அப்.9:6-18; 22:6-16)

மேலும், எபேசு சீஷர்களுக்கு பவுல் ஞானஸ்நானம் கொடுக்கும்போதே அல்ல, ஞானஸ்நானம் கொடுத்துவிட்டு,  அவர்கள்மேல் கைகளை வைத்து ஜெபித்தபோதே அவர்கள்மேல் ஆவியானவர் இறங்கினதைக் கண்டவர்.

இப்படியிருக்க, ஒருவர் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போதே, அல்லது ஞானஸ்நானம் பெறும்போதே பரிசுத்தஆவியால் முத்திரைப்போடப்படுகிறார் (ஆவியைப் பெறுகிறார்) என்று பவுல் எழுதியிருக்கமுடியாது.

இப்படியிருக்க, “நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்” என்று பவுல் சொல்லுகிறதை
(எபேசி.1:13), “நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, (ஞானஸ்நானம் பெற்று) விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்” என்று சொல்வதாகப் புரிந்துகொள்வதே சரியாக இருக்கும்.

“விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்”
(மாற்கு 16:16) என்று இயேசுகிறிஸ்து சொல்லுகிறது இங்கு கவனிக்கத்தக்கது.

ஒருவர் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்று, பிதாவினிடத்தில் பரிசுத்தஆவிக்காய் ஜெபிக்கிற நிமிஷத்திலிருந்து எப்போதுவேண்டுமானாலும் தேவன் அவரை தமது ஆவியால் நிரப்பக்கூடும்.

“பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, *பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா”* என்று ஆண்டவர் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது. (லூக்கா 11:13)

அவர் ஞானஸ்நானம் பெற்று, கரையேறி ஜெபித்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றவர். (லூக்கா 3:21,22; மத்.3:16)

2. காத்திருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.

“யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான். *நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.* ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் *என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்* என்று ஆண்டவர் தமது அப்போஸ்தலருக்குக் கட்டளையிட்டார். (அப்.1:4,5)

எருசலேமில் இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்து, பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொண்டார்கள். (அப்.1:12-14; 2:1-4)

பரிசுத்தஆவியைப் பெற பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்பது சரியான உபதேசம் அல்ல. அப்போஸ்தலரும் விசுவாசிகளும் சில நாளுக்குள்ளே அதாவது பத்து நாட்களுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். (அப்.1:4; 2:1-4)

பரிசுத்தஆவியைப் பெற சிலர் சில நாட்கள் காத்திருக்கவேண்டியிருக்கலாம். அனைவருக்கும் இது பொருந்தாது.

3. கைகளை வைக்கும்போது பெற்றுக்கொள்ளக்கூடும்.

ஊழியரோ, விசுவாசியோ கைகளைவைத்து ஜெபிக்கும்போது பரிசுத்தஆவியை சிலர் பெற்றுக்கொள்ளக்கூடும்.

அப்போஸ்தலர் பேதுருவும் யோவானும் சமாரிய விசுவாசிகள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள். (அப்.8:14-17)

விசுவாசியாகிய அனனியா கைகளை வைத்து ஜெபித்தபோதுதான் சவுல் (பவுல்) பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். (அப்.9:10,17,18)

பவுல் எபேசு சீஷர்கள்மேல் கைகளை வைத்தபோதுதான், பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார். (அப்.19:1,6)

4. ஆவியானவர் தாமாக  நிரப்பக்கூடும்!

ஞானஸ்நானத்திற்கு முன்பே, எவரும் கைகளை வைக்காத, சில நாட்கள் ஜெபத்தில் காத்திருக்காத சிலரை, ஆவியானவர் தாமாக  நிரப்பக்கூடும்!

பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்ட கொர்நேலியுவின் வீட்டார், உறவின்முறையார், விசேஷித்த சிநேதிதர் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். (அப்.10:24,44)

“நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்” 
(அப்.10:38) என்று பேதுரு சொன்னதைக் கேட்ட அவர்கள், தேவன் தங்களுக்கும் பரிசுத்தஆவியை கொடுக்கவேண்டும் என்று மனதிற்குள் வேண்டினார்களோ என்னவோ தெரியவில்லை.

“நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா” என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி கட்டளையிட்டார் பேதுரு.
(அப்.10:47,48)

ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்பே பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள், பரிசுத்தஆவியைப் பெற்றப்பின்பு கட்டாயம் ஞானஸ்நானம் பெறவேண்டும்!

ஆவியானவர் தருகிற வரத்தைப் பெறுவதற்கு முன்பு, ஆவியானவரையே நாம் வரமாகப் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம்.

வரமாக வரும் ஆவியானவர், வரங்களை எப்படி தருகிறார் என்று அடுத்துப் பார்ப்போம்!

                (தொடரும்…..) *- காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
           கோயம்புத்தூர்.
               8946050920

Please enable JavaScript in your browser to complete this form.
Name

]]>
https://tamilbibleofmessiah.com/07-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 1
05 # மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்? https://tamilbibleofmessiah.com/05-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/ https://tamilbibleofmessiah.com/05-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/#comments Thu, 04 Jul 2024 01:30:28 +0000 https://tamilbibleofmessiah.com/?p=247 மரணத்துக்கேதுவான பாவத்தை செய்கிறதின் விளைவு !

மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார். யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே. மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
1 யோவான் 5:16
அநீதியெல்லாம் பாவந்தான். என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுண்டு.
1 யோவான் 5:17

தமது வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றின பொல்லாத யூதா (எரே.13:10) ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம் என்று கர்த்தர் எரேமியாவை கேட்டுக்கொண்டார். (எரே.14:11)

“மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது” என்று அவனை நோக்கி சொன்னார். (எரே.15:1)

“அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக்கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன்” என்றார் கர்த்தர். (எரே.14:12)

அவர்கள் தம்மைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தம், தாம் அவர்களின் சத்துருக்கள் மூலமாக நியமித்த அழிவிலிருந்து அவர்களை விடுவிக்கிறதில்லை என்பதில் தேவன் உறுதியாக இருந்தார். (எரே.1:15,16; 14:10; 15:2)

ஜீவனுள்ள மெய்யான தேவனை அறிந்தப்பின்பு, ஜீவனற்றப் பொய்யான தெய்வங்களான விக்கிரகங்களினிடத்தில் திரும்புகிறவர்களுக்காக கிறிஸ்தவ சகோதரர்கள் ஜெபிக்கிற ஜெபங்களை தேவன் கேட்க வாய்ப்பில்லை.

தேவனை மறுதலிப்பதன்மூலம் தங்களுக்கு மரணத்தை (நித்திய அழிவை) தேடிக்கொள்கிற அவர்களுக்காய் கிறிஸ்தவர் ஜெபிக்கிறதில் பிரயோஜனமில்லை.

ஒருவேளை அவர்களே தங்கள் தவறை உணர்ந்து தேவனிடத்தில் மனந்திரும்பினால் அவருடைய இரக்கத்தைப் பெறும் வாய்ப்பு உண்டு.

மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத்தூஷணங்களும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
மாற்கு 3:28
ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.
மாற்கு 3:29

எந்தப் பாவத்தையும் தூஷணத்தையும் செய்கிறவர்கள் மன்னிக்கப்படக்கூடும். ஆனால், பரிசுத்தஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்லுகிறவர்களுக்கு மரணம் (நரகம்) திண்ணம்!

எவனாகிலும் தமக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும் என்றும், ஆனால் பரிசுத்தஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை என்றும் ஆண்டவர் எச்சரிக்கிறார். (மத்.12:32)

தாம் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளை துரத்துகிறதை, பெயெல்செபூலைக்கொண்டிருந்து, பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறதாக சொன்ன வேதபாரகரை அவர் இவ்விதமாய் எச்சரித்தார். (மாற்கு 3:22)

பரிசுத்தஆவியால் செய்யப்படும் அற்புதங்களை பிசாசினால் செய்யப்படுவதாக பரியாசம்பண்ணுகிற கிறிஸ்தவர்களுக்கு மரணம் (நரகம்) நிச்சயம்!

கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் என்பது உண்மைதான். (மத்.24:24)

ஆகிலும், கர்த்தருக்கு பயந்த சாட்சியுள்ள ஊழியர்கள் மற்றும் விசுவாசிகள், பரிசுத்தஆவியின் வல்லமையினால் செய்யும் அற்புத அடையாளங்களையும் பிசாசுகளால் செய்வதாகச் சொல்லுகிறவர்கள் மரணம் அடைவது (நரகம் செல்வது) உறுதி!

இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களுக்காய் கிறிஸ்தவச் சகோதரர் ஜெபிக்கிற ஜெபங்கள் பயனற்றதாகிவிடும்.

சரீர மரணத்தை உண்டாக்கும் பாவங்களை செய்கிற (கிறிஸ்தவர்களை) தேவன் தப்புவிக்கும்படி நாம் ஜெபிக்கிறதும் பயனற்றது என்று யோவான் சொல்லுகிறதாகத் தோன்றுகிறது.

புகைப்பிடித்தல், போதை வஸ்துக்களைப் பயன்படுத்துதல் சரீரத்தை கெடுக்கும் என்று அறிந்திருந்தும், அவைகளை தொடர்ந்து பயன்படுத்தி, சாவுக்கேதுவான வியாதியை வருவித்துக்கொள்ளுகிற கிறிஸ்தவர்களுக்காய் நாம் ஜெபிக்கிறதினால், அவர்கள் மரணத்துக்குத் தப்புவார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.

கொலைபாதகத்தை செய்து மரணதண்டனை பெற்றவர்களுக்காகவும், தகாத உறவினால் உயிர்கொள்ளி நோயை வருவித்துக்கொண்டவர்களுக்காகவும் ஜெபிக்கிறதினால், அவர்களுக்கு பலன் உண்டாகுமா என்று தெரியவில்லை.

“மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்” என்று யோவான் சொல்லுகிறது இங்கு கவனிக்கத்தக்கது. (1 யோவான் 5:16)

சரீர மரணத்துக்கு ஏதுவான பாவத்தை செய்கிறவர்கள் தங்கள் மரணத்திற்கு முன்பு தங்கள் பாவத்திற்காய் உண்மையாய் தேவனிடத்தில் மனந்திரும்பினால், நித்திய மரணத்துக்குத் தப்பலாம்!

  • க. காட்சன் வின்சென்ட்
    (Biblical Teaching Ministry)
    கோயம்புத்தூர்.
    8946050920
Please enable JavaScript in your browser to complete this form.
Name
]]>
https://tamilbibleofmessiah.com/05-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/feed/ 3
04 # மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்? https://tamilbibleofmessiah.com/04-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/ https://tamilbibleofmessiah.com/04-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/#comments Thu, 04 Jul 2024 01:24:25 +0000 https://tamilbibleofmessiah.com/?p=245 சபை கூடிவருதலை விட்டுவிடுகிறதின் விளைவு !

மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து,
எபிரேயர் 10:24
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
எபிரேயர் 10:25
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
எபிரேயர் 10:26
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
எபிரேயர் 10:27

அன்புள்ளவர்களாகவும் நற்கிரியை செய்கிறவர்களாகவும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவே நாம் சபையாகக் கூடிவருகிறோம்.

தேவன் தமது சொந்த இரத்தத்தை கொடுத்து தங்களை சபையாக்கின சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, போராட்டங்கள், நிந்தைகள், உபத்திரவங்களினிமித்தம் தைரியத்தைவிட்டு, பின்வாங்கி (எபிரே.10:32-39), சபை கூடிவருதலை மனப்பூர்வமாய்ப் விட்டுவிடுகிறவர்கள்: மன்னிக்கப்பட வாய்ப்பிராமல், கோபாக்கினைக்குரியவர்களாகிறார்கள்!

தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தங்களைப் பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிற பாவத்தை செய்கிற இவர்கள், கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரராயிருக்கிறார்கள்! (எபி.10:29).

அன்பு நற்கிரியையும் உடைய கிறிஸ்துவின் சாயலாக தாங்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பை தவறவிட்டுவிடுகிற இவர்கள், கிறிஸ்துவுடன் நித்தியத்தில் இருக்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள்!

ஒருமுறை தேவனுடைய வெளிச்சத்திற்கு வந்தும், பரலோகத்திலிருந்து வரும் நல்ல விஷயங்களை அவர்கள் அறிந்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய செய்தி எவ்வளவு நல்லது என்பதை கற்றுக்கொண்டிருந்தும், எதிர்கால உலகம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை அறிந்திருந்தும், மறுதலித்துப்போகிறவர்கள்: தேவனுடைய குமாரனை மீண்டும் சிலுவையில் அறைவது போன்ற காரியத்தை செய்து, மற்றவர்கள் பகிரங்கமாக கிறிஸ்துவை இகழ்வதற்கு காரணமாகிறபடியால், மீண்டும் கிறிஸ்துவிடம் திரும்பி வர யாரும் அவர்களுக்கு உதவமுடியாது. (எபிரே.6:4-6)

தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்தும், தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கு முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலம் தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருந்து சுட்டெரிக்கப்படுவது போலவே, தேவனுடைய கிருபையை வீணடிக்கிறவர்களின் முடிவும் இருக்கும்!
(எபிரே.6:7,8)

சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். (எபிரே.3:12)

நாம் ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். (எபிரே.3:14)

தேவனுடைய சபை ஐக்கியத்தை எக்காரணம் கொண்டும் ஒரு கிறிஸ்தவர் விட்டுவிடக்கூடாது.

தேவனுடைய சபை ஐக்கியத்தை புறக்கணிப்பது தேவனையே புறக்கணிப்பதாகும்!!

  • க. காட்சன் வின்சென்ட்
    (Biblical Teaching Ministry)
    கோயம்புத்தூர்.
    8946050920
Please enable JavaScript in your browser to complete this form.
Name
]]>
https://tamilbibleofmessiah.com/04-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/feed/ 2
03# மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்? https://tamilbibleofmessiah.com/03-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/ https://tamilbibleofmessiah.com/03-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/#comments Thu, 04 Jul 2024 01:19:05 +0000 https://tamilbibleofmessiah.com/?p=243 வேசித்தனம்பண்ணுவதின் விளைவு!

வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும். வேசித்தனஞ்செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.
1 கொரிந்தியர் 6:18

வேசித்தனத்திற்கு விலகியோடும்படி பவுல் விசுவாசிகளையே எச்சரிக்கிறார்.

மறுபடியும் பிறந்தவர்களுக்கும் வேசித்தனம்பண்ணுவதற்கான சோதனையும், வாய்ப்புகளும் உண்டு! விலகியோடினால் மட்டுமே நாம் நம்மை காத்துக்கொள்ளமுடியும்.

தன் சொந்த மனைவி அல்லது கணவன் அல்லாதவருவருடன் தவறான தொடர்பு வைத்துகொள்ளுகிறவர், தன் சொந்த சரீரத்துக்கு எதிராக தவறு செய்கிறார்.

ஒரு மனிதன் தான் செய்யும் மற்ற பாவங்களை தன் சரீரம் இல்லாமல் செய்கிறான். அதாவது, தனது சரீரத்துக்கு வெளியே செய்கிறான். அதாவது அவன் செய்யும் மற்ற பாவங்கள் அவனது சரீரத்துக்கு வெளியே உள்ளது.

அதனால் அவன் செய்யும் மற்ற பாவங்கள் அவனுடைய சரீரத்தை பாதிக்காது. ஆனால் பாலியல் ஒழுக்கக்கேடானக் காரியங்களைச் செய்பவர்கள் தங்கள் சொந்த சரீரத்துக்கு பாதிப்பை உண்டாக்குகிறார்கள்.

நாம் ஒழுக்கக்கேடான செயல்களை செய்வதற்கல்ல, தமக்கு பிரியமானக் காரியங்களைச் செய்ய பயன்படுத்துவதற்கே தேவன் நமக்கு சரீரத்தை கொடுத்திருக்கிறார். (1 கொரி.6:13)

நமது சரீரங்கள் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்கள் (பாகங்கள்) என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவயவத்தை (பாகத்தை) நாம் ஒரு விபச்சாரியின் அல்லது விபச்சாரகனின் சரீரத்தின் பாகமாக்கக்கூடாது. (1 கொரி.6:15)

நமது சரீரங்கள் கிறிஸ்துவுக்கு சொந்தமானது என்பதை நாம் நினைவில் கொண்டு, கிறிஸ்துவுக்குச் சொந்தமான நமது சரீரத்தை ஒரு விபச்சாரி அல்லது விபச்சாரகனுடைய சரீரத்துடன் சேர்க்காதபடிக்கு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

எவனொருவன் தன் சரீரத்தை விபச்சாரியுடன் சேர வைக்கிறானோ அவன் அந்த விபச்சாரியுடன் ஒரே சரீரமாகிறான். (1 கொரி.6:16)

மறுபடியும் பிறந்தவன் தன் மனைவியல்லாத ஸ்திரியுடன் தவறான தொடர்புகொண்டு ​​அவளுடன் ஒரே சரீரமாகும் பாவத்திற்கு விலகவேண்டும்.

நமது இஷ்டப்படி பயன்படுத்துவதற்கு நம் சரீரம் நமக்கு சொந்தமானதல்ல. பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயமாக இருக்கும்படிக்கு, தேவன் அதை நமக்கு கொடுத்திருக்கிறார். (1 கொரி.6:19)

தேவன் நம்மை சொந்தமாக வாங்கியிருக்கிறார் என்பதை உணர்ந்து, அவரோடிசைந்து, அவருடனே ஒரே ஆவியாயிருந்து,
தேவனுக்கு உடையவைகளாகிய நமது சரீரத்தினாலும் நமது ஆவியினாலும் நாம் அவரை மகிமைப்படுத்தவேண்டும். (1 கொரி.6:17,20)

தேவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை எழுப்பியிருக்கிறார். தமக்கு பிரியமானதை செய்து, தம்மை மகிமைப்படுத்தும் நம்முடைய சரீரத்தையும் தமது வல்லமையினாலே எழுப்புவார். (1 கொரி.6:14)

தேவனுக்கு பிரியமானதை செய்து அவரை மகிமைப்படுத்தப் பயன்படுத்தப்படாமல், பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் சரீரங்கள் கிறிஸ்துவின் வருகையில் எழுப்பப்படப்போவதில்லை!

“அவர்களில் (இஸ்ரவேலரில்) சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள். அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக” என்று பவுல் எச்சரிக்கிறதை (1 கொரி.10:8) மறுபடியும் பிறந்தவர்கள் கவனித்து நடக்கவேண்டும்.

கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குகிறதுபோல (1 கொரி.5:6) முழு சபையும் இடறிவிடக்கூடாது என்பதற்காக, தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருந்த விபச்சாரகனான ஒரு விசுவாசியை பவுல் கொரிந்து சபையைவிட்டு வெளியேற்றுகிறார். (1 கொரி.5:1-5)

“(விசுவாச) சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரானாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது. அப்படிப்பட்டவனோடேகூடப் புசிக்கவுங்கூடாது” என்று சபையரை அவர் எச்சரிக்கிறார். (1 கொரி.5:11)

“ஒருவிசை இரட்சிக்கப்பட்டவன் என்ன பாவம் செய்தாலும், அவன் தேவனுடைய பிள்ளையாகவே இருக்கிறான். அவனுடைய முக்காலப் பாவங்களையும் கிறிஸ்து மன்னித்துவிட்டதனால், அவன் செய்கிற பாவங்கள், பாவங்களாகவே கருதப்படாது. அதற்கான தண்டனையும் அவனுக்கு கிடையாது” என்று உபதேசிக்கிற பிசாசின் உபதேசிகளிடம் கிறிஸ்தவர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இரட்சிக்கப்பட்டவன் செய்கிற பாவங்கள், பாவமாகவே கருதப்படுகிறதில்லை என்றால், விபச்சாரம் செய்த விசுவாசியை பவுல் ஏன் சபைக்கு புறம்பாக்கவேண்டும்?

விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரானாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருக்கிற விசுவாசியுடன் கலந்திருக்கவோ, புசிக்கவோ கூடாது என்று பவுல் ஏன் சபையாருக்கு கட்டளையிடவேண்டும்?

ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து, விசுவாசிகளோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்களும், விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்களாயிருந்து, உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகளான கள்ளப்போதகர்களிடம்
(2 பேதுரு 2:1,13,14), மறுபடியும் பிறந்தோர் கவனமாக இருக்கவேண்டும்!

             (தொடரும்....)
  • க. காட்சன் வின்சென்ட்
    (Biblical Teaching Ministry)
    கோயம்புத்தூர்.
    8946050920
Please enable JavaScript in your browser to complete this form.
Name
]]>
https://tamilbibleofmessiah.com/03-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/feed/ 2
02# மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்? https://tamilbibleofmessiah.com/02-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/ Thu, 04 Jul 2024 01:15:00 +0000 https://tamilbibleofmessiah.com/?p=241 வேதத்தை புரட்டுவதன் விளைவு?

வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
தீத்து 3:10
அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.
தீத்து 3:11

உண்மையான சத்தியத்திற்கு மாறுபட்டக் காரியங்களைக் கற்பிக்கிறவன், அதாவது பொய்யான விஷயங்களைக் கற்பிப்பதன் மூலம், மற்றவர்கள் உண்மையான போதனைகளை நம்புவதை விட்டவிடுவதற்கு காரணமாகிறவன், தனக்குத்தானே ஆக்கினைத்தீர்ப்பை வருவித்துக்கொள்ளுகிறான்.

பொதுவாக வேதத்தை அறிந்திருக்கிறவனே, அதை புரட்டி போதிக்கமுடியும். அப்படியானால் அவன் மறுபடியும் பிறந்த அனுபவமுள்ளவனாக இருந்து, சத்தியத்தை மறுதலிக்கிறவனாக இருக்கக்கூடும். அவன் வேதத்தைப் புரட்டுவதற்கு காரணம் அறியாமை என்பதைவிட, ‘ஆதாயம்’ என்பதே சரியாக இருக்கும்!

இப்படிப்பட்டவன் குணப்படுவதற்கு தமது பிள்ளைகளின் வழியாய் தேவன் இரண்டொருதரம் வாய்ப்பளிக்கிறார்.

ஒருவன் வேதத்தைப் புரட்டினால், அதாவது ஒரு வசனம் எதைப்பற்றிப் பேசவில்லையோ அதை பேசுகிறதாகக் கற்பித்தால், தேவன் அவனை நியாயந்தீர்ப்பார் என்று தேவபிள்ளைகள் எச்சரிக்கவேண்டும். அவன் நிறுத்தவில்லையென்றால், மீண்டும் ஒரு முறை எச்சரிக்கலாம். அதற்கு பின்பும் அவன் வேதப்புரட்டை நிறுத்தவில்லையென்றால், இனி அவனுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில், அவன் தனக்கு நரகாக்கினையை உறுதிப்படுத்திக்கொண்டான்!

தனது பொருளாசையினால் தந்திரமான வார்த்தைகளால் அநேக ஜங்களைத் தனக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவதற்காய், கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணுகிற அவன், தேவன் தனக்கு அளிக்கும் வாய்ப்பை மறுக்கிறதினால், நரகத்துக்குத் தப்புவதற்கு வாய்ப்பே இல்லை. (2 பேதுரு 2:1-3)

தனது சொந்த ஆதாயத்திற்காய் தேவனுடைய வார்த்தைகளுக்கு தனது சொந்த அர்த்தங்களைக் கற்பித்து, தன்னை திருத்திக்கொள்வதற்கு சத்தியத்தை சரியாய் போதிக்கிறவர்கள் மூலம் தேவன் கொடுத்த எச்சரிப்பைக் கண்டுகொள்ளாத அவன், இனி திருந்த வாய்ப்பே இராதபடிக்கு, சத்தியத்தைப் பேசுகிறவர்களை விட்டு தனிமைப்படுத்தப்படுகிறான்.

அவன் இனி சத்தியத்தினிடத்திற்குத் திரும்பி, பரலோகம் வருவதற்கு வாய்ப்பே இல்லை!

வேதத்தை முறையாய், சரியாய் கற்றறியாமல் (2 தீமோ.3:14,15), நிதானமாய் பகுத்து போதியாமல் (2 தீமோ.2:15), கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் கலப்பின்றி பேசாமல் (2 கொரி.2:17), நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்கிறவர்கள் (ரோமர் 16:17,18) தங்களை திருத்திக்கொள்வது நல்லது!

மறுபடியும் பிறந்தவன் வேதப்புரட்டிலிருந்து மறுபடியும் சத்தியத்திற்கு திரும்பாவிட்டால், அவனுக்கு மறுமை வாழ்வு மறுக்கப்படுவது நிச்சயம்!

             (தொடரும்....)
  • க. காட்சன் வின்சென்ட்
    (Biblical Teaching Ministry)
    கோயம்புத்தூர்.
    8946050920
Please enable JavaScript in your browser to complete this form.
Name
]]>
01# மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்? https://tamilbibleofmessiah.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5/ https://tamilbibleofmessiah.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5/#comments Tue, 02 Jul 2024 16:45:47 +0000 https://tamilbibleofmessiah.com/?p=232 மறுபடியும் பிறந்த ஒருவர் எப்படிப்பட்டப் பாவத்தை செய்கிறார், எவ்வாறு செய்கிறார் என்பதை பொருத்தே, அதற்கான பின்விளைவுகளும் இருக்கும்.

பிறருக்கு இடறலை உண்டாக்குவதன் விளைவு!

அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.
மத்தேயு 18:1

பரலோகராஜ்யத்தில் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் சீஷர்களுக்கு இருந்தது. ஒவ்வொருவரும் மற்றவர்களைவிட பெரியவர்களாக இருக்கவேண்டும் என்று எண்ணினர்.

அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து: அதைக்குறித்து கேட்டேவிட்டார்கள்! .

இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று அவர்களை எச்சரித்தார்.
(மத்.18:2,3)

“பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான்” என்று கேட்கிற அவர்கள், தங்கள் மனமேட்டிமையினால் பரலோகத்தில் பிரவேசிக்கிறதற்கு தகுதியற்றவர்களாய் இருக்கிறதை ஆண்டவர் காண்பித்தார்.

“ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்” என்று அவர்களுக்கு ஆலோசனையும் சொன்னார். (மத்.18:4,5)

எளிய சிந்தையுள்ளவர்களாய் இருப்பதும், எளியவர்களை நமக்கு சமமாக ஏற்றுக்கொள்வதுமே பரலோக வாழ்வுக்கான தகுதி என்பதை அவர்களுக்கு ஆண்டவர் உணர்த்தினார்.

தம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிற சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும் என்றும் கடுமையாக எச்சரிக்கிறார் (மத்.18:6)

தம்மிடத்தில் விசுவாசம் வைக்கிற எளியவர்களை அவமதிப்பதின் மூலம் அவர்கள் தம்மைவிட்டு பின்வாங்கும்படி செய்கிற, அல்லது எளிய சிந்தையுள்ள விசுவாசிகள் தங்களைப்போலவே மேட்டிமையானவர்களாக மாற வழிகாட்டுகிற தமது சீஷர்கள் நரகாக்கினையடைவார்கள் என்று எச்சரிக்கிறார் இயேசு.

எளியவர்களை தங்களுக்கு சமமாக ஏற்றுக்கொள்ளாத, தங்களை பிறரிலும் மேன்மையானவர்களாக எண்ணுகிற மறுபடியும் பிறந்தவர்கள், பிறரை தங்களிலும் மேன்மையானவர்களாய் எண்ணத்தக்கதாக மனத்தாழ்மையுள்ளவர்களாய் (பிலிப்.2:3) மாறாமலேயே மரித்துப்போனால், அவர்கள் நரகாக்கினை அடைவது நிச்சயம்!

“இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” என்கிற எச்சரிக்கையை கிறிஸ்தவர்கள் கவனித்து நடக்கவேண்டும். (மத்.18:7)

கிறிஸ்தவர் சிலரின் முரண்பாடான வாழ்வினால் கிறிஸ்துவைவிட்டு சிலர் பின்வாங்கிப்போகும் நிகழ்வுகள் நடக்கக்கூடிய ஒன்றுதான். ஆகிலும் ஒருவரின் பின்மாற்றத்திற்கு காரணமாகும் கிறிஸ்தவருக்கு கொடிய நரகதண்டனை உண்டு என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

கிறிஸ்துவின் சுபாவத்திற்கு முரணான சுபாவத்திலிருந்து உண்மையாய் மனந்திருப்புகிறவர் நரகாக்கினைக்கு தப்பலாம்!

             (தொடரும்....)
  • க. காட்சன் வின்சென்ட்
    (Biblical Teaching Ministry)
    கோயம்புத்தூர்.
    8946050920
Please enable JavaScript in your browser to complete this form.
Name
]]>
https://tamilbibleofmessiah.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5/feed/ 2
06 # ஆவியின் வரங்கள் https://tamilbibleofmessiah.com/06-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Thu, 27 Jun 2024 18:30:14 +0000 https://tamilbibleofmessiah.com/?p=194

நமக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறார். (கலாத்.3:5)

கேட்கிறவர் அறிந்திருக்கிற வெவ்வேறு பாஷைகளிலே பேசும் வரத்தை தந்தருளுகிறார். (அப்.2:4-11)

புதிய ஏற்பாட்டு ஊழியர் மற்றும் விசுவாசிகளை தீர்க்கதரிசனம் உரைக்க வைக்கிறார். (யோவேல் 2:28,29; 1 கொரி.12:10,11; 14:1,24,25,29,30; அப்.11:27,28; 19:6; 21:3,4,10,11)

உலகத்திலும் தனிநபருக்கும் எதிர்காலத்தில் சம்பவிக்கப்போகிறதை அறிவிக்கிறார். (அப்.11:27,28; 20:22,23; 21:4,10,11; 1தீமோ.4:1)

சபைக்கான ஆலோசனை நிருபங்களை எழுதுகிறதில் ஊழியர்களை வழிநடத்துகிறார். (அப்.15:24-30)

சபை நிர்வாகத்திற்கான தகுதியைத் தருகிறார். (அப்.6:1-6)

சபையை தமது ஆறுதலோடு பெருகப்பண்ணுகிறார். (அப்.9:31; 11:24)

சபையோடு பேசி எச்சரிக்கிறார்.
(எபிரே.3:1-8; வெளிப்.2:7,11,17,29; 3:1,6,13,22)

கள்ளப்போதகர்களை சபைக்கு அடையாளம் காட்டுகிறார். (1தீமோத்.4:1-3)

நாம் தேவனுடைய சிநேகிதராக மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறார். (யாக்.4:4,5)

கிறிஸ்துவினிமித்தம் விசாரணையை எதிர்கொள்ளும் அவருடைய சீஷரிலிருந்து பேசுகிறார். (மத். 10:17-20; மாற்கு 13:11)

நாம் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்படும்போது. நம்மால் மகிமைப்படுகிறார். (1 பேதுரு 4:14)

பரலோக தரிசனத்தைக் கொடுக்கிறார். (அப்.7:55)

தேவன் வாக்களித்ததைப் பெறும்படி மேன்மேலும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்க பலப்படுத்துகிறார். (ரோமர் 15:13; கலாத்.5:5)

இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு சபையை ஆயத்தப்படுத்துகிறார். (வெளிப்.22:17,20,21)

கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம் என்று  திருவுளம்பற்றுகிறார்
(வெளிப்.14:13)

இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பின ஆவியானவர், தாம் வாசமாயிருக்கிறவர்களின் சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பிக்கப்போகிறார். (ரோமர் 8:11; 1கொரி.15:45,46; 2 கொரி.3:6)

ஆவிக்குரிய வரங்களை தரும் ஆவியானவரையே வரமாகப் பெறுவதைக்குறித்து இப்பொழுது பார்ப்போம்.

*க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
        கோயம்புத்தூர்.
            8946050920

                (தொடரும்…..)

Please enable JavaScript in your browser to complete this form.
Name
]]>
05 # ஆவியின் வரங்கள் https://tamilbibleofmessiah.com/05-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Thu, 27 Jun 2024 18:23:46 +0000 https://tamilbibleofmessiah.com/?p=192

பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே கிறிஸ்து என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறதைக்குறித்து நமக்குச் சாட்சிசொல்லுகிறார். (எபிரே.10:12-18)

கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினார். (ரோமர் 8:11; 1பேதுரு 3:18)

காவலிலுள்ள ஆவிகளுக்கு பிரசங்கிக்க கிறிஸ்துவுக்கு உதவினார். (1பேதுரு 3:19,20)

இயேசுவை பிதாவாகிய  தேவன் எழுப்பினதற்கும் அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினதற்கும் சாட்சியாக இருக்கிறார்.
(அப்.5:30-32)

இயேசுகிறிஸ்துவைக்குறித்த வெளிப்பாட்டைக் கொடுக்கிறார். (1கொரிந்.2:6-15; எபேசி.1:17; எபேசி.3:5,6)

இயேசுகிறிஸ்துவைக்குறித்து நமக்கு சாட்சி கொடுக்கிறார்.
(யோவான் 15:26; 1 யோவான் 5:6; வெளிப்.19:10)

இரட்சிப்பைக்குறித்து சாட்சி கொடுக்கிறார். (எபிரே.2:4)

நாம் இரட்சிக்கப்படுகிறதற்கேதுவாக கிறிஸ்துவை விசுவாசிக்கும் கிருபையை அளிக்கிறார். (எபிரே.10:29; எபேசி.2:8)

சந்தோஷமாய் வசனத்தை ஏற்றுக்கொள்ளச் செய்கிறார். (1தெச.1:6,7)

இயேசுகிறிஸ்துவினால் கேட்டுக்கொள்ளப்பட்டு, பிதாவினால் கொடுக்கப்பட்டிருக்கிறார். (மாற்கு 1:8; லூக்கா 11:13; யோவான் 7:38,39; 14:6,26; 15:26; 20:22; அப்.2:33)

நம்முடனே வாசம்பண்ணி நமக்குள்ளே இருக்கிறார். (யோவான் 14:17; 1 கொரி.3:16,17; 6:19; 2 கொரி.13:14; 1பேதுரு 2:4,5)

கிறிஸ்து நம்மில் நிலைத்திருக்கிறதற்கு ஆதாரமாயிருக்கிறார்.
(1 யோவான் 3:24; 4:13)

ஆவிக்குரிய ஜீவியத்தை ஆரம்பித்துவைக்கிறார். (கலாத்.3:3)

ஆவிக்குரிய ஜீவியத்தை புதுப்பிக்கிறார். (ஏசாயா 32:15-18; எசே.11:19; 18:31; 36:26,27; 37:14; ரோமர் 2:29; 1கொரி.6:11; எபேசி.4:22,23; தீத்து 3:5)

மாம்ச இச்சைகளை அழித்து நித்திய வாழ்வுக்கு உதவுகிறார். (அப்.8:13; கலாத்.5:16-18,25)

நாம் பரலோகத்திற்கு போவதற்கான அத்தாட்சியாயிருக்கிறார். (யோவான் 3:5,6,8; ரோமர் 8:1; 8:2,4-6,13; 2 கொரி.1:22; 5:5; கலாத்.6:8,18; எபேசி.1:13,14; 2:18; 4:30; பிலிப்.1:19)

தாம் நம்மை நடத்துவதன் மூலம் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்கிற நிச்சயத்தை அளிக்கிறார். (ரோமர் 8:14-16; கலாத்.4:6)

உள்ளான மனுஷனை வல்லமையாய்ப் பலப்படுத்துகிறார்.
(எபேசி.3:16)

தேவனை தொழுதுகொள்வதற்கு உதவிசெய்கிறார். (யோவான் 4:23,24; எபேசி.5:18-20; பிலிப்.3:3)

தேவனுடைய பிள்ளைகளை இயேசுவின் சாயலாக மாற்றுகிறார். (1 கொரி.12:13; 2 கொரி.3:3,18)

தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் (இயேசுவைப் போன்றவனாகவும்), எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, உபதேசிக்கவும், கடிந்துகொள்ளவும், சீர்திருத்தவும், நீதியைப் படிப்பிக்கவும் பிரயோஜனப்படுத்த வேதவாக்கியங்களை அருளியிருக்கிறார்.
(2 தீமோத்.3:16,17)

எல்லாவற்றையும் தேவஜனங்களுக்குப் போதித்து, இயேசு அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார்.
(யோவான் 14:26)

சத்தியஆவியாகிய அவர், நம்மை சகல சத்தியத்திற்குள்ளும்  நடத்துகிறார். (யோவான் 16:13; 1பேதுரு 1:22)

அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை நமக்கு அறிவிக்கிறார். (யோவான் 16:14)

இயேசுவினுடையதில் எடுத்து நமக்கு அறிவிப்பதினால் அவரை மகிமைப்படுத்துகிறார். (யோவான் 16:14)

நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்டிருக்கிற “ஆரோக்கியமான வசனங்களின் சட்டம்” என்கிற நற்பொருளை காத்துக்கொள்ள உதவுகிறார். (2 தீமோத்.1:13,14)

நமது பலவீன நேரங்களில் நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், தேவனுடைய சித்தத்தின்படியே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
(ரோமர் 8:26,27)

எந்தச் சமயத்திலும் மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் விழித்துக் கொண்டிருக்க செய்கிறார். (எபேசி.6:18; யூதா 1:20)

ஆவியின் கனிகளை கொடுக்க செய்கிறார். (கலாத்.5:22-25) ஒருவரிரொருவர் அன்புகூர செய்கிறார். (கொலோ.1:8)

நாம் உள்ளூரிலும், உள்நாடு முழுவதிலும், அயல்நாட்டிலும், உலகம் முழுவதிலும் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சிகளாயிருக்க பலப்படுத்துகிறார். (அப்.1:8; 2:32; 3:15; 4:33)

தேவனுக்கு ஊழியஞ்செய்ய நம்மை வல்லமையுள்ளவர்களாக்குகிறார்.
மற்றவர்களிடம் அன்புகொள்ளவும், நம் சொல்லையும் செயலையும் கட்டுப்படுத்தவும் நமக்கு உதவுகிறார். (2தீமோத்.1:7)

பழமையான எழுத்தின்படியான ஊழியத்திலிருந்து புதுமையான ஆவியின்படியான  ஊழியத்திற்கு நடத்தினார். (ரோமர் 7:6; 2 கொரி.3:6-17)

இயேசுவானவரின் அப்போஸ்தலருக்குப் அவர்மூலமாக கட்டளையிட்டார். (அப்.1:1)

ஊழியத்திற்கு அழைத்து பிரித்தெடுத்து நியமிக்கிறார். (அப்.13:1,2,4; 20:28)

ஜனங்களுக்கு தேவவார்த்தையை கொண்டுசெல்ல அனுப்புகிறார். (ஏசாயா 48:16; 59:21; அப்.8:29-39; 10:19; 11:12; 13:4; 28:27; 2 கொரி.4:13)

“இயேசு உண்மையிலேயே கர்த்தர்” என்று கூறுவதற்கான நிச்சயத்தைக் கொடுக்கிறார். (1 கொரி.12:3)

மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை (தேவகுமாரன் என்று) அறிக்கையிடப்பண்ணுகிறார். (1 யோவான் 4:2,4)

இயேசுகிறிஸ்துவை தேவகுமாரன் என்று விசுவாசிக்கிற, தேவனால் உண்டானவர்களுக்கு  செவிகொடுக்கத் தூண்டுகிறார். (1 யோவான் 4:6; 5:1)

தேவவசனத்தை தைரியமாய் பேசவைக்கிறார். (அப்.4:8-12,31)

சுவிசேஷ எதிரிகள் எதிர்த்துநிற்கமுடியாத அளவுக்கு பேசும் ஞானத்தை தருகிறார். (அப்.6:9,10)

வசனத்தை சொல்லவேண்டிய இடத்தை வரையறுக்கிறார். (அப்.16:6-12; அப்.19:21)

ஊழியரின் பேச்சையும் பிரசங்கத்தையும்  உறுதிப்படுத்துகிறார்.
(1 கொரி.2:5)

புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, ஊழியரை பலப்படுத்துகிறார்.
(ரோமர் 15:18,19; கலாத்.3:5; 1தெச.1:5)

*க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
        கோயம்புத்தூர்.
            8946050920

                (தொடரும்…..)

Please enable JavaScript in your browser to complete this form.
Name
]]>
04 # ஆவியின் வரங்கள் https://tamilbibleofmessiah.com/04-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Thu, 27 Jun 2024 18:21:08 +0000 https://tamilbibleofmessiah.com/?p=190

*வரங்களை அளிக்கும் ஆவியானவர்!*

இவைகளையெல்லாம் (வரங்களையெல்லாம்) அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.
(1 கொரி.12:11)

வரங்களை கொடுக்கும் ஆவியானவர் யார் என்று நாம் சற்று ஆராயலாம்.

*திரித்துவ தேவனில் மூன்றாவது ஆள்தத்துவம்!*

பரிசுத்த ஆவியானவர் திரித்துவ தேவனில் மூன்றாவது ஆள்தத்துவம் (personality) ஆவார்.

இவரை பிதாவுக்கும் குமாரனுக்கும சற்று குறைந்தவர் என்று மதிப்பிடுவது தவறாகும். “கர்த்தரே ஆவியானவர்” என்று பவுல் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது.
(2 கொரி.3:17)

ஒன்றான மெய்தேவன் ஒரே நேரத்தில் பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார், செயல்படுகிறார் என்பதை நாம் அறியவேண்டும். (மத்.3:16,17)

பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்  செயல்களில் வித்தியாசமுள்ளவராயிருப்பினும், மதிப்பில் மூவரும் சமமாக இருக்கிறார்கள். (மத்.28:19) இதனால் கிறிஸ்தவ மார்க்கத்தில் மூன்று தேவர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துவிடக்கூடாது.

“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்கிற வசனம் (ஆதி.1:1) மூலபாஷையில்,  “ஆதியிலே *தேவர்கள்* வானத்தையும் பூமியையும் *சிருஷ்டித்தார்* என்று இருக்கிறது.

‘தேவர்கள்’ என்று இருக்கும்போது, ‘சிருஷ்டித்தார்கள்’ என்றுதானே முற்றுபெறவேண்டும்? ஏன் ‘சிருஷ்டித்தார்’ என்று முற்றுபெறுகிறது?

ஒரே தேவன் பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று மூவராக இருக்கிறார் அல்லது பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்கிற மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்
என்று இதற்கு அர்த்தம் ஆகும். (1யோவான் 5; 7)

*ஆவியானவரின் கிரியைகள்!*

தேவஆவியானவர் எங்கும் நிறைந்திருக்கிறார். (சங்.139:7-10)

வானம் பூமி சிருஷ்டிப்பிலும் (ஆதி.1:1-3), மனுஷனுடைய சிருஷ்டிப்பிலும் (ஆதி.1:26-28; யோபு 33:4) பிதாவாகிய தேவனுடனும் வார்த்தையாகிய தேவனுடனும் முக்கியப் பங்காற்றினார்.

ஆசரிப்புக்கூடார வேலையை சிறப்பாகச் செய்யவும் (யாத்.31:3-5; 35:30-33), தேவனுக்கு ஊழியஞ்செய்யத்தக்கதாக ஆரோனுக்கு பரிசுத்த வஸ்திரங்களை உண்டாக்கவும் (யாத்.28:3) ஞானத்தின் ஆவியாக செயல்பட்டார்.

எகிப்து தொடங்கி கானான் வரைக்கும் இஸ்ரவேலர்
நடுவில் இருந்து, அவர்களை பாதுகாத்து பராமரித்தார்.
(ஏசாயா 63:12,14; நியா.3:10; 6:34,35; 11:29; 13:25; 15:14; 1 சாமு.11:1-11; ஏசாயா 59:19)

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசே (எண்.11:17,25), யோசுவா (எண்.27:18-21), ஒத்னியேல் (நியா.3:9,10), கிதியோன் (நியா.6:34; உபா.34:9), சிம்சோன் (நியா.13:25; 14:5,6,19; 15:14); யெப்தா  (நியா.11:29), சவுல் (1 சாமு.10:6,10; 11:6,7) தாவீது (1 சாமு.16:13; 2 சாமு.23:2), எலியா (1இரா.18:12), எலிசா (2 இரா.2:15,16) போன்றோரில் தங்கியிருந்து, தேவசித்தம் செய்ய அவர்களை வழிநடத்தினார்.

முதலாவது கட்டப்பட்ட எருசலேம் தேவாலயத்தின் மாதிரியை தாவீதுக்கு கட்டளையிட்டார். (1 நாளா 28:11-13) சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் திரும்பவும் தேவாலயத்தை கட்டிமுடிக்க பலப்படுத்தினார். (ஆகாய் 2:5; சகரியா 4:6-9) புதிய ஏற்பாட்டில் தேவஜனங்களை தேவாலயமாகக் கட்டிக்கொண்டுவருகிறார். (1கொரி.3:16,17; 6:19,20; எபேசி.2:21,22; 1 பேதுரு 2:4,5)

நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாக இருக்கிறார். (ஏசாயா 28:6)

செம்மையான வழியிலே நடத்துகிறார். (சங்.143:10; நீதி.1:23)

பரிசுத்தப்படுத்துகிறார். (ஏசாயா 4:3; ரோமர் 15:15; 1கொரிந்.6:11; 2தெச.2:13; தீத்து 3:5; 1பேதுரு 1:2)

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளுக்குள் இருந்து ஜனங்களோடே பேசினார். (எண்.24:1-9; 1 சாமு.10:6,10,11; 2 சாமு.23:2; எசேக்.11:5; மீகா 3:8; சகரியா 7:12; 2 பேதுரு 1:21)

தீர்க்கதரிசிகள் அல்லாத சிலரில் இறங்கி, அவர்களை தீர்க்கதரிசனம் சொல்லவைத்தார். (எண்.11:27,28; 1 சாமு.10:6,10; 19:20,23; 1 நாளா.12:18; 2 நாளா.15:1-8;  20:14-17; 24:20; அப்.1:16-20; சங்.41:9; 55:12-15)

சொப்பனங்களுக்கும் தரிசனங்களுக்கும் விளக்கம் கொடுக்கச் செய்தார். (தானி.4:8-27; 5:1-29)

விலங்குகள், பறவைகள் மற்றும் ஊரும் பிராணிகளை தேவன் குறித்த இடத்தில் கூட்டிச் சேர்க்கிறார். (ஏசாயா 34:6-16; ஆதி.7:2,3,8,9)

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளையும் (எசேக்.2:2; 3:12,14,24; 8:1-18; 11:1-4,24; 37:1; 43:5) புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலரையும் (யோவேல் 2:28; 2 கொரி.12:1-4; வெளிப்.1:10; 4:2; 21:10) தமக்குள்ளாக்கி தரிசனங்களைக் காணசெய்தார்.

முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று தெரியப்படுத்தினார்.
(எபிரே.9:7,8)

எலிசபெத்தை நிரப்பி, மரியாளையும், இயேசுவையும் குறித்த வெளிப்பாட்டைக் கொடுத்தார். (லூக்கா 1:41-45) சகரியாவை நிரப்பி, இயேசுகிறிஸ்து மற்றும் யோவான்ஸ்நானனை குறித்த வெளிப்பாட்டைக் கொடுத்தார். (லூக்கா 1:67-79)

யோவான்ஸ்நானனை தாயின் வயிற்றிலிருக்கும்போதே  நிரப்பி, எலியாவைபோல பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படி, இயேசுவுக்கு முன்னே நடக்க பலப்படுத்தினார். (லூக்கா 1:15,17)

தீர்க்கதரிசிகள் (1பேதுரு 1:11,12), தாவீது (மத்.22:43),  சிமியோன் (லூக்கா 2:25-27) போன்றோருக்கு இயேசுகிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாட்டைக் கொடுத்தார்.

இயேசுகிறிஸ்து மரியாளுக்குள் உருவாகக் காரணமாயிருந்தார். (மத்.1:18,20; லூக்கா 1:35)

இயேசுகிறிஸ்துவில் ஞானத்தையும் உணர்வையும், ஆலோசனையையும் பெலனையும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளுகிறவராக தங்கியிருந்தார். ( ஏசாயா 11:1,2; மத்.3:16;)

பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு இயேசுவை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனார்.
(மத்தேயு 4:1) பின்பு தம்முடைய பலத்தினாலே அவரை கலிலேயாவுக்குத் திரும்பிப் கொண்டுபோனார்.
(லூக்கா 4:14)

புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்த அவர்மேல் அமர்ந்திருந்தார். (ஏசாயா 42:1-3; மத்.12:15-21) அவர்மேல் இருந்து, சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கச் செய்தார். (ஏசாயா 61:1-3; லூக்கா 4:18,19; யோவான் 3:34)

அவருக்குள் இருந்து நன்மைகளையும் அற்புதங்களையும் செய்யவைத்தார். (மத்.12:22-28; அப்.10:38)

கிறிஸ்து தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்க ஆயத்தம் செய்தார். (எபிரே.9:14)

*க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
        கோயம்புத்தூர்.
            8946050920

                (தொடரும்…..)

Please enable JavaScript in your browser to complete this form.
Name
]]>
03 # ஆவியின் வரங்கள்  https://tamilbibleofmessiah.com/03-%e0%ae%86%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ Thu, 27 Jun 2024 18:17:27 +0000 https://tamilbibleofmessiah.com/?p=187

லீஸ்திராவிலே தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்திருந்தவனை பவுல் நடக்கசெய்ததை ஜனங்கள் கண்டு, *தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள்* என்று சத்தமிட்டு சொல்லி, *பர்னபாவை யூப்பித்தர் என்றும்,* பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் *அவனை மெர்க்கூரி என்றும்* சொன்னதோடுமட்டுமல்லாமல், பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டு வந்து, ஜனங்களோடேகூட *அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தபோது,*
அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்;
*”மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே,* நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, *வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று* உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்” என்று தங்களைத் தாழ்த்தி, அவர்களிடம் தேவனை உயர்த்தியதை இன்றைய அற்புதப் பிரசங்கிகள் மனதில் பதித்துக்கொள்வது அவசியம்! (அப்.14:8-15)

“நாங்கள் பல ஆயிரங்கள் செலவுசெய்து வரங்களைப் பெறுவதற்கான பயிற்சி எடுத்தோம், எங்களுக்கு வரம் கிடைக்க ஜெபித்த வரம்பெற்ற விசேஷித்த ஊழியருக்கு நாங்கள் விசேஷித்தக் காணிக்கை கொடுத்தோம், ஆகையால் நாங்களும் வரங்கள் மூலமாக பணம் சம்பாதிக்கவே செய்வோம்” என்கிறவர்கள், அதிக ஆக்கினையடையவேண்டியிருக்கும்!

தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நினைத்த மனந்திரும்பின மந்திரவாதி சீமோன், பணத்திற்காக வரங்களை விற்பனை செய்யும் நோக்கமுள்ளவனாக இருந்திருக்கக்கூடும்!

இதனாலேயே “உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது” என்று பேதுரு அவனை சபித்திருக்கக்கூடும்! (அப்.8:21-23)

தங்கள் சுய லாபத்திற்காகவும் சுய மகிமைக்காகவும்
தமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைக்கிறவர்களையும், பிசாசுகளைத் துரத்துகிறவர்களையும், அநேக அற்புதங்களைச் செய்கிறவர்களையும் நோக்கி: “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்” என்று அந்நாளில் ஆண்டவர் சொல்லநேரிடும்! (மத்.7:22,23)

“அதிலுள்ள *தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்,* கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள், *திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்,* அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்” என்று யூதாவின் தீர்க்கதரிசிகளைக்குறித்து தேவன் மிகவும் வேதனைப்பட்டார். (எசேக்.22:25)

தாங்கள் சொன்ன தீர்க்கதரிசனங்களுக்காக அவர்கள் ஜனங்களிடம் திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொண்டார்கள்! ஜனங்களும் அவர்களின் போலி தீர்க்கதரிசனத்திற்காக திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் கொடுக்க முன்வந்தார்கள்!!

பேதுரு மற்றும் பவுல் செய்த அற்புதத்தை இன்று ஒரு ஊழியக்காரர் செய்துவிட்டால், அவர் தன்னை எப்படியெல்லாம் விளம்பரப்படுத்திக்கொள்வார் என்பதையும், அதைவைத்து எத்தனைக் கோடிகள் சம்பாதிப்பார் என்பதையும், சுகம் பெற்றுக்கொண்டவர்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்ப்பார் என்பதையும் சற்று யோசித்துப்பாருங்கள்!

“வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், *இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்”* என்று ஆண்டவர் தமது சீஷர்களுக்கு கட்டளையிடுகிறார். (மத்.10:8)

ஆவிக்குரிய வரங்கள் இலவசமாய் பெறப்படவும், இலவசமாய் பயன்படுத்தப்படவும் வேண்டும் என்பதே வேதசட்டம்!

எல்லாருக்கும் பயமுண்டாகத்தக்கதாய் அநேக அற்புத அடையாளங்களை செய்த அப்போஸ்தலரிடம் (அப்.2:43) பிச்சைப்போடுவதற்கு வெள்ளியும் பொன்னும் (பணம்) இல்லை! (அப்.3:6)

தங்கள் வரங்களை அவர்கள் விற்பனை செய்திருந்தால் இஸ்ரவேலின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் அவர்கள் இடம் பிடித்திருப்பார்கள்!

காசு இல்லாத அவர்களிடம் இயேசு இருந்தார்! (அப்.3:6) இன்று காசு அதிகம் உள்ள அப்போஸ்தலரிடம் இயேசு தென்படுகிறாரா என்று தேடிப்பாருங்கள்!!

ஆவியின் வரங்கள் ஒவ்வொன்றை குறித்தும் ஆராய்வதற்கு முன்பாக, வரங்களை கொடுக்கும் ஆவியானவரைக்குறித்து நாம் ஆராய்ச்சி செய்வது அவசியம்.

*க. காட்சன் வின்சென்ட்*
(Biblical Teaching Ministry)
        கோயம்புத்தூர்.
            8946050920

                (தொடரும்…..)

Please enable JavaScript in your browser to complete this form.
Name
]]>